Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேர்வறையில் மணப்பெண்கள்.. அதே கெட் அப் ஏன்? அன்னைக்குதான் கல்யாணம் பண்ணனுமா? நெட்டிசன்கள் விவாதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த சில ஆண்டுகளாக திருமணம் முடித்த கையோடு தேர்வு எழுத சென்ற மணப்பெண், மணக்கோலத்தில் வாக்களிக்க சென்ற தம்பதி என்பன போன்ற செய்திகள் வந்த வகையில் உள்ள நிலையில், இது தொடர்பாக நெட்டிசன்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

கடந்த சில ஆண்டுகளாக நீட் தேர்வு நடைபெறும் நாளன்று அனைத்து ஊடகங்களிலும் ஒரு செய்தி வரும். மாணவிகளின் துப்பட்டா, தோடு, நகைகள் அனைத்தையும் வெளியே கழற்றி வைத்த பிறகே தேர்வறைக்குள் அனுமதிக்கிறார்கள் என்று. இதற்கு தலைவர்கள், நெட்டிசன்கள் கண்டனம் தெரிவிப்பது வழக்கம்.

Why womens going to write exam after marriage with same costume?

அதேபோல் கல்லூரி தேர்வுகள், வேறு நுழைவுத் தேர்வுகள் நடைபெற்றாலும் பொதுவான ஒரு செய்தி அனைத்து மீடியாக்களிலும் வந்துவிடும். அதுதான் மணக்கோலத்துடன் தேர்வு எழுதிய மாணவி என்று. அதில் திருமணம் முடித்த கையோடு மாலையும் கையுமாக மனைவியான மாணவி கணவரை அழைத்துக் கொண்டு தேர்வறைக்கு செல்வார்.

தேர்வறையில் மாலையும் கழுத்துமாக கை நிறைய நகை, பட்டுப்புடவை என மணப்பெண் தோற்றத்திலேயே அவர் தேர்வு எழுதுவார். இதேபோல் தேர்தலின்போது திருமணம் செய்த கையோடு மணமகனும், மணமகளும் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்குகளை செலுத்திவிட்டு ஊடகங்களில் செய்தியாகிவிடுவதும் வழக்கம்.

ஆரம்பத்தில் இதுபோன்ற செய்திகளை வரவேற்ற பொதுமக்களும் நெட்டிசன்களும், தற்போது இது எல்லைமீறி செல்வதாக கூறி விமர்சிக்கத் தொடங்கிவிட்டார்கள். தேர்வு, தேர்தல் நாட்களில் திருமணம் செய்து மணக்கோலத்துடன் இவ்வாறு வருவது விளம்பரத்துக்காகவே என்று பலரும் கருத்திட்டு வருகிறார்கள்.

Why womens going to write exam after marriage with same costume?

ஊடகங்களில் எளிதில் பிரபலமாகும் நோக்கில் இதுபோன்ற உத்தியை அவர்கள் கையில் எடுப்பதாக நெட்டிசன்கள் கூறுகிறார்கள். மணக்கோலத்துடன் தேர்வு எழுதுவதில் சம்பந்தப்பட்ட மாணவிக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுவதுடன், அந்த தேர்வறையில் இருக்கும் மற்ற மாணவ மாணவிகளுக்கும் கவனம் சிதறும் வாய்ப்புகள் உள்ளன.

இதுதொடர்பாக கடந்த சில நாட்களாகவே சமூக வலைதளங்களில் விவாதங்கள் தொடர்ந்து வருகின்றன. குறிப்பாக படித்துக்கொண்டு இருக்கும் மாணவிக்கு ஏன் இவ்வளவு அவசரமாக திருமணம் செய்து வைக்க வேண்டும்? என்ற கேள்வியை பலர் எழுப்புகிறார்கள். இதுவரை எந்த ஆணாவது மணக்கோலத்தில்போய் கல்லூரி தேர்வை எழுதி இருப்பாரா? பெண்களை மட்டும் ஏன் இவ்வளவு சீக்கிரமாக திருமணம் செய்து வைக்கிறார்கள்? என பலர் விமர்சித்து வருகின்றனர்.

இதில் சிலர் தேர்வு எழுதுவது கூட பரவாயில்லை.. ஏன் மாலையை கூட கழற்றாமல் எழுதுகிறார்கள் என்ற கேள்வியையும் எழுப்புகின்றனர். ஆனால், இதுகுறித்து நாம் விசாரித்தபோது இந்துக்களில் உள்ள பல்வேறு சமூகங்களில் மணப்பெண் திருமண மாலையை குறிப்பிட்ட நேரம் வரை கழற்றக்கூடாது என்றும், மணமகளின் சகோதரியே அதை கழற்ற வேண்டும் என்ற சம்பிரதாயம் இருப்பதாக கூறுகிறார்கள்.

இதுகுறித்து பேஸ்புக்கில் கருத்திட்டுள்ள அரசு பள்ளி ஆசிரியை மகாலட்சுமி, "ஏன்தான் இந்த புள்ளைக இப்டி இருக்குதுங்களோ தெரியல. கல்யாண தேதியும் பரீட்சை தேதியும் ஒன்னுனு தெரிஞ்சுமே இது எதுக்கு எந்த ஆம்பளையாவது பரீட்சை அன்னிக்கு பரீட்சை எழுத ஓடிவராங்களா?ஒன்னு பரீட்சைக்கு முன்னாடி இல்லாட்டி பின்னாடிதான கல்யாண தேதிய முடிவுபண்ணுவாங்க.

Why womens going to write exam after marriage with same costume?

ஆனா ...உங்களுக்கு மட்டும் என்னமா? உறுதியா நின்னு சொல்லுங்க உங்க முடிவை. ஏன் வேற முகூர்த்தநாளே இந்த ஜென்மத்துல வராதா?சரி... வர்றதுதான் வரீங்க...ம்அந்த உடுப்பை மாத்திட்டு வர எம்புட்டு நேரம் ஆகிடப்போகுது? ஏதோ எக்ஸாம் சென்டர் பக்கத்துல ரீச் ஆகுற இருக்கிறதால இப்படி நடந்துக்கிறீங்க போல. உங்க கல்யாண தேதியையாவது நீங்க முடிவு பண்ணுங்க மா." என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதுகுறித்து விஜய சாலினி என்பவர் வெளியிட்ட பதிவில், "கல்யாண தேதி 6 மாசம் முன்னாடி கூட குறிச்சு இருப்பாங்க. மண்டபம் லா 6 மாசம் முன்ன book பண்ணாதான் கிடைக்கும். அந்த தேதிக்கு பத்திரிகை அடிச்சு ஊரெல்லாம் கொடுத்து முடிச்சுருப்பாங்க. ஆனா ஒரு மாசம் முன்ன தான் தேர்வு தேதி தெரிய வரும். அடுத்து சடங்கு சம்ரதாயம்னு நிறைய இருக்கு புகுந்த வீடு போற வரை அந்த மாலைய கூட கழட்ட கூடாது. இதுல எங்க ஆடை மாத்துறது.

இதெல்லாம் தவிர்க்க வேண்டும் என்றால் பெண்கள் படிப்ப முடிச்ச பிறகு கல்யாணம் வைக்கலாம். ஆனா நம்ம ஊர்ல இன்னும் பெண்கள் படிப்பு அவ்ளோ முக்கியம் இல்ல. இதெல்லாம் அந்த பெண்களுக்கு தேவ இல்லாத டென்சன்தான் ஆனா அவங்க வீட்டு பெரியவங்கள எதிர்த்து பேச எந்த உரிமையும் இருக்காது. எப்படியாது தேர்வை எழுத விட்டால் போதும்னு வந்துருப்பாங்க. இவங்கலாம் படிச்சு முடிச்சு வேலைக்கு போவாங்களா என்பது மிக பெரிய கேள்விக்குறி தான். இதுல அந்த பெண்களை கேலி பண்ண எதுவுமில்லை." என்று பதிவிட்டு உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+