"யாரும் தலையிடாதீங்க".. ஸ்டாலின் ஏன் அப்படி சொல்றாரு.. அப்படி என்னதான் இருக்கு அந்த லிஸ்ட்டில்??
திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிட ஏன் தாமதமாகிறது
சென்னை: அப்படி என்னதான் இருக்கிறது அந்த திமுக வேட்பாளர் லிஸ்ட்டில்? ஏன் இன்னும் வெளியாகவில்லை? வேறு ஏதாவது இடியாப்ப சிக்கலில் திமுக உள்ளதா? என்ற சந்தேகங்கள் எழுந்தபடியே உள்ளன.
இந்த முறை தேர்தலில் அதிமுகவும் சரி, திமுகவும் சரி படுஜாக்கிரதையாக காய்களை நகர்த்தி வருகின்றன.. ஆட்சியை தக்க வைக்க எடப்பாடியாரும், 10 வருட ஆட்சியை பிடிக்க ஸ்டாலினும் ரொம்பவே மெனக்கெட்டு வருகின்றனர்.
இதில், அதிமுக கொஞ்சம் வேகம் எடுத்துவிட்டது.. பிரச்சாரத்திற்கு கிளம்பியதில் இருந்து உத்தேச பட்டியல்வரை திமுகவை முந்திக் கொண்டுவிட்டது..

திமுக
இப்போது தொகுதி பட்டியலையும் வெளியிட்டுவிட்டு, அது தொடர்பான பஞ்சாயத்தையும் பேசி தீர்த்து வருகிறது. ஆனால், திமுகவோ கிணற்றில் போட்ட கல் மாதிரியே உள்ளது.. மார்ச் 10-ம் தேதி திமுக தலைவர் வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.. அதற்காக முக்கிய நிர்வாகிகள் சிலர் சென்னையை நோக்கி சென்று வந்தபடியே இருந்தனர்.

தாமதம்?
பிறகு. நேற்று வேட்பாளர் லிஸ்ட் வெளியாகும் என்றார்கள்.. ஆனால், வரவில்லை.. இன்றைக்கு வரும் என்றார்கள்.. இதுவரை காணோம்.. ஏன் இந்த தாமதம்? நடப்பதை எல்லாம் பார்த்தால், தற்போதைய கள நிலவரத்தையும் பார்த்தால், திமுகதான் பலம் பொருந்திய கட்சியாக உள்ளது. வெளிவரும் கருத்து கணிப்புகளும் திமுகவுக்கு சாதகமாகவே இருக்கின்றன. அப்படி இருந்தும் திமுக ஏன் இப்படி தாமதம் செய்கிறது?

பட்டியல்
முன்பெல்லாம் அப்படி இல்லை.. கலைஞர் இருக்கும்போதுகூட வேட்பாளர் பட்டியல் குறித்த பல யூகங்கள் முன்கூட்டியே வட்டமடிக்கும்.. ஒவ்வொரு வேட்பாளரையும் பார்த்து பார்த்து தேர்ந்தெடுப்பார் கலைஞர்.. ஆனால், அவர் லிஸ்ட் வெளியிடுவதற்கு முன்பேயே, அந்த கட்சியில் உள்ளவர்கள் யார் யார்? தொகுதிகள் யாருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன என்பது குறித்து ஓரளவு அனுமானிக்கப்பட்டுவிடும். அது போல இப்போது இல்லை.

அதிருப்தி
அதுமட்டுமல்ல, வேட்பாளர் லிஸ்ட்டில் எப்படியாவது தாங்களும் இடம்பெற்றுவிடுவது என்ற சூட்சுமத்தை திமுகவின் முக்கிய தலைவர்கள் கற்று வைத்திருந்தனர்.. ஆனால், இந்த முறையும் இதுவும் இல்லை.. தலைகீழாக தண்ணீர் குடித்தும் பலருக்கு எதிர்பார்த்த சீட் கிடைக்கவில்லை என்றே செய்திகள் கசிந்து வருகின்றன.

தொகுதிகள்
ஒருவேளை கூட்டணி கட்சிகள் ஏதாவது முரண்டு பிடித்து கொண்டிருக்கின்றனவா என்று தெரியவில்லை.. காங்கிரசுக்கு 25 தொகுதிகள் தந்தாகிவிட்டது.. அப்படியானால், தொகுதி பிரச்சனைகள் ஏதாவது கூட்டணிக்குள் எழுந்து வருகின்றனவா என்று தெரியவில்லை.. திருமாவளவனுக்கு தரப்பட்ட தொகுதிகளில் ஒன்றிரண்டு அதிருப்திக்கு உள்ளாகியிருப்பதாகவும் செய்திகள் கசிந்தன.. அதனால் ஏதாவது தாமதமாகி வருகிறதா என்றும் புரியவில்லை. அல்லது அதிமுகவின் தொகுதி பட்டியலை பார்த்ததும், தங்கள் லிஸ்ட்டில் ஏதாவது மாற்றம் செய்து வருகிறார்கள் என்றும் உறுதியாக சொல்ல முடியவில்லை.

தலையிடாதீங்க
ஒரு மூத்த தலைவர் வேட்பாளர் பட்டியல் பற்றி ஸ்டாலினிடம் கேட்டாராம்.. அதற்கு, இதை பத்தியெல்லாம் கேட்காதீங்க.. இதுல தலையிட வேணாம்.. நான் அப்பா மாதிரி கிடையாது.. முதன்முதலா நேரடியாக சந்திக்க போற தேர்தல்.. என்னை நான் நிரூபிச்சாகணும்.. யாரை எங்கே நிறுத்தணும்னு முழுசா அறிந்துதான் நிறுத்த போகிறேன்" என்றாராம். இந்த அளவுக்கு சீக்ரெட்டாக அந்த வேட்பாளர் லிஸ்ட் இருக்கிறதென்றால், அது என்னவென்று பார்த்தே ஆக வேண்டும் என்பதே தமிழக மக்களின் ஒரே ஆர்வமாக இருக்கிறது.. பார்ப்போம்..!












Click it and Unblock the Notifications