தமிழகத்தி்ல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதா?.. வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பு இதுதான்!
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரிரு இடங்களில் லோசன முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் வேலூர் மாவட்டம் சோளிங்கரில் 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது குறைந்துள்ள பருவமழை, 2 நாட்களுக்கு பிறகு, மேற்கு தொடர்ச்சி மலைபகுதியில், மீண்டும் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே வடமேற்கு வங்கக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சியானது, தென் மேற்கு வங்க கடல் வரை பரவியுள்ளதன் காரணமாக, அடுத்த இரண்டு மூன்று தினங்களில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகும் வாய்ப்பு உள்ளதாகவும், இதன் காரணமாக கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல், மேற்கு வங்க மாநில கடலோரப் பகுதிகளில் உருவாகி உள்ள, காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால் தென்மேற்குப் பருவமழை தீவிரம் அடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் ஜம்மு காஷ்மீர், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் பரவலாக கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications