நோட் பண்ணுங்க.. ரொம்ப முக்கியம்! இனி வள்ளுவர் கோட்டம் பக்கம் போகாதீங்க.. வருது பெரிய மாற்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இனிமேல் வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்த அனுமதியே இல்லை.. சென்னையில் அனுமதி பெற்று நடத்தப்படும் போராட்டங்களுக்கான இடம் மாற்றம்.. செய்யப்பட்டுள்ளது என்று சென்னை மாநகரக போலீசார் அறிவித்து உள்ளனர். இதற்கான காரணங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் பொதுவாக போராட்டங்கள் நடத்த வள்ளுவர் கோட்டத்தில் இடம் கொடுக்கப்படும். வள்ளுவர் கோட்டத்தில்தான் அனுமதி பெற்ற போராட்டங்கள் பொதுவாக நடத்தப்பட வாய்ப்புகள் தரப்படும். ஆனால் சமீபத்தில் டாஸ்மாக் முறைகேடு புகார் தொடர்பாக அங்கே பாஜக போராட்டம் நடத்த திட்டமிட்டு இருந்தது. ஆனால் இதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

இதற்கு பின் காரணங்கள் முக்கியமான சில காரணங்கள் உள்ளன. வள்ளுவர் கோட்டம் சாலையில் புதிதாக பாலம் கட்டப்பட உள்ளது. இதனால் இனி அங்கே போராட்டம் நடத்தப்பட வாய்ப்புகள் தரப்படாது. இதனால் அங்கே போக்குவரத்து மொத்தமாக மாற்றப்பட வாய்ப்புகள் உள்ளன. இதற்காக 67 கோடி ரூபாய்க்கு டெண்டர் விடப்பட உள்ளது.

Why you should avoid going to Valluvar Kottam side as Work on 900 mtrs long flyover starts

இந்த மாதம் இறுதியில் அங்கே பேரிகேட் போடும் பணிகள் நடக்கும். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கும் வாய்ப்புகள் உள்ளன. அங்கே நிலம் கையகப்படுத்தும் பணிகள் விரைவில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுவதால், பொங்கலுக்குப் பிறகு வள்ளுவர் கோட்டம் அருகே பாலம் கட்டுவதற்கு சென்னை மாநகராட்சி டெண்டர் விட உள்ளது.

அங்கே கட்டப்பட உள்ள நான்கு வழிப்பாதை பாலத்தால் நுங்கம்பாக்கம் மற்றும் தி.நகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் குறையும், ஜெமினி மேம்பாலத்தில் இருந்து வடபழனி நோக்கி செல்லும் போக்குவரத்தை எளிதாக்கும் வகையில் இந்த பாலம் கட்டப்பட உள்ளது.

விரைவில் டெண்டர் முடிந்து பணி ஆணை வழங்கப்பட்டால், 18 மாதங்களில் பாலம் கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் அப்பகுதி மக்களுடன் பொது கலந்தாய்வு நடத்தப்படும். இதனால் பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிலம் கையகப்படுத்தும் பணிகள்

திட்டத்திற்காக கையகப்படுத்தப்படும் தனியார் நிலத்தின் பரப்பளவைக் குறைத்துள்ளோம். சாலையில் உள்ள 37 தனியார் சொத்துகளை கையகப்படுத்தும் பணி விரைவில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநகராட்சி பொது சுகாதார நிலையம் உள்ளிட்ட அரசு சொத்தின் நிலம் பாலத்திற்காக பயன்படுத்தப்படும் என்று மாநகராட்சி வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.

இந்த திட்டத்தை விரைவுபடுத்தும் முயற்சியில், விரைவில் திட்டத்தின் சமூக தாக்க மதிப்பீட்டை சமர்ப்பிக்குமாறு ஆலோசகரிடம் சென்னை மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, நாங்கள் பொது கலந்தாய்வை நடத்துவோம். இந்த திட்டம் காரணமாக பெரிய அளவில் குடியிருப்புகளை மாற்ற வாய்ப்பில்லை, என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. முன்மொழியப்பட்ட பாலம் மாம்பலம் கால்வாய்க்கு அருகாமையில் உள்ளதால், வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பில்லை.

பாதுகாப்பான பாலம்

அதனால் இந்த பாலம் பாதுகாப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கனமழையின் போது மழைநீர் கால்வாயில் செல்வதற்கு வசதியாக பாலத்தின் அமைப்பு இறுதி செய்யப்பட்டுள்ளது. சீரமைப்பு மாற்றத்திற்குப் பிறகு, 2,800 சதுர மீட்டர் நிலத்தின் விலை. இந்த பாலத்திற்காக ரூ.113 கோடி தனியார் சொத்து கையகப்படுத்தப்படும். இப்பகுதியில் தனியார் நிலத்தை கையகப்படுத்தும் செலவை விட, பாலத்தின் கட்டுமான செலவு ₹82 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

பழைய குப்பை பரிமாற்ற நிலையம், மெட்ரோவாட்டர் பம்பிங் ஸ்டேஷன், பூங்கா மற்றும் பொது சுகாதார CE ஆகியவற்றிலிருந்து நிலம் வாங்கி இங்கே பாலம் கட்டப்பட உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+