அதுசரி மெட்ராஸ் டே ஏன் ஆகஸ்ட் 22-ந் தேதி கொண்டாடப்படுகிறது? சுவாரசிய வரலாற்று பின்னணி இதுதான்!
சென்னை: சென்னையின் நிறுவன நாள்- மெட்ராஸ் டே என்பது ஆண்டுதோறும் ஆகஸ்ட் 22-ந் தேதி கொண்டாடப்படுகிறது. சென்னையின் 383-வது நிறுவன நாள் இந்த ஆண்டு கொண்டாடப்பட உள்ளது.
Recommended Video
சென்னை பெருநகரமானது இந்த தேதியில் இன்னாரால் கட்டி எழுப்பப்பட்டது என்ற வரலாற்றைக் கொண்டது. சென்னை நிலப்பரப்பு என்பது நெடிய வரலாற்றைக் கொண்டது.
சென்னை போன்ற மிகப் பழமையான நகரத்துக்கு எப்படி பிறந்த நாள் அல்லது நிறுவன நாள் அல்லது Day என்பது கொண்டாடுவது சரியாக இருக்கும்? அதேநேரத்தில் சென்னையில் பழம் பெரும் வரலாற்றை ஆய்ந்து அறிந்த அறிஞர்கள் காரணமே இல்லாமலா ஆகஸ்ட் 22-ந் தேதி சென்னை நிறுவன நாள் என கொண்டாட சொல்வார்கள் என்கிற கேள்வியும் எழும்.

சென்னையில் உள்ள திருவான்மியூர், மயிலாப்பூர், திருவொற்றியூர், திருமுல்லைவாயில் உள்ளிட்ட இடங்களில் உள்ள ஆலயங்கள் மிகப் பழமையானவை, இந்த திருத்தலங்கள் பாடல் பெற்ற தலங்கள்.அதாவது சுமார் 1,000 ஆண்டுகளுக்கு முன்னரே இத்தலங்கள் சமயக் குரவர்களால் பாடிச் சிறப்பிக்கப்பட்டவை. அப்படியானால் ஏன் கி.பி.1639, ஆகஸ்ட் 22 என்பது சென்னையின் நிறுவன நாளாக குறிக்கப்படுகிறது?
இன்றைய சென்னை பெருநகரமும் சென்னை என்ற பெயரும்தான் சில நூற்றாண்டுகால வரலாறு கொண்டவை. ஆனால் சென்னைக்குள் உள்ளடக்கிய எத்தனையோ ஊர்களும், புரங்களும் பட்டினங்களும் பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழர்களின் தாய் நிலப் பகுதியாகவே இருந்து வருகின்றனவைதான். உதாரணமாக எழுமூர் நாடு என சோழர் காலத்தில் குறிப்பிடப்பட்டது எது தெரியுமா? அதாவது நம்ம எக்மோர்தான். சென்னை எழும்பூர்தான் சோழர் கால எழுமூர் நாடு என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள். இதற்கெல்லாம் சாட்சியமாக இருப்பவை கூவம், அடையாறு, கொற்றலை நதிகள்தான்.
சரி நாம் மீண்டும் ஆகஸ்ட் 22-ந் தேதிக்கு வருவோம்.. கி.பி.1639- ஆகஸ்ட் 22-ந் தேதி என்னதான் நடந்தது?
சென்னையில் தற்போது தலைமை செயலகம் அமைந்துள்ள இடத்தின் பெயர் புனித ஜார்ஜ் கோட்டை (செயின்ட் ஜார்ஜ் கோட்டை). இந்த இடத்தின் ஒரு பகுதியை ஆங்கிலேயர்கள்- அதாவது கிழக்கிந்திய கம்பெனியானது முதன் முதலில் விஜயநகர மன்னர்களிடம் இருந்து விலைக்கு வாங்கியது. பின்னர் இந்நிலப் பகுதியை சுற்றிய ஊர்களும் ஏரிகளும் புரங்களும் பட்டினங்களும் பாக்கங்களும் மெல்ல மெல்ல ஒன்றிணைக்கப்பட்டு சென்னை பெருநகரமாக விஸ்தீரனமடைந்து இன்று நிற்கிறது. இதற்கு அடித்தளமாக இருந்தது கிழக்கிந்திய கம்பெனியினர், விஜயநகர மன்னர்களிடம் புனித ஜார்ஜ் கோட்டையி நிலப் பகுதியை முதன் முதலில் வாங்கியதுதான். அந்த நாள்தான் கி.பி.1639, ஆகஸ்ட் 22. ஆகவே சென்னை நாள், மெட்ராஸ் டே என்பதை ஆகஸ்ட் 22, 1639 ஐ கணக்காகக் கொண்டு கொண்டாடப்பட்டு வருகிறது.
-
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications