சிவி சண்முகத்தின் பாதுகாப்பு விலக்கப்பட்டது ஏன்? நீதிமன்றத்தில் காவல்துறை சொன்ன முக்கிய தகவல்!என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகத்துக்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு கடந்த 2011ம் ஆண்டு விலக்கி கொள்ளப்பட்டது. இதனை எதிர்த்து அவர் தரப்பில் தாக்கல் செய்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் பாதுகாப்பை திரும்ப பெற்றது ஏன்? என்பது பற்றி காவல்துறை சார்பில் நீதிமன்றத்தில் முக்கிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் தொகுதி முன்னாள் எம்எல்ஏவும், அதிமுக முன்னாள் அமைச்சராகவும் இருந்தவர் சிவி சண்முகம். இவர் கடந்த சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்தார். இதையடுத்து சிவி சண்முகம் தற்போது அதிமுக மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார்.

முன்னதாக இவருக்கு அச்சுறுத்தல் இருந்ததை தொடர்ந்து பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தான் கடந்த 2021ம் ஆண்டு சிவி சண்முகத்துக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு விலக்கி கொள்ளப்பட்டது. இதையடுத்து சிவி சண்முகம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்யப்பட்டது.

மனுவில் இருப்பது என்ன?

மனுவில் இருப்பது என்ன?

அந்த மனுவில், கடந்த 2006ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலன்று கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டதால் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் திடீரென அந்த பாதுகாப்பு விலக்கி கொள்ளப்பட்டது. துப்பாக்கி உரிமத்தை புதுப்பித்து தரவில்லை என தெரிவித்து இருந்தார்.

பாதுகாப்பு வழங்க கோரிக்கை

பாதுகாப்பு வழங்க கோரிக்கை

தற்போது அந்த வழக்கு சாட்சி விசாரணை கட்டத்தை எட்டியுள்ள நிலையில் பாதுகாப்பை விலக்கியதற்கான காரணத்தை தெரிவிக்க கோரியும், பாதுகாப்பு வழங்கக் கோரியும் அளித்த மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி சந்திரசேகரன் முன் விசாரணைக்கு வந்தது.

 காவல்துறை தரப்பில் வாதம்

காவல்துறை தரப்பில் வாதம்

அப்போது காவல்துறை சார்பில் வழக்கறிஞர் பாபு முத்து மீரன் ஆஜராகி வாதங்களை முன்வைத்தார். அவர் வாதாடுகையில், ‛‛சிவி சண்முகத்துன் மனு ஆய்வு செய்யபட்டது. அவருக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என தெரிய வந்ததன் அடிப்படையில் அவருடைய பாதுகாப்பை விலக்கி கொள்ளப்பட்டது'' என்றார்.

அறிக்கை தாக்கல் செய்ய..

அறிக்கை தாக்கல் செய்ய..

இதையடுத்து நீதிபதி சிவி சண்முகத்தின் பாதுகாப்பு தொடர்பாக நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். மேலும் வழக்கு விசாரணையை மார்ச் 27ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி சந்திரசேகரன் உத்தரவு பிறப்பித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+