இது மோசமான அறிகுறி.. டெல்லியில் அடிக்கடி ஏற்படும் நிலநடுக்கம்.. பின்னணியில் இப்படி ஒரு ஆபத்தா?
சென்னை: இன்று காலை 5:36 மணியளவில் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
டெல்லியை மையமாக கொண்டு வட இந்தியா முழுவதும் அதிர்வுகள் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. வடஇந்தியா முழுக்கவே லேசான அதிர்வுகள் உணரப்பட்டதாக நாட்டில் நிலநடுக்க நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கான இந்திய அரசாங்கத்தின் நோடல் ஏஜென்சியான நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

5 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்டு உள்ளது. டெல்லியில் இன்று அதிகாலை திடீர் என்று நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. டெல்லி முதல் ஹரியானா நெடுஞ்சாலை வரை இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. சரியாக 15 நிமிடம் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் என்ன பாதிப்பு ஏற்பட்டது என்று முழு விவரம் வெளியாகவில்லை.
இந்த நிலநடுக்கம் காரணமாக இதுவரை காயங்கள் அல்லது உயிரிழப்புகள் குறித்து எந்த தகவலும் பதிவாகவில்லை. ஜனவரி 23 அன்று, சீனாவின் ஜின்ஜியாங்கில் 80 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திற்குப் பிறகு டெல்லி-என்சிஆர் முழுவதும் வலுவான நடுக்கம் உணரப்பட்டது. அதன்பின் மீண்டும் 3 வாரங்களில் இப்போது நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.
டெல்லியில் கடந்த சில நாட்களாக அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. . ஹரியானா அருகேயும் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் டெல்லியில் வரும் நாட்களில் பெரிய அளவில் நிலநடுக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று புவியியல் வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இப்படி சிறிய சிறிய நிலநடுக்கங்கள் பெரிய நிலநடுக்கத்திற்கு வழிகாட்டுதலாக இருக்கும். அதற்கான அறிகுறியாக இருக்கும் என்று கூறுகிறார்கள்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு, கடந்த ஜனவரி 11-ம் தேதி ஆப்கானிஸ்தானில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்ட பிறகு டெல்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில் லேசான நடுக்கம் உணரப்பட்டது.
நில அதிர்வு மண்டல வரைபடத்தின் உயர் நில அதிர்வு மண்டலத்தில் (மண்டலம் IV) அமைந்துள்ளது.
டெல்லி உள்ளதால் அடிக்கடி நிலநடுக்கத்திற்கு ஆளாகிறது. இப்படி சிறு சிறு நிலநடுக்கங்கள் ஏற்படுவது ஆபத்தானது. டெல்லியில் தொடர் அதிர்வுகள் புவி அடுக்கில் ஏற்படுகிறது. இந்த அதிர்வுகள் பெரிதாக மாறும். இதனால் டெல்லியில் பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் அதிகமாக பூகம்பங்கள் ஏற்படுகிறது. இதன் ரிக்டர் அளவு மிகவும் குறைவாக இருக்கிறது. ஆனால் இது நல்ல செய்தி இல்லை. பொதுவாக ஒரு இடத்தில் பெரிய நிலநடுக்கம் வரும் என்றால் அதற்கு முன் சிறிய நிலநடுக்கம் பல வர வாய்ப்புள்ளது. அதுதான் இப்போது நடக்கிறது. இதே போக்கு தொடர்ந்தால் எதிர்காலத்தில் 6- 6.5 ரிக்டர் அளவு வரை டெல்லியில் நிலநடுக்கம் வர வாய்ப்புள்ளது. ஆனால் இந்த நிலநடுக்கம் எப்போது தாக்கும், எந்த பகுதியில் எல்லாம் தாக்கும் என்று விவரங்கள் வெளியாகவில்லை. டெல்லியில் இதனால் முறையின்றி கட்டப்பட்ட கட்டிடங்கள் அதிக சேதம் அடைய வாய்ப்புள்ளது என்று எச்சரித்துள்ளனர்.
இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக இதுவரை காயங்கள் அல்லது உயிரிழப்புகள் குறித்து எந்த தகவலும் பதிவாகவில்லை.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications