ஈவிகேஎஸ் இளங்கோவனின் அந்த ஒற்றை வார்த்தை- திமுக கூட்டணியில் வேல்முருகனின் அடங்காத ஆவேசம்!
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாளை வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் எம்.எல்.ஏ. பிரசாரம் செய்ய மறுத்த கொள்கை ரீதியான நிலைப்பாடு இப்போது பேசுபொருளாகி இருக்கிறது.
பாமகவில் இருந்து விலகி தமிழக வாழ்வுரிமை கட்சியைத் தொடங்கி பல்வேறு தமிழர் உரிமை சார்ந்த போராட்டங்களை இடைவிடாமல் முன்னெடுத்து வருபவர் வேல்முருகன். கடந்த ஆண்டு சட்டசபை தேர்தலின் போது திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வானார்.

திமுக கூட்டணியில் வேல்முருகன் ஒரு அங்கமாக இருந்து வருகிறார். தமிழ்நாடு சட்டசபையில், கூட்டணி அரசாங்கம் என்பதற்காக மவுனமாக இருக்காமல் தமிழர் நலன் சார்ந்த பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்கிறார்; சட்டசபைக்கு வெளியேயும் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறார். திமுக கூட்டணியில் ஒரு பிரசார பீரங்கியாக திகழ்பவர் வேல்முருகன்.
தற்போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து திமுக கூட்டணியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி அனைத்து கட்சித் தலைவர்களும் சூறாவளி பிரசாரம் செய்தனர். ஆனால் இந்த பிரசாரத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் மட்டும் மிஸ்ஸிங்.
இது தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய வேல்முருகன், தனித் தமிழ்நாடு கோரிய தமிழ்நாடு விடுதலைப் படையில் சிறுவயதிலேயே இணைந்து செயல்பட்டிருக்கிறேன். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை தொடர்ந்து ஆதரிக்கிறேன். அதற்காக வாக்கு அரசியல் ஒன்றை காரணமாக வைத்து தமிழீழத்தில் இனப்படுகொலை செய்த காங்கிரஸ் கட்சிக்கு வாக்கு கேட்க முடியாது. எந்த ஒரு தொகுதியிலும் காங்கிரஸ் கட்சியின் கை சின்னத்துக்கு வாக்களியுங்கள் என நான் பிரசாரம் செய்தது இல்லை. இனியும் அப்படி ஒருபோதும் பிரசாரம் செய்யவும் மாட்டேன். ஈவிகேஎஸ் இளங்கோவன், மனிதாபிமானமற்ற வகையில் கருத்து சொன்னவர். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட போது, மகிழ்ச்சி தருகிறது என்றார் ஈவிகேஎஸ் இளங்கோவன். அவருக்கு கை சின்னத்தில் வாக்கு கேட்க முடியாது என கூறியிருந்தார். அதற்கு முன்னதாக திமுக அரசு மீதும் சில விமர்சனங்களை தொடர்ந்து வேல்முருகன் வைத்து வருகிறார்.
வேல்முருகனின் இத்தகைய நிலைப்பாட்டை திமுக தலைமை வெளிப்படையாக விமர்சிக்கவில்லை. ஆனால் இதனை திமுக தலைமை ரசிக்கவில்லை என்பது மட்டும் முதல்வரின் ஈரோடு கிழக்கு தொகுதி பிரசாரத்தில் வெளிப்பட்டது. ஈரோடு கிழக்கு தொகுதி பிரசாரத்தின் போது, கூட்டணி கட்சிகளின் பெயரை குறிப்பிட்ட முதல்வர் ஸ்டாலின், வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக் கட்சி பெயரை குறிப்பிடவில்லை எனவும் சுட்டிக்காட்டுகின்றனர் சீனியர் பத்திரிகையாளர்கள். வேல்முருகனின் இத்தகைய கொள்கை சார் நிலைப்பாடு இப்போது அரசியல் களத்தில் பேசுபொருளாகி இருக்கிறது.
-
அண்ணா அறிவாலயத்தில் ஆட்டம் போட்ட மகளிரணி.. ரீல்ஸ் போடச் சொல்லும் ஸ்டாலின்! தவெகவைப் பார்த்து சூடு? -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
பூட்டி கிடக்கும் பனையூர் கட்சி ஆபீஸ்! தவெகவில் இணைய காத்துக் கிடக்கும் விஜயதாரணி டூ பாலகங்கா வரை! -
காங்கிரசுக்கு நீங்க ஏன் உயிர் கொடுக்குறீங்க விஜய்? கடுப்பான பாஜக.. கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா -
2K கிட் டைம் டிராவல் செய்து கருணாநிதியை சந்தித்தால் எப்படி இருக்கும்? ஒரு ஜாலியான, சீரியஸ் கற்பனை -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
அஸ்திவாரத்தை ஆட்டும் விஜய்.. அலற போகும் அறிவாலயம்! திமுக ‘மாஜி’ புள்ளிகளுக்கு செக்! களமிறங்கிய டீம்! -
பாஜகவை விட்டு விலகுகிறேன்.. 39 ஆண்டு பயணத்திற்கு முற்றுப்புள்ளி.. காரணம் இதுதான்! நடிகர் பாண்டி ரவி ஆதங்கம் -
புதுப்பொலிவு பெறும் புதுச்சேரி.. அள்ளி கொடுத்த மத்திய அரசு! எல்.முருகன் சொன்ன குட் நியூஸ்! -
கருகுது இரட்டை இலை.. திமுகவுக்கு தாவும் சி.விஜயபாஸ்கர்? பெரிய பொறுப்புடன் வரவேற்கும் மு.க.ஸ்டாலின்! -
திமுகவின் கோட்டையை சிதறடித்த தவெக.. சென்னை அதிமுக நிர்வாகிகளை தூக்கும் அறிவாலயம்.. பின்னணி!












Click it and Unblock the Notifications