ஸ்டிரைட்டா "மேட்டருக்கு" வந்த குஷ்பு.. குடியரசு தலைவரிடமே கேள்வி எழுப்பிய துணிச்சல்.. டென்ஷனில் பாஜக
ஜனாதிபதியிடமே குஷ்பு கேள்வி எழுப்பி ட்வீட் பதிவிட்டுள்ளார்
சென்னை: குடியரசுத் தலைவரிடம் குஷ்பு ஒரு கேள்வி எழுப்பியுள்ளார்.. இது தொடர்பாக ஒரு ட்வீட்டும் பதிவிட்டுள்ளார்.. மோடி, அமித்ஷா உட்பட எல்லாரும் அமைதியாக இருக்கும்போது, குஷ்பு மட்டும் ஏன் இப்படி கேள்வி கேட்டுள்ளார்? அதுவும் குடியரசுத் தலைவரிடமே கேள்வி கேட்டிருக்கிறாரே என்ற பரபரப்பு அரசியல் உலகை கவ்வியுள்ளது.
மத்திய அரசு சமீபத்தில் கர்நாடகா, ஹரியானா, திரிபுரா, இமாச்சல் பிரதேசம், மிசோரம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்துள்ளது. இதற்கான அறிவிப்பை நேற்று குடியரசுத் தலைவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.
வழக்கமாக மத்திய அரசின் பரிந்துரையின்பேரில்தான் குடியரசுத் தலைவர் ஆளுநர்களை நியமிப்பார். பெரும்பாலான ஆளுநர்கள், மத்தியில் ஆட்சியில் உள்ள கட்சி சார்ந்தவர்களாகவே இருப்பதும் வழக்கம்தான்.

நியமனம்
இந்நிலையில்தான் குஷ்பு குடியரசுத் தலைவரிடம் ஒரு கேள்வி எழுப்பியுள்ளார்.. "குடியரசுத் தலைவர் அவர்களுக்கு ஒரே ஒரு கேள்வி... மரியாதைக்குரிய குடியரசுத் தலைவர் அவர்களுக்கு, எந்தவொரு மாநிலத்திலும் இந்தப் பதவியில் இருக்க தகுதியான ஒரு பெண் கூட உங்களுக்கு தெரியவில்லையா? இந்த பாகுபாடு ஏன்? இது உங்களிடமிருந்து வந்திருப்பதுதான் வேதனையானது.. வலிக்கிறது.. நான் உங்களை புண்படுத்தவில்லை என்று கருதுகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

பரபரப்பு
குஷ்புவின் இந்த ட்வீட் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.. குஷ்பு குடியரசுத் தலைவரை நோக்கி ஏன் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார் என்று தெரியவில்லை. அவர்இந்தக் கேள்வியை மத்திய அரசை நோக்கித்தான் கேட்டிருக்க வேண்டும். பிரதமர் அல்லது உள்துறை அமைச்சரிடம்தான் கேட்டிருக்க வேண்டும். காரணம் ஆளுநர் நியமனம் தொடர்பான பரிந்துரைகள் அங்கிருந்துதான் குடியரசுத் தலைவருக்குப் போகும். ஆனால் அவர்களிடம் கேட்காமல் ஏன் குடியரசுத் தலைவரிடம் குஷ்பு கேட்டார் என்று தெரியவில்லை.

பரிந்துரை
அதேசமயம், மத்திய அரசின் பரிந்துரை குறித்து முதல் முறையாக, அதாவது பாஜகவில் சேர்ந்த பிறகு பகிரங்கமாக விமர்சித்து கேள்வி கேட்டுள்ளார் குஷ்பு. இதுவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசியலில் பெண்களுக்கான முக்கியத்துவம் குறைவு..

பெண்கள் பங்களிப்பு
ஆண்களின் ஆதிக்கமே பிரதானமாக இருக்கும் தேர்தல் அரசியலில், பெண்களின் பங்களிப்பு குறைவாகவே இருந்தாலும், வாய்ப்புக் கிடைத்த பெண்கள் தங்களுக்கான பணிகளில் மெச்சத்தக்க சாதனைகளை செய்திருக்கின்றனர் என்பதை மறுக்க முடியாது.. அதில் குஷ்புவையும் தவிர்க்க முடியாது. ஆனால், தலைமை பொறுப்புகளை பெண்களுக்கு வழங்குவதில், பாலின சமத்துவ வேறுபாடுகள் இருந்து கொண்டுதான் இருக்கிறது.. அந்த வகையில் குஷ்புவின் பேச்சு, வாஸ்தவம்தான்..!

பதவி?
இதையே இன்னொரு வகையிலும் பார்க்க வேண்டி உள்ளது.. திமுக, காங்கிரஸில் குஷ்பு கடுமையாக உழைத்தாலும் எதிர்ப்பார்த்த அளவுக்கு அங்கு வளரமுடியவில்லை... அதனால், பாஜகவில் சேரும்போதே, பெரும் பதவிகளை வாங்கிவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்..

குஷ்பு
பாஜகவில் இணைந்ததுமே, ஒருவேளை ஆளுநர் பதவியை இவருக்கு பாஜக மேலிடம் ஒதுக்குமோ என்று ஒரு தகவலும் பரபரத்தது.. அதற்கேற்றார்போல, வானதிக்கும் தேசிய பதவி கிடைத்துவிடவும், குஷ்புக்கு இங்கு ரூட் கிளியர் என்றே கணிக்கப்பட்டது.. கடைசியில் முக்கிய பதவிகள் எதுவுமே தரப்படாமல், எம்எல்ஏ தேர்தலில் மட்டுமே சீட் தரப்பட்டது..

சேப்பாக்கம்
அதிலும் இஸ்லாமியர்கள் வாக்குகள் நிறைந்த சேப்பாக்கத்தை விட்டுவிட்டு, திமுகவின் கோட்டையான ஆயிரம் விளக்கு பகுதியில் குஷ்பு களமிறக்கப்பட்டார்.. இதுவே அவருக்கு அப்செட்தான்.. சொந்த முயற்சியில் குஷ்பு பாடுபட்டு வாக்கு சேகரித்தும் தோல்வியையே சந்தித்தார்.. பாஜக ஒதுக்கிய அந்த எம்எல்ஏ சீட்டும் இப்படி சோதனையில் முடிந்துவிட்டது.. ஆக, இந்த ஒட்டுமொத்த கடுப்பிலும், அதிருப்தியிலும்தான் குஷ்பு, இப்படி ஒரு கேள்வியை ஸ்டிரைட்டாக குடியரசுத் தலைவரிடம் எழுப்பியிருக்கிறாரோ என்ற கூடுதல் சந்தேகமும் நமக்கு வலுவாக எழுந்து வருகிறது.
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம்












Click it and Unblock the Notifications