கடைசி ஸ்டேஜ்தான் ரொம்ப முக்கியம்.. −253 டிகிரி செல்சியஸில் நடக்கும் அதிசயம்.. சந்திரயான் 3 திக்திக்!
சென்னை: இன்று விண்ணில் ஏவப்பட உள்ள சந்திரயான் 3 விண்கலத்தை ஜிஎஸ்எல்வி ராக்கெட் மார்க் 3 விண்ணுக்கு கொண்டு செல்கிறது.
இந்த சந்திரயான் அடுத்த ஒன்றரை மாதம் நிலவுக்கு செல்லும் என்பதை தாண்டி, தற்போது ஜிஎஸ்எல்வி மார்க் 3 இதை சரியாக வட்டப்பாதையில் நிறுத்துவதே பெரிய டாஸ்க்தான். அதிலும் கடைசி ஸ்டேஜ் மிகவும் கடினமானது ஆகும்.

இந்தியாவின் ராக்கெட்டுகளில் பாகுபலி ராக்கெட் என்று அழைக்கப்படும் ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் அதாவது Geosynchronous Satellite Launch Vehicle Mark III ராக்கெட். இதை இப்போது எல்விஎம் 3 என்று அழைக்கிறார்.
இது ஒரு 3 ஸ்டேஜ் ராக்கெட் ஆகும். முதலில் இரண்டு சாலிட் பூஸ்டர். அதாவது இரண்டு திட எரிபொருள் கொண்ட பூஸ்டர்கள் இருக்கும். அதன்பின் திரவ நிலையில் இருக்கும் இரண்டாவது எஞ்சின் இருக்கும். முதல் இரண்டு திட திரஸ்ட் பூஸ்டர்கள் தொடக்கத்தில் ராக்கெட் மேலே செல்வதற்கு பயன்படும்.
நீங்கள் ராக்கெட்டின் கீழே இரண்டு பக்கமும் பார்க்கும் கூம்பு போன்ற வடிவம். இவைதான் முதலில்
எரிந்து மேலே செல்ல உதவும் . இரண்டாவது கட்டத்தில் குறிப்பிட்ட வட்ட பாதையில் ராக்கெட்டை கொண்டு செல்லும் இரண்டாம் கட்ட பயணத்திற்கு திரவ பூஸ்டர் பயன்படுத்தப்படும். இது முழுக்க முழுக்க திரவ எஞ்சின் ஆகும்.

இது ராக்கெட்டை இன்னும் மேலே கொண்டு செல்ல உதவும். அதன்பின் கடைசியாக கிரையோஜெனிக் ஸ்டேஜ் எனப்படும் கடைசி கட்ட ஸ்டேஜ் எஞ்சின் இயங்கும். கிரையோஜெனிக் என்பதும் திரவ எஞ்சின்தான். ஆனால் இது திரவ ஹைட்ரஜன் மற்றும் திரவ ஆக்சிஜன் மூலம் இயங்க கூடியது. இரண்டையும் மிக குளிரான வெப்பநிலைக்கு கொண்டு சென்றால் மட்டுமே அது திரவமாக மாறும்.
அது திரவமாக உள்ள நிலையிலேயே அதை எரிபொருளாக பயன்படுத்துவதே கிரையோஜெனிக் ஆகும். இது மட்டும் 28 டன் எடைகொண்டது . இது முழுக்க முழுக்க இந்திய தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட கிரையோஜெனிக் எஞ்சின் ஆகும். இந்த தொழில்நுட்பத்தை உலக நாடுகள் இந்தியாவிடம் கொடுக்க மறுத்து வந்தது.
ஆனால் இந்தியா சொந்த முயற்சியில் இதை உருவாக்கி 8 ஆண்டுகளுக்கு முன் வெற்றிபெற்றது. 1 டன் எடைக்கு மேல் உள்ளே பொருட்களை மேலே கொண்டு செல்ல கிரையோஜெனிக் எஞ்சின் அவசியம் ஆகும். நம்மிடம் உள்ள கிரையோஜெனிக் மூலம் 4 ஆயிரம் கிலோ கிராம் எடையை கூட சுமந்து செல்ல முடியும். இதற்காக -183 °C (-297.4 °F; 90.1 K)க்குக் கீழே இருக்கும் திரவ ஆக்ஸிஜன் மற்றும் -253 °C (-423.4 °F; 20.1 K)க்குக் கீழே திரவ ஹைட்ரஜன் ஆகியவை பயன்படுத்தப்படுகிறது.

ராக்கெட் செம சூடாக செல்லும் போது இதை திரவமாக வைத்து இருப்பது மிக கடினமான வேலை. அதனால்தான் கிரையோஜெனிக் எஞ்சின் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்தியாவின் அணு ஆயுத சோதனைக்கு பின் உலக நாடுகள் இந்த தொழில்நுட்பத்தை நம்மிடம் தரவில்லை. இப்போது அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், இந்தியா, பிரான்ஸ் மற்றும் சீனா ஆகிய நாடுகளில் மட்டுமே கிரையோஜெனிக் ராக்கெட் என்ஜின்கள் உள்ளன.
இது சரியாக வேலை செய்தால்தான் இன்று சந்திராயன் 3 விண்கலத்தை முதலில் பூமிக்கு மேலே நிலைநிறுத்த முடியும்.












Click it and Unblock the Notifications