சர்வதேச லீடராகும் தமிழ்நாடு.. இனிமே "இதில்" நாமதான் கெத்து.. ஸ்டாலின் போட்ட கையெழுத்து.. குட்நியூஸ்
சென்னை: சர்வதேச அளவில் காலனி துறையில் தமிழ்நாடு புதிய உயரத்தை அடைய உள்ளது. இதற்கான முக்கியமான கையெழுத்து இன்று போடப்பட்டது.
கொரோனாவிற்கு பின்பாக 2022ல் தமிழ்நாட்டில் மிக அதிக அளவில் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. 2022ம் ஆண்டு மட்டும் தமிழ்நாட்டில் 1 லட்சம் கோடிக்கும் மேல் முதலீடு செய்யப்பட்டு உள்ளது.

இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் பொருளாதார ரீதியாக கடுமையான பின்னடைவை சந்தித்த போதும், கொரோனாவிற்கு பின் பல்வேறு மாநிலங்கள் கடுமையாக கஷ்டப்பட்ட போதும் கூட தமிழ்நாட்டில் முதலீடுகள் குவிந்துள்ளன. அமெரிக்காவை சேர்ந்த Ford நிறுவனம் சென்னையில் இருந்து வெளியேறிய பின்பும் கூட சென்னையில் முதலீடுகள் சுணங்காமல் அதிகரித்துள்ளன.
இந்தியாவில் கொரோனா காரணமாக லாக் டவுன் இருந்த 2021 இறுதி கட்டங்களிலும் கூட தமிழ்நாடு வளர்ச்சியை பதிவு செய்தது. இந்த காலகட்டத்தில் வளர்ச்சியை பதிவு செய்த ஒரே இந்திய மாநிலம் தமிழ்நாடு மட்டுமே ஆகும்.
இந்தியாவின் மொத்த ஜிடிபியில் 9.47 சதவிகிதத்தை தமிழ்நாடு பங்களிக்கிறது. 2021-22 நிதியாண்டில் தமிழ்நாடுதான் இந்தியாவில் நம்பர் 2 மாநிலம். தமிழ்நாட்டில் மாநில ஜிடிபி ₹19.02 லட்சம் கோடியில் இருந்து ₹21.79 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் முதலீடுகள் தீவிரமாக அதிகரித்து வரும் நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்திலும் மிக முக்கியமான முதலீடு ஒன்று செய்யப்பட உள்ளது.

அதன்படி ராணிபேட்டையில் உற்பத்தி செய்யப்படும் காலணிகள் உலகம் முழுக்க ஏற்றுமதி செய்யப்பட உள்ளன. இதனால் ராணிப்பேட்டை கவனிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரபல காலனி நிறுவனமான ஹோங் பூ எனப்படும் நிறுவனம் ராணிப்பேட்டையில் முதலீடு செய்ய உள்ளது.
தைவானை சேர்ந்த இந்த நிறுவனம் ராணிப்பேட்டையில் முதலீடு செய்து, அதன்பின் உலகம் முழுக்க ஏற்றுமதி செய்ய உள்ளது. இதற்காக ராணிப்பேட்டையில் 130 ஏக்கர் நிலத்தை அரசிடம் இருந்து அந்த நிறுவனம் வாங்கி உள்ளது.

இந்த நிறுவனம் மூலம் ராணிப்பேட்டையில் உள்ள 20 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும். நாம் பயன்படுத்தும் பிரபல காலணிகளான நைக், ரீபோக் போன்ற நிறுவனங்கள் எல்லாம் இந்த ஹோங் பூ நிறுவனம் வழியாகவே காலணிகளை தயாரிக்கின்றன.
அந்த நிறுவனம்தான் தற்போது ராணிப்பேட்டையில் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது.
இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் தைவானைச் சேர்ந்த Pou Chen கார்ப்பரேஷன் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹை க்ளோரி ஃபுட்வேர் இந்தியா பிரைவேட். லிமிடெட், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டையில் முதலீடு செய்துள்ளது. தோல் அல்லாத பெரிய காலணி உற்பத்திப் பிரிவை அமைக்க தமிழகத்தில் ரூ.2,302 கோடி முதலீடு செய்ய உள்ளது.
இதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்து ஆனது. முதல்வர் ஸ்டாலின் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டார். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் அடுத்த 12 ஆண்டுகளில் மாநிலத்தில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்த போகிறது. தோல் அல்லாத காலணி துறையில் 20,000 பேருக்கு வேலைகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கியமாக சர்வதேச அளவில் காலனி துறையில் தமிழ்நாடு லீடராகும் நிலை ஏற்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications