வெள்ளைக்கு பதில் ஆரஞ்சு! வந்தே பாரத் ரயில் நிறம் திடீர் மாற்றம்! காரணம் இதுதான்! சர்ச்சை வெடிக்குமோ
சென்னை: இந்தியாவில் தற்போது வந்தே பாரத் ரயில்கள் வெள்ளை நிறத்தில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் வந்தே பாரத் ரயிலின் நிறம் மாற்றப்பட உள்ளது. அதன்படி வந்தே பாரத் ரயில் ஆரஞ்சு நிறத்தில் இயக்கப்பட உள்ளது. இது காவி நிறம் போல் இருப்பதால் சர்ச்சை வெடிக்கலாம் என கூறப்படுகிறது.
இந்தியாவில் ரயில்வே உள்கட்டமைப்புகளை மேம்படுத்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. அதில் ஒரு திட்டம் தான் ‛வந்தே பாரத்'. இது பிரதமர் மோடியின் கனவு திட்டமாகும்.

இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் இந்த திட்டத்தின் மூலம் இந்தியாவின் 75 நகரங்களை இணைக்கும் வகையில் வந்தே பாரத் ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. ரயில்களின் வேகத்தை அதிகப்படுத்தி, பயணிகளுக்கு பல்வேறு சொகுசு வசதிகளை வழங்குவது தான் இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
இந்த வந்தே பாரத் ரயில் பெட்டிகள் சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இந்தியாவில் முதல் முறையாக டெல்லி - வாரணாசி இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டது. இந்த ரயில் சேவை கடந்த 2019ல் சேவையை தொடங்கியது. அதன்பிறகு கொரோனா பரவல் உள்ளிட்ட காரணங்களால் வந்தே பாரத் ரயில் சேவையை விரிவுப்படுத்தும் பணி முடங்கியது. இந்நிலையில் தான் இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்து வந்தே பாரத் ரயில் திட்டம் விரைவாக நடந்து வருகிறது.
அதாவது நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் பிரதமர் மோடி வந்தே பாரத் ரயில் சேவையை தொடர்ந்து தொடங்கி வைத்து வருகிறார். தற்போது வரை நாட்டில் மொத்தம் 25 வந்தே பாரத் ரயில்கள் இயங்கி வருகின்றன. இதில் ஒன்று தான் சென்னை-மைசூர் இடையே இயங்கி வருகிறது. இந்த வந்தே பாரத் ரயில்கள் அனைத்தும் வெள்ளை நிறத்தில் உள்ளன. மேலும் ரயிலின் சில இடங்களில் நீலநிறமும் ரயிலில் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் தான் வந்தே பாரத் ரயிலின் வண்ணத்தை மாற்றம் முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது வந்தே பாரத் ரயில் வெள்ளை மற்றும் நீலம் நிறத்தில் இயங்கி வரும் நிலையில் வரும் காலத்தில் இந்த ரயில் ஆரஞ்சு மற்றும் கிரே நிறத்தில் இயக்கப்பட வாய்ப்புள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது. தற்போது வெள்ளை நிறத்தில் உள்ள வந்தே பாரத் ரயில் அதிகளவில் அழுக்காகிறது. இது பயணிகளை முகம் சுழிக்கவைக்கிறது. இந்நிலையில் தான் வெள்ளை நிறத்தில் உள்ள வந்தே பாரத் ரயிலின் நிறத்தை மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
இதையடுத்து சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பெட்டிகளுக்கு வேறு நிறம் பூசும் பணி தொடங்கியது. இதில் ஆரஞ்சு-கிரே காம்பினேஷன் பயணிகளை ஈர்க்கும் வகையில் நன்றாக இருப்பதோடு, ரயில்களின் பெட்டிகளுக்கும் பொருத்தமானதாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வந்தே பாரத் ரயிலுக்கு ஆரஞ்சு-கிரே நிறத்தில் பெட்டிகள் உருவாக்க அனுமதி கோரப்பபட்டுள்ளது.
இதற்கு இன்னும் மத்திய அரசு அனுமதி கொடுக்கவில்லை. மத்திய அரசு இதற்கு அனுமதி கொடுக்கும் பட்சத்தில் வருங்காலத்தில் வரும் வந்தே பாரத் ரயில்கள் ஆரஞ்சு-கிரே நிறத்தில் இயக்கப்பட உள்ளது. மேலும் வந்தே பாரத் ரயிலின் நிறமாற்றம் தொடர்பாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஐசிஎப் தொழிற்சாலையில் ஆரஞ்சு -கிரே நிற பெட்டியை பார்வையிட உள்ளார். அவர் ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் வந்தே பாரத் ரயிலின் நிற மாற்றம் நடைமுறைக்கு வரும்.
அதன்படி ரயில் பெட்டிகள் முழுவதும் ஆரஞ்சு நிறமாக இருக்கும். அதேநேரத்தில் கதவு மற்றும் ரயிலின் சில இடங்களில் மட்டும் கிரே நிறம் இடம்பெறும் என்ற தகவல்களும் வெளியாகி உள்ளது. மேலும் இதற்கிடையே தான் ஆரஞ்சு நிற வந்தே பாரத் ரயில் பார்க்க காவி நிறத்தில் இருப்பது போல் தெரிவதாக சிலர் தெரிவிக்கின்றனர். இதனால் வந்தே பாரத் ரயிலின் நிறமும் சர்ச்சையை உருவாக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications