Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வெள்ள நிவாரணம் வங்கியில் கொடுக்கப்படாமல்.. ரேஷன் கடைகளில் நேரடியாக தரப்படுவது ஏன்? இதுதான் காரணம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை; தமிழ்நாட்டில் வெள்ள நிவாரணம் ரேஷன் கடைகளில் கொடுக்கப்படுகிறது. இதற்கு பின் முக்கியமான காரணம் உள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு அதிகாரிகள் முக்கிய சில தகவல்களை வெளியிட்டு உள்ளனர்.

மழை வெள்ளம் பாதிப்புகள் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கையை எடுக்கவில்லை என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு வைத்துள்ளார். மழை வெள்ள பாதிப்புகளை ஆராய்ந்த மத்திய அரசு குழு தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவித்திருந்த நிலையில் மத்திய நிதி அமைச்சர் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

Why TN government giving Tamil Nadu governments Rs.6000 relief fund in Ration shop instead of banks?

டெல்லியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி அளித்த போது, தென்மாவட்ட வெள்ளப் பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது. ஒருநாள் முழுவதும் டெல்லியில் இருந்து I.N.D.I.A கூட்டணி கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், போகிறபோக்கில் சந்தித்துக்கொள்ளலாம் என்ற தோரணையில் பிரதமர் மோடியை இரவில் சந்தித்தார். என் மக்களை நான் பார்க்க வேண்டும் என்று கூட்டணியினரிடம் சொல்லிவிட்டு, 'என் மண் என் மக்கள்'தான் முக்கியம் என்று முதலமைச்சர் சென்றிருக்க வேண்டாமா?

ரூ4,000 கோடி செலவு செய்திருக்கிறோம். என்ன மழை வந்தாலும் சென்னைக்கு ஒன்றும் ஆகாது' என ஒரு தமிழ்நாடு அமைச்சர் பேசினார். ஆனால், சென்னையில் வெள்ளம் வந்த பிறகு, 42% தொகை மட்டுமே செலவு செய்தோம் என்கிறார். வானிலை ஆய்வு மையம் துல்லியமாக முன்னறிவிப்பு செய்யவில்லை என்று குற்றம்சாட்டுபவர்கள், ஏன் ரூ4,000 கோடி பற்றி தவறான தகவலை கொடுத்தார்கள்?

ரூ.6,000 நிவாரணத் தொகையை வங்கிக்கணக்கு மூலம் அளிக்கலாமே; ஏன் ரொக்கமாக வழங்குகிறீர்கள்? ரூ.6,000 ரொக்கமாக வழங்கியதற்கு பதில் வங்கியில் செலுத்தினால் வெளிப்படைத்தன்மை இருக்கும். ஏன் அந்த வெளிப்படைத்தன்மை இல்லை, என்று அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

நிவாரண நிதியை ரொக்கமாக தருவது ஏன்?: தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத்தொகை வங்கி கணக்கில் நேரடியாக போடப்படும் நிலையில் வெள்ள நிவாரணம் மட்டும் ரேஷன் கடைகளில் கொடுக்கப்படுகிறது. இதற்கு பின் முக்கியமான காரணம் உள்ளது.

நிறைய ரேஷன் அட்டைதாரர்களுக்கு வங்கி கணக்கு இல்லை, பெரும்பாலான ஏடிஎம்கள் வேலை செய்யவில்லை என்று புகார்கள் வந்த வண்ணம் உள்ளன, எனவே ரொக்கமாக வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

அதேபோல் வங்கி கணக்கில் கொடுத்தால் அதற்கான விவரங்களை பெற வேண்டும். ஓடிபி மூலம் சரிபார்க்க வேண்டும்,. நிறைய ரேஷன் அட்டைதாரர்களுக்கு வங்கி கணக்கு இல்லை என்பதால் புதிதாக உருவாக்க வேண்டும். அதோடு இல்லாமல்.. வங்கியில் பணம் போட்டால் மினிமம் பேலன்ஸ் என்று பணம் எடுத்துக்கொள்ளப்படும். இந்த மினிமம் பேலன்ஸ் பிரச்னையை சரி செய்ய வேண்டும் என்பதற்காகவே நேரடியாக கைகளில் பணம் கொடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

நிவாரண தொகை: தமிழ்நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட கனமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களைச் சார்ந்த வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக வழங்கிட ரூ.1487 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்காக ரூ.6,000/- நிவாரணத் தொகை வழங்கும் பணியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சமீபத்தில் தொடங்கி வைத்தார்

அதேபோல் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களுக்கும் ரூ. 6000 நிவாரணம் அறிவிக்கப்பட்டு உள்ளது. கன்னியாகுமரி, தென்காசி மாவட்ட மக்களுக்கு ரூ.1000 வெள்ள நிவாரணம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு அரசு உத்தரவு: இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (17.12.2023) சென்னை, வேளச்சேரி, சக்தி விஜயலட்சுமி நகர், நியாய விலைக் கடை அருகில், மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட கனமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களைச் சார்ந்த வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6,000/- நிவாரணத் தொகை வழங்கும் பணியினை பயனாளிகளுக்கு வழங்கி, தொடங்கி வைத்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+