சென்னையில் திடீர் பேய் மழை கொட்டி தீர்த்தது ஏன்?.. மேக வெடிப்பு காரணமா? வானிலை ஆய்வு மையம் விளக்கம்
சென்னை: நேற்று இரவு முதல் இன்று காலை வரை எதிர்பாராதவிதமாக சென்னையை பெரு மழை, வெள்ளம் புரட்டிப் போட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் நகரில் பல்வேறு இடங்களிலும் மழை நீர் தேங்கியுள்ளதுவடசென்னை மற்றும் தென் சென்னையின் அனைத்து பகுதிகளிலும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் பெருமளவில் தேங்கிக் கிடக்கின்றது.

எச்சரிக்கை ஏதும் விடுக்கவில்லை
செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. சென்னையில் விடிய, விடிய கொட்டி தீர்த்த கனமழை வானிலை மையமே எதிர்பார்க்காதது. தமிழகத்தின் பல பகுதிகளில் கன மழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்திருந்த சென்னை வானிலை ஆய்வு மையம் சென்னையில் பேய் மழை பெய்யும் என எச்சரிக்கை ஏதும் விடுக்கவில்லை.

வானிலை ஆய்வு மைய தலைவர் விளக்கம்
ஆனாலும் சென்னையில் பேய் மழை கொட்டி தீர்த்ததற்கு என்ன காரணம்? என்று தெரியாமல் மக்கள் குழம்பி உள்ளனர். சென்னையில் திடீர் கனமழை கொட்டியது ஏன்? என்பது குறித்து தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்தர் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

குறுகிய காலத்திலேயே மழை
சென்னைக்கு நேற்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்படவில்லை . திருவள்ளூர், காஞ்சிபுரம்,செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு மட்டுமே கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. . ஆனால் சென்னையில் குறுகிய காலத்திலேயே அதிக கனமழை பதிவாகியது. இரவு 10 மணி வரை 3 செ.மீ மழையும், 1 - 1.45 மணி வரை 6 செ.மீ மழையும்,5 - 6 மணிவரை 7 செ.மீ மழையும் பதிவாகியது.

மேக வெடிப்பு காரணமா?
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 23 செ.மீ மழை பதிவாகியது. மிகக் குறுகிய கால வானிலை மாற்றத்தை கணிப்பது கடினம். நேற்று காலையில் நாங்கள் வானிலை தகவல் கொடுக்கும்போது இது தெரியவில்லை. சில வானிலை மாற்றங்களை சில மணி நேரம் முன்பாகத்தான் கணிக்க முடியும். சென்னையில் பெரு மழைக்கு மேக வெடிப்பு காரணமில்லை. ஆனால் மேக வெடிப்பு போன்று கனமழை பெய்துள்ளது என்று வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்தர் கூறியுள்ளார்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications