இலவசம் டூ காசு.. பேங்க் முதல் யுபிஐ வரை.. மக்களின் வாழ்க்கையை தலைகீழாக புரட்டிய 3 விஷயங்கள்
சென்னை: யுபிஐ பண பரிவர்த்தனைக்கு வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் கட்டணம் என்று அறிவிக்கப்பட்டதை கேட்டு பலருக்கும் வியப்பாக இருக்கலாம். ஆனால் இலவசமாக இருந்தது பின்னாளில் காசு கொடுத்தால் தான் அந்த சேவை கிடைக்கும் என்ற நிலை யுபிஐ மட்டுமல்ல, வங்கி சேவை, அன்றாடம் கண் வழிக்கும் இணைய சேவைக்கும் காசு கொடுத்தால் கிடைக்கும் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது.
Recommended Video
ஆரம்பத்தில் ஒரு விஷயத்தை நமக்கு இலவசமாக கொடுப்பார்கள், அதற்கு நம்மை அடிமையாக்குவார்கள், பின்னர் அதற்கு சிறிய கட்டணம் வசூலிப்பார்கள், பின்னர் ஒவ்வொரு விஷயத்திற்கு காசு வசூலிப்பார்கள், இதுவே இன்றைய டெக்னாலஜி யுகத்தின் தாரக மந்திரம் ஆக உள்ளது.
ஏனெனில் எல்லாமே வணிக மயமாகிவிட்டது. வணிகம் என்று வரும் போது, லாபம் தான் பிராதனம். சேவை என்றெல்லாம் பார்க்க முடியாது. வணிக நிறுவனங்களுக்கு லாபம், அரசுக்கு வரி இது இரண்டும் தான் பிரதானம் என்பதால், மக்கள் அதிகம் பயன்படுத்தும் பல்வேறு சேவைகளுக்கு சேவை வரி வசூலிக்கப்படுகிறது.

அளவில்லா நெட்
அப்படித்தான் இன்றைக்கு பல்வேறு விஷயங்களுக்கு சேவை வரி வசூலிக்கப்படுகிறது, சேவையை செய்யும் நிறுவனங்களும் அதற்கு கட்டணமும் வசூலிக்கின்றன. எத்தனையோ சேவைகள் இலவசத்தில் இருந்து கட்டணம் என்று மாறினாலும், நம்முடைய அன்றாட வாழ்க்கையை தலைகீழாக புரட்டி போட்டது என்றால், வங்கி சேவை, அடுத்தாக ஆப் ஆப்பாக டவுன்லோடு செய்ய வைத்த அளவில்லா இணைய சேவை, மூன்றாவது தான் அந்த ஆப்பில் ஒன்றான யூபிஐ சேவை. இந்த மூன்றுமே இப்போது கட்டணமாகி உள்ளது.

எப்படி ஆரம்பம்
முதலில் வங்கி சேவையை பற்றி பார்ப்போம். 80களிலும், 90களிலும் மக்கள் பணத்தை வங்கியில் எல்லாம் போடுவதை விரும்ப மாட்டார்கள். ஆனால் ஐடி துறை அசுர வளர்ச்சி அடைய தொடங்கியதால் மக்கள் மெல்ல மெல்ல வங்கி சேவையை தொடர்ந்தனர். 2000க்கு பிறகு அதிகமானது. நிறுவனங்கள் சம்பளத்தை கைகளில் கொடுத்து வந்த நிலையில், சம்பளத்தை வங்கியில் தான் போட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது. அதன்பின்னர் சம்பளம் வாங்கும் அனைவருமே வங்கி வளையத்திற்குள் வந்தனர். 2010ல் எல்லாம் வங்கி சேவை பெரிய அளவில் வளர தொடங்கியது

உதவி தொகை
அதேநேரம் வங்கி சேவை பக்கமே போகாத மக்கள் பல கோடி என்கிற நிலை இருந்தது. அவர்களுக்கு அரசு தரும் மானியங்கள் கிடைக்க வேண்டும் என்றால் கட்டாயம் வங்கி கணக்கு ஆரம்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. அதன்படி அவர்களும் வங்கி கணக்கு ஆரம்பித்தார்கள். ரேஷன் மானியம், சிலிண்டர் மானியம், முதியோர் உதவி தொகை, 100 நாள் வேலை திட்டம் இவை அனைத்தும் அடிப்படை மக்கள் அனைவரையும் வங்கி சேவைக்கு வரவழைத்தது.

கட்டுப்பாடு
அதன்பின்னர் ஏடிஎம் சேவை எல்லா இடங்களிலும் வழங்கப்பட்டது. ஏடிஎம் இல் எத்தனை முறை பணம் எடுத்தாலும் கட்டணம் இல்லை என்று அறிவித்தார்கள். இதனால் மக்கள் பணத்தை சம்பளம் வாங்கிய உடன் எடுக்காமல் ஏடிஎம்களில் எடுத்துக் கொள்ளலாம் என்று மனதை மாற்றிக்கொண்டு தேவைப்படும் ஏடிஎம்களில் எடுத்தார்கள். அதற்கு கட்டுப்பாடு விதிக்க விரும்பிய வங்கிகள் , 5 முறைக்கு மேல் எடுத்தால் கட்டணம் வசூலிக்கின்றன. இதேபோல் வங்கியில் அனைத்து சேவைகளும் ஆன்லைனில் தரப்படுவதால், பணம் அனுப்புவது, எஸ்எம்எஸ் அனுப்புவது தொடங்கி, காசோலைகள், ஏடிஎம் கார்டு வாங்குவது வரை எ்லலா வங்கி சேவைகளுக்கும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதேபோல் வங்கிகளில் குறைந்த பட்ச இருப்பு இல்லாவிட்டால் அதற்கும் அபராதம் விதிக்கப்படுகிறது. இப்போது வங்கி சேவை வாழ்வின் அங்கமாகிவிட்ட நிலையில் எல்லாவற்றிற்கும் கட்டணம் உண்டு,.

மொபைல் டேட்டா
அடுத்தாக அளவில்லா இணைய சேவை: 2010ல் ஸ்மார்ட்போன் அறிமுகம் ஆன போது அன்லிமிடெட் டேட்டா, வாய்ஸ் கால் முற்றிலும் இலவசமாக கிடைக்க போகிறது என்று சொல்லியிருந்தால், காமெடி பண்ண வேண்டாம் என்று சிரித்திருப்பார்கள். ஆனால் அவை அனைத்தும 2017ல் சாத்தியமானது. ஒரு ஜிபி டேட்டா ஒரு மாதத்திற்கு 200 ரூபாய் என்று இருந்த போது, ரிலையன்ஸ் ஜியோ, எவ்வளவு டேட்டா பயன்படுத்தினாலும் கட்டணம் இல்லை என்று இலவசமாக சிம் கொடுத்தது. தலைக்கு இரண்டு சிம் வரை இலவசமாக கொடுத்தது. எல்லாரும் 2 சிம் கொண்ட செல்களை வாங்கினார்கள், அளவற்ற இணைய சேவை யூடியூப், பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மக்களை மூழ்கடிக்கத் தூண்டியது. கடைசியில் ஸ்மார்ட்போனும் அதற்கு இணைய சேவையும் இல்லை என்றால் வாழ முடியாது என்கிற நிலை வந்த பின்னர், அதற்கு அதிரடியாக கட்டணத்தை தொலை தொடர்பு நிறுவனங்கள் வசூலிக்க தொடங்கின. இலவசமாக இருந்த இன்கம்மிங் கால் சேவை இப்போது இல்லவே இல்லை. ஒரு மாதம் குறைந்தது 200 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் தான் சிம் ஆக்டிவேட் ஆக இருக்கும் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது.

டிஜிட்டல் புரட்சி
மூன்றாவதாக விஷயத்திற்கு வருவோம். அதுதான் டிஜிட்டல் இந்தியாவில் ஏற்பட்ட மிகப்பெரிய புரட்சி, பணத்தை வங்கி கணக்கிற்கு அனுப்ப முதலில் அவரது வங்கி கணக்கு எண்ணை சேர்க்க வேண்டும். அதற்கு பணம் அனுப்ப வங்கியில் ஆக்டிவேட் செய்ய வேண்டும். சரியாக 24 மணி நேரத்திற்கு பிறகு வங்கி கணக்கில் இருந்து அவருக்கு பணம் போகும். இப்படித்தான் இருந்தது. ஆனால் யுபிஐ சேவை வந்த பிறகு அப்படியே தலைகீழாக மாறியது. நட்சத்திர ஓட்டல் தொடங்கி பொட்டிக்கடை வரை எல்லா இடத்திலும் யுபிஐ சேவை வந்தது. பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு மக்கள் ஏடிஎம்மில் போய் பணம் எடுப்பதை குறைத்துவிட்டனர். எல்லோருமே யுபிஐ இல் பணத்தை அனுப்பினார்கள். கூகுள் பே, பேடிஎம், போன் பே, பாரத் பே, அமேசான் பே போன்ற யுபிஐ ஆப்களும் பஸ் டிக்கெட் புக் செய்தால் ஆபர், ஓட்டல் புக் செய்தால் ஆபர், பணம் அனுப்பினால் ஆபர் என எல்லாரையும் யுபிஐ சேவையை பயன்படுத்த தூண்டின. இறுதியில் கிட்டத்தட்ட ஸ்மார்ட் போன் வைத்துள்ள எல்லோருமே யுபிஐ ஆப் பயன்படுத்த தொடங்கிவிட்டார்கள்.

யுபிஐ கட்டணம்
கையில் ஒரு ரூபாய் இல்லாவிட்டாலும், வீட்டிற்கு தேவையான மளிகை சாமான்களை யுபிஐ ஆப் மூலம் மளிகை கடைகளில் வாங்குகிறார்கள் மக்கள். எல்லா இடங்களிலும் இப்போது யுபிஐ சேவை செயல்படுகிறது. இதையடுத்து யுபிஐ சேவைக்கும் கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகள் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் தேசிய பரிவர்த்தனை கழகத்தின் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. 2000 ரூபாய்க்கு மேல் மதிப்பு கொண்ட பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே இந்த 1.1% கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நீங்கள் உங்கள் மொபைல் வாலட் வழியாக வியாபாரிகளுக்கு 2000 ரூபாய்க்கு மேல் பணம் செலுத்தும்போது அதற்கு 1.1% கட்டணம் வசூலிக்கப்படும். இந்த கட்டண முறை வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட இருக்கிறது. ஒரு நபர் மற்றொரு நபருக்கு பணம் அனுப்புவதற்கு கட்டணம் வசூலிக்கப்படாது. மாறாக, ஒரு நபர் மற்றொரு வியாபாரிக்கு பணம் அனுப்பும்போது மட்டுமே பணம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications