பிளானே வேற.. "16 வருஷமாச்சு.. வானதிக்கு இதுகூட தெரியாதா".. எகிறிய எம்.பி.. கோவையில் என்ன நடக்கிறது?
வானதி சீனிவாசன் கோரிக்கைக்கு எம்பி நடராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்
சென்னை: 16 வருஷமாகிறது.. இதுகூட வானதிக்கு தெரியாதா? என்று கோவை எம்பி பிஆர் நடராஜன் கடுமையான விமர்சனம் ஒன்றை முன்வைத்துள்ளர்.
பாலக்காடு ரயில்வே கோட்டத்தில் இருந்து சேலம் ரயில்வே கோட்டம் கடந்த 2006ம் ஆண்டு பிரிக்கப்பட்டு விட்டது..
தமிழக அரசு மற்றும் தமிழக எம்பிக்கள், பொதுமக்களின் தொடர் கோரிக்கை காரணமாகவே இவை தனியாக பிரிக்கப்பட்டு புதிய சேலம் கோட்டம் அன்று உருவாக்கப்பட்டது...

சேலம் கோட்டம்
இற்த சேலம் ரயில்வே கோட்டத்தில் சேலம், ஈரோடு, கோவை, திருப்பூர் போன்ற முக்கிய மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன. கோவை ரயில் நிலையம் சேலம் கோட்டத்துடன் இணைக்கப்பட்டாலும் பொள்ளாச்சி, கிணத்துகடவு போன்ற பகுதிகள் இது வரை சேலம் கோட்டத்தில் இணைக்கப்படவில்லை.. எனவே, இவற்றை பாலக்காடு கோட்டத்தில் இருந்து பிரித்து சேலம் கோட்டத்துடன் இணைக்க வேண்டும் என்று கடந்த 2007 முதல் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

வானதி சீனிவாசன்
இந்நிலையில் கடந்த 8ஆம் தேதி பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வுமான வானதி சீனிவாசன், மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்விடம் ஒரு மனு அளித்துள்ளார்.. அதில், கோயமுத்தூரை தலைமையிடமாக கொண்டு தனி கோட்டம் உருவாக்கப்பட வேண்டும் அல்லது பாலக்காடு கோட்டத்தில் இருந்து கோவையை பிரித்து சேலம் கோட்டத்தில் இணைக்க வேண்டும்,

மத்திய அரசு
பொள்ளாச்சி - திருச்செந்தூர் ரயிலை பாலக்காட்டுக்கு பதிலாக கோவை அல்லது மேட்டுப்பாளையத்தில் இருந்து இயக்க வேண்டும் என்பன உட்பட ரயில்வே தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார். மேலும் இந்த கோரிக்கை மனுவை, மற்றும் ரயில்வே அமைச்சருடன் இருக்கும் புகைபடங்களை டிவிட்டரிலும் வானதி சீனிவாசன் அப்லோடு செய்திருந்தார்...

பிஆர் நடராஜன்
இப்படி வானதி மனு தந்ததற்கு, கோவை மாவட்ட எம்பி, பிஆர் நடராஜன் காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார். ஏற்கனவே கோவை, சேலம் கோட்டத்தில் இருக்கும்போது, தனியாக கோவையை கோட்டம் தேவையா? இது வானதி சீனிவாசனுக்கு தெரியாதா அல்லது அக்கறையின்மையா, விளம்பர எண்ணமா? என்று அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியதுடன், மக்கள் பிரதிநிதி தகவல்களை தெரிந்துகொண்டு பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார்.

நடராஜன்
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் மேலும் கூறும்போது, கடந்த 2006ஆம் ஆண்டே இவை இணைக்கப்பட்டு விட்ட நிலையில், உண்மை நிலவரம் தெரியாமல் பாலக்காடு ரயில்வே கோட்டத்தில் இருந்து கோவையை பிரிக்க வேண்டும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்வை சந்தித்து மனு அளித்து வந்து இருப்பது வானதி சீனிவாசனின் அறியாமையை காட்டுகின்றது என்றும் பிஆர் நடராஜன் விமர்சித்துள்ளார்.

எதிர்ப்பு குரல்
இதனிடையே, பல்வேறு தரப்பில் இருந்தும் இது தொடர்பான கண்டன குரல்கள் வானதி நோக்கி விழுந்து வருகிறது.. சேலத்தில் இருந்து பல்வேறு மாநிலங்களுக்கும், மாவட்டங்களும் ரயில்கள் சென்று வருகிறது, இதில் லட்சக்கணக்கானோர் பயன் பெற்றும் வருகின்றனர்.. அப்படி இருக்கும்போது, கோவையை தலைமையிடமாக கொண்டு கோட்டம் அமைக்க வேண்டும் என்று வானதி சொல்வது, தேவையில்லாத பேச்சு.. கோவைக்கு இன்னமும் முழுமையாக ரயில்வே பாதைகளே கிடையாது.. ஒரு வழிப்பாதையில்தான் ரயில்கள் சென்று வருகின்றன..

தேவையில்லாத வேலை
அப்படியிருக்கும்போது, கோவையை தலைமையிடமாக மாற்றினால் அது பொதுமக்களுக்கு சிக்கலையே ஏற்படுத்தும் என்று வானதிக்கு தெரியதா? எத்தனையோ பிரச்சினைகள் இருக்கும்போது, அவரது தொகுதியிலேயே எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கும்போது, அதை சீர்செய்வதை விட்டுவிட்டு, இந்த விவகாரத்தை ஏன் தேவையில்லாமல் சீண்டுகிறார்? கோவை டிவிஷனை முன்னிறுத்தி என்ன பிளான் வைத்திருக்கிறார்? என்ற எதிர்ப்பு கேள்விகளும் எழுந்து வருகின்றன..
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்











Click it and Unblock the Notifications