வேளச்சேரி வங்கியில் 1 கிலோ தங்க நகையை வேண்டுமென்றே வைத்தது ஏன்.. முன்னாள் பெண் மேனஜர் வாக்குமூலம்
சென்னை: சென்னை வேளச்சேரியில் இயங்கி வரும் பிரபல வங்கிக்கு, கடந்த டிசம்பர் 5ஆம் தேதி பெண் ஒருவர் பர்தா அணிந்துகொண்டு வந்துள்ளார். அந்த கிளையில், புதிய கணக்கு தொடங்க விரும்புவதாக கூறியுள்ளார். பின்னர் சுமார் 1 கிலோ 250 கிராம் தங்க நகையை வைத்துவிட்டு சென்றார். இதுபற்றி விசாரித்த போலீசாருக்கு பெரிய உண்மை தெரியவந்தது. வந்தவர் வங்கியின் முன்னாள் மேலாளர் பத்மபிரியா என்பதும், அவர் தான் வேண்டுமென்றே நகையை வைத்து சென்றதும் தெரியவந்தது. அவர் அளித்த வாக்குமூலம் பற்றி பார்ப்போம்.
சென்னை வேளச்சேரியில் பிரபல தனியார் வங்கியின் கிளை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி எப்போதும் பரபரப்பாக காணப்படும். இங்கு கடந்த டிசம்பர் 5ஆம் தேதி பெண் ஒருவர் பர்தா அணிந்தபடி வந்துள்ளார். அந்த கிளையில், புதிய கணக்கு தொடங்க விரும்புவதாக கூறியிருந்தார். அதன்படி, வங்கி கணக்குத் தொடங்க தேவையான ஆவணங்களைக் கொண்டு வருவதாகக் கூறி அங்கிருந்து புறப்பட்ட அவர், தான் கொண்டு வந்த பையை வங்கி வளாகத்தில் வேண்டுமென்றே விட்டுச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

சிறிது நேரம் கழித்து, சந்தேகத்தின் பேரில் அந்தப் பையைச் சோதித்த வங்கி நிர்வாகம், அதற்குள் சுமார் 1 கிலோ 250 கிராம் எடையுள்ள தங்க நகைகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். நான்கு நாட்களாகியும் யாரும் அந்தத் தங்கத்தை உரிமைக் கோர வரவில்லை. இதையடுத்து டிசம்பர் 10ம் தேதி அன்று பிரபல தனியார் வங்கி நிர்வாகம் சார்பில் வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த வேளச்சேரி காவல்துறையினர், உடனடியாக விசாரணை நடத்ததினார்கள். வங்கி நிர்வாகத்திற்கு வாய்ஸ் மற்றும் செயல்பாடுகளின் அடிப்படையில் கிளையின் முன்னாள் மேலாளர் பத்மபிரியாமீது சந்தேகம் வந்தது. ஏனெனில் பத்மபிரியா கடந்த செப்டம்பர் மாதம் வங்கியில் பணியாற்றிய போது, லாக்கரிலிருந்து 250 கிராம் நகையைத் திருடிய வழக்கில் ம் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
இதையடுத்து அவரை பிடித்து விசாரித்த போது தான், பத்மாவதி குணவதி என்பவரின் லாக்கரில் இருந்து 1.25 கிலோ தங்க நகையை திருடி உள்ளதாக கூறப்படுகிறது.இந்த சம்பவத்தில் மீண்டும் கைது செய்யப்படுவோமோ என்று பயந்துபோன பத்மபிரியா, எப்படியாவது அந்த லாக்கரில் நகையை திரும்ப வைத்து விட்டு சென்று விடலாம் என முயற்சி செய்தாராம். அதன்படி, டிசம்பர் 5 அன்று வங்கிக்கு பர்தா அணிந்து வந்த அவர் நகையை யாருக்கும் தெரியாமல் வைத்துவிட முயற்சி செய்தாராம். ஆனால், அது முடியாததால், நகை பையை விட்டுவிட்டு சென்றது விசாரணையில் தெரிய வந்தது.
எதற்காக இவ்வளவு நகை மற்றும் பணத்தை பத்மா திருடியாக புகார் எழுந்துள்ளது என்று விசாரித்தார். பத்மபிரியாவின் கணவர் கடன் தொல்லை காரணமாக கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டதும் தெரியவந்துள்ளது. கடன் கொடுத்தவர்கள் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்த நிலையில், திருட்டு வேலையில் பத்மா ஈடுபட்டாராம். மேலும், இது தொடர்பாக பத்மபிரியாவிடம் வேளச்சேரி காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications