விஜய்க்கு இது "கோல்டன் சான்ஸ்".. இதை பயன்படுத்திக்கிட்டா.. அரசியலையே புரட்டி போடலாம்!கவனிச்சீங்களா?
சென்னை: தமிழ்நாடு அரசியலை புரட்டி போடும் ஒரு நல்ல வாய்ப்பு நடிகர் விஜய்க்கு கிடைத்துள்ளது. அரசியல் ரீதியாக விஜய்க்கு இது மிக முக்கியமான வாய்ப்பாக மாறும் சூழல் உள்ளது. ஆனால் விஜய் அப்படிப்பபட்ட அதிரடி நடவடிக்கைகளை எடுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டு உள்ளார். படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உடலை, பெரம்பூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரும் வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று காலை விசாரணை செய்யப்பட உள்ளது.

தற்போது சென்னை பெரம்பூர் மாநகராட்சி பள்ளி மைதானத்தில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங்கின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
ஏற்கனவே 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கோகுல், விஜய், சிவசக்தி ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
உலுக்கிய சம்பவம்: தமிழ்நாடு மட்டுமின்றி மொத்த தேசத்தையும் இந்த சம்பவம் உலுக்கி உள்ளது. இந்த விவகாரத்தில் நடிகர் விஜய் எப்படி செயல்பட போகிறார்.. என்ன மாதிரியான கருத்துக்களை சொல்ல போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழ்நாடு அரசியலை புரட்டி போடும் ஒரு வாய்ப்பு நடிகர் விஜய்க்கு கிடைத்துள்ளது.
அரசியல் ரீதியாக விஜய்க்கு இது மிக முக்கியமான வாய்ப்பாக மாறும் சூழல் உள்ளது. ஆனால் விஜய் அப்படிப்பபட்ட அதிரடி நடவடிக்கைகளை எடுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
என்ன சொன்னார்?: ஏற்கனவே கொலையில் விஜய் இரங்கல் தெரிவித்து இருந்தார். அதில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.
ஆம்ஸ்ட்ராங்கை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவரது கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இது போன்ற கொடும் குற்றச் சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தமிழக அரசு தீவிரமாக முன்னெடுக்க வேண்டும். சமரசம் இல்லாமல் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி அனைவரது பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்., என்று கூறி உள்ளார்.
விஜய் செய்ய வேண்டியது; விஜய் இதில் இரங்கல் என்பதை தாண்டி பின்வரும் விஷயங்களை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.
1. விஜய் நேரில் சென்று ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்துவது அவரின் ஆதரவாளர்கள் இடையே வரவேற்பை பெறும்.
2. தலித் அமைப்புகள், போராளிகள் இடையே விஜய்க்கு என்று ஒரு அன்பு, அனுதாபம் உள்ளது. அப்படி இருக்க.. விஜய் இன்று செல்வது அவர்களுக்கு ஆதரவாக இருக்கும், அரசியல் ரீதியாகவும் விஜய்க்கு இது பலன் அளிக்கும்.
3. சட்ட ஒழுங்கு பற்றி தமிழ்நாட்டில் புகார்கள், விமர்சனங்கள் எழுகின்றன. இதை எதிர்த்து போராட்டம், ஆர்ப்பாட்டங்களை விஜய் அறிவித்தால் அது கவனம் பெறும்.
4. நேரடியாக ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்களை சந்தித்து.. அவர்களிடம் கொலை பற்றி பேசலாம். அதோடு இல்லாமல் தமிழ்நாட்டில் மாற்று தலித் அரசியலுக்கு நிலவும் வெற்றிடத்தை விஜய் நிரப்பலாம்.
ஏற்கனவே அம்பேத்காரை படியுங்கள் என்று நடிகர் விஜய் பேசி இருக்கிறார்.. அப்படி இருக்க அவரின் அரசியலை முன்னெடுத்த ஆம்ஸ்ட்ராங் உடன் நிற்க வேண்டிய கடமை விஜய்க்கு உள்ளது.
-
எங்கே போனார்கள் சிங்கப்பெண்கள்? ஒரே நாளில் 5 சிறுமிகளுக்கு நேர்ந்த கொடூரம்.. தமிழகத்தில் பேரதிர்ச்சி -
சண்டைக்கு ரெடியாக திமுக.. சட்டசபையில் சமாளிக்குமா தவெக? எம்எல்ஏக்களுக்கு 2 நாள் பயிற்சி தொடக்கம் -
"24 மணி நேரத்தில் 12 பாலியல் வன்கொடுமைகள்".. முதல்வரிடம் உதயநிதி சரமாரி கேள்வி -
தமிழ்நாட்டுல இவ்வளவு பாலியல் வன்கொடுமை நடக்குது.. எங்கயா அந்த சிங்கப்பெண் படை.. தெறிக்கும் மீம்ஸ்! -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
பிரபலங்களால் பாஜகவுக்கு ப்ராப்ளம்.. தவெகவுக்கு தாவும் 2 நடிகைகள்! பக்கா பிளான் போட்ட செங்கோட்டையன்! -
எந்த முதல்வரும் செய்யாத மூவ்.. உள்ளாட்சித் துறையை முதல்வர் விஜய் தன்வசம் வைத்திருப்பது ஏன்? பின்னணி -
விஜய்க்கு பெரிய நன்றி சொல்லியே ஆகணும்.. ஏனென்றால்? அவர் இல்லனா ... உருக்கமாக பேசிய பாரதிராஜா தம்பி -
கரண்ட் கட் பற்றி நான் சொன்ன விஷயத்தில் பின்வாங்க மாட்டேன்.. ஏனென்றால்..? மாஸ்டர் மகேந்திரன் விளக்கம் -
திமுக ஆட்சியில் நடந்தது.. இப்போ தொடருது! விஜய்க்கு 6 மாசம் அவகாசம் கொடுங்க! துரை வைகோ ஒரே போடு! -
தமிழ்நாட்டில் விஜய்.. தெலங்கானாவில் விஜய் தேவரகொண்டா! உற்று பார்க்கும் தெலுங்கு மக்கள்! என்ன மேட்டர்












Click it and Unblock the Notifications