வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்ய போறீங்களா? டிக்கெட் எடுக்குறதுக்கு முன்னாடி இதை படிங்க.. முக்கியம்
சென்னை: வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்பவர்கள் அந்த ரயிலுக்கு என்று இருக்கும் முக்கியமான சில விதிமுறைகளை தெரிந்து கொள்ள வேண்டும்.
சமீபத்தில் சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி திறந்து வைத்தார். சென்னை முதல் பெங்களூர் வரை ஏற்கனவே வந்தே பாரத் சேவை உள்ளது. முதல்முறையாக தமிழ்நாடு உள்ளேயே வந்தே பாரத் ரயில் சென்னை - கோவை இடையே திறக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 6 மணி நேரத்தில் கோவை செல்ல முடியும்.

இந்த ரயில் மக்கள் இடையே பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. சென்னை - கோவை இடையே பயணிகள் அதிக அளவில் பயணிக்கும் நிலையில் வந்தே பாரத் ரயில் சேவைக்கான டிக்கெட் வரிசையாக இந்த மாதம் முழுக்க பல சீட்களுக்கு புக் செய்யப்பட்டு உள்ளது.
அந்த அளவிற்கு மக்கள் இந்த ரயிலில் செல்ல தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த ரயில்கள் புதன்கிழமை தவிர வாரத்தின் பிற 6 நாட்களும் இருமார்க்கமாக இயங்க உள்ளது. சராசரியாக மணிக்கு 110 கி.மீ வேகத்தில் ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதலில் 8 ஏசி பெட்டிகளுடன் இந்த ரயில் இயக்கப்பட உள்ளது. மொத்தம் 536 இருக்கைகள் இருக்கும். அதன்பிறகு பெட்டிகளின் எண்ணிக்கை 16 ஆக அதிகரிக்கப்படும்.
இதேபோல் இந்தியா முழுக்க பல மாவட்டங்களில், மாநிலங்களில் வந்தே பாரத் ரயில் தொடங்கப்பட்டு உள்ளது. வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்பவர்கள் அந்த ரயிலுக்கு என்று இருக்கும் முக்கியமான சில விதிமுறைகளை தெரிந்து கொள்ள வேண்டும்.
முக்கிய விதிகள்: 1. இந்த ரயிலில் எந்த விதமான சலுகை கட்டணமும் கிடையாது. குழந்தைகளுக்கு குறைந்த கட்டணம் கிடையாது. வயது வந்தோருக்கான முழு கட்டண டிக்கெட் மட்டுமே வழங்கப்படும்.
2. இந்த ரயிலில் மூத்த குடிமக்கள் / திவ்யாங் / பத்திரிகையாளர் சலுகை டிக்கெட் முன்பதிவு கிடையாது.
3. வந்தே பாரத் ரயில்களுக்கான முன்பதிவு, ரத்துசெய்தல் மற்றும் பணத்தைத் திரும்பப்பெறுதல் ஆகிய விதி முறைகள் சதாப்தி ரயில்களுக்கான விதிகளை போலவே இருக்கும்.
4. முன்பதிவு செய்யும் கேட்டரிங் சேவைகளை தேர்வு செய்ய முடியும்.

5. முன் கூட்டியே கேட்டரிங் சேவையைத் தேர்வு செய்யாத ஒரு பயணி, பின்னர் அதே வந்தே பாரத் ரயிலில் உணவை வாங்க முடிவு செய்தால், சாதாரண கேட்டரிங் கட்டணங்களுடன் கூடுதலாக ரூ.50/- கட்டணம் செலுத்தி உணவு பெறலாம்.
.
6. பொது மற்றும் தட்கல் கோட்டாவைத் தவிர வேறு எந்த கோட்டா இல்லை.
7. . எம்.பி.க்கள், எம்.எல்.ஏ கூப்பன்கள், பிற கூப்பன்கள், ராணுவ/பாராமிலிட்டரி வாரண்ட்கள் போன்றவற்றின் பாஸ்கள், ரயில்வே துறைக்கு முழுமையாக திருப்பிச் செலுத்தக்கூடிய கட்டணத்துடன் கூடிய பாஸ்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.
8. வந்தே பாரத் எக்ஸ்பிரஸில் காலை உணவுக்கான விலை ரூ. 205. பிற்பகல் உணவு ரூ. 205. மாலை நேர சிற்றுண்டி ரூ. 155. இரவு நேர உணவு ரூ 294. இதன் மேல் ஜிஎஸ்டி கட்டணம் விதிக்கப்படும்.
9. இந்த ரயிலில் மொத்தமாக பல்க் முன்பதிவு செய்ய முடியும்.
10. ரயில்வே ஊழியர்களுக்கான பாஸ்களில் பிரத்தியேகமாக டிக்கெட் முன்பதிவு அனுமதிக்கப்படுகிறது.
11. ரயிலில் ஊழியர்களுக்கான பாஸ் தவிர மற்ற ரயில்வே தொடர்பான பாஸ்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
-
உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக நீதிபதியான 2-வது பெண் வழக்கறிஞர்! கோவையை சேர்ந்த மோகனா.. பின்னணி -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications