வில்லங்க சான்றிதழில் வில்லங்கம்.. காஞ்சிபுரம் கலெக்டரால் முடக்கப்பட்ட சொத்து.. பின்னணி என்ன
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் சம்பந்தம் இல்லாமல் தனது சொத்து முடக்கப்பட்டுள்ளதாக கூறி மூதாட்டி ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தில் கடனுக்கு அடமானமாக வைக்கப்பட்ட நிலத்தை பொது ஏலத்தில் வாங்கிய நிலையில், அந்த நிலம் முடக்கப்பட்டுள்ளது என்று குற்றம்சாட்டினார். இதையடுத்து காஞ்சிபுரம் மூதாட்டியின் சொத்து முடக்கப்பட்டது ஏன்? கலெக்டர் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1991-96-ம் ஆண்டுவரைஜெயலலிதா முதல்வராக இருந்த காலக்கட்டதில் , வருமானத்துக்கு அதிகமாக 66 கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்த வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி உள்ளிட்டோருக்கு தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. இதில் ஜெயலலிதா இறந்ததால் அவருக்கு தண்டனை கிடைக்கவில்லை.. அதேநேரம் சசிகலா, சுதாகரன், இளவரசி உள்ளிட்டோர் தண்டனையை அனுபவித்தனர். ஜெயலலிதா பெயரிலான சொத்துகளை முடக்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

காஞ்சிபுரம் கலெக்டர் உத்தரவு
அவ்வாறு முடக்கப்பட்ட சொத்துக்கள் பட்டியலில் வாலாஜாபாத் தாலுகா ஊத்துக்காடு கிராமத்தில் உள்ள ஒரு சொத்தும் இடம்பெற்றிருந்தது. அந்த சொத்தை வேறு யாருக்கும் பத்திரப்பதிவு செய்யக்கூடாது என வாலாஜாபாத் சார்-பதிவாளருக்கு காஞ்சிபுரம் கலெக்டர் 27.2.2021 அன்று உத்தரவிட்டார்.
மூதாட்டி வழக்கு
இந்தநிலையில் காஞ்சிபுரம், வாலாஜாபாத் ஆறுமுகப்பேட்டையைச் சேர்ந்த 68 வயாகும் கமசலா என்பவர் ஊத்துக்காடு கிராமத்தில் உள்ள குறிப்பிட்ட முடக்கப்பட்ட சொத்து தனக்கு சொந்தமானது என்றும், தனது சொத்து தவறுதலாக முடக்கப்பட்டுள்ளது என்றும் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
தொழில் முதலீட்டு கழகம்
மூதாட்டி கமசலா தாக்கல் செய்த மனுவில், 'ஊத்துக்காடு கிராமத்தில் உள்ள எனக்கு சொந்தமான 2.15 ஏக்கர் நிலத்துக்கு வில்லங்க சான்று விண்ணப்பித்தபோது, எனது அந்த நிலம் ஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்கில் முடக்கம் செய்யப்பட்டுள்ளது என தெரியவந்திருக்கிறது.
அந்த நிலத்தை பொறுத்தமட்டில், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தில் கடனுக்கு அடமானமாக வைக்கப்பட்ட நிலத்தை பொது ஏலத்தில் வாங்கினேன்.
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கிற்கும், எனது சொத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. எனவே, ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் தொடர்புடையது எனக்கூறி எனது சொத்தை முடக்கம் செய்ததை நீக்க வேண்டும். இந்த சொத்து தொடர்பாக பத்திரப்பதிவு எதுவும் மேற்கொள்ளக்கூடாது எனகாஞ்சிபுரம் கலெக்டர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யவேண்டும்" இவ்வாறு மூதாட்டி கமசலா கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி, இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை, காஞ்சிபுரம் மாவட்டம் கலெக்டர், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை 28-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications