சகஊழியர் முன் கணவரை சந்தேகப்படுவது கொடுமையானது! தம்பதிக்கு விவாகரத்து வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சக ஊழியர்கள் முன்பு கணவரின் நடத்தை தொடர்பான சந்தேகத்தில் திட்டுவது என்பது கொடுமையானது எனக்கூறி தம்பதி ஒருவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் விவாகரத்து வழங்கி உள்ளது.

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் கல்லூரியில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் அரசு பள்ளி ஆசிரியை ஒருவருக்கும் திருமணம் நடந்தது.

இவர்களின் திருமணம் 2008ல் நடந்தது. திருமணமான புதிதில் தம்பதி மகிழ்ச்சியாக வாழ துவங்கினர். இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது.

கணவர் நடத்தையில் சந்தேகம்

கணவர் நடத்தையில் சந்தேகம்

இந்நிலையில் கணவரின் நடத்தையில் மனைவிக்கு சந்தேகம் எழுந்தது. அதாவது அவருடன் பணியாற்றும் பெண் ஊழியர்களுடன் அவர் அதிகமாக பேசியதாக கூறி மனைவி சந்தேகத்தை கிளப்பினார். மேலும் அவர் பணியாற்றிய கல்லூரிக்கு சென்று சகஊழியர்கள் முன்னிலையில் கணவரை அவமானப்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் கணவர் மீது அந்த பெண் போலீஸ் நிலையங்களில் புகார்கள் செய்துள்ளார். போலீசார் இருதரப்பையும் அழைத்து பேசி சமாதானம் செய்து அனுப்பினர். இருப்பினும் ஆசிரியை தொடர்ந்து தனது கணவர் மீது சந்தேகம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

விவாகரத்து கோரி வழக்கு

விவாகரத்து கோரி வழக்கு

இதையடுத்து அவரை விட்டு அவரது கணவர் 2011ல் பிரிந்து வாழ துவங்கினார். மேலும், இணைந்து வாழ செய்ய முயன்ற முயற்சியும் பலன் அளிக்கவில்லை. இதனால் மனைவி கொடுமையை கூறி விவாகரத்து கோரி ஈரோடு குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் விவாகரத்து வழங்க ஆசிரியை மறுத்துவிட்டார். மகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு விவாகரத்து வழங்க விருப்பம் இல்லை எனக் கூறினார். மேலும், தன் கணவருடன் இணைந்து வாழ விரும்பியே தான் போலீஸ் நிலையம் வரை சென்றதாகவும் அவர் தெரிவித்தார். இதையடுத்து நீதிமன்றம் விவாகரத்து வழங்க மறுத்தது.

உயர்நீதிமன்றம் கருத்து

உயர்நீதிமன்றம் கருத்து

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது நீதிபதிகள் விஎம் வேலுமணி, எஸ் சவுந்தர் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தியது. அப்போது கணவரின் நடத்தை, குணாதிசயத்தில் சந்தேகப்பட்டு அவருடன் பணியாற்றும் ஊழியர்கள் முன்னிலையில் மனைவி திட்டுவது என்பது கொடுமையானது என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். இந்து திருமண சட்டப்பிரிவு 13(1)(ia)ன்படி இது கொடுமையாகவே இருக்கும் என நீதிமன்றம் கூறியது.

விவாகரத்து வழங்கிய நீதிமன்றம்

விவாகரத்து வழங்கிய நீதிமன்றம்

அதோடு இந்த வழக்கில் போலீஸ் நிலையத்தில் புகார் செய்த மனைவி அதில் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை. இது போன்ற ஒரு போலீஸ் புகார் எந்த ஆதாரமும் இன்றி இருந்தால் அது கொடுமையாகிவிடும். முறையீட்டாளர் தனது பெண் சகாக்களுடன் தொலைபேசியில் பேசுவதால் மட்டுமே, பிரதிவாதி சட்டவிரோத தொடர்பு உள்ளதாக நினைக்கிறார். இது நியாயமான அடிப்படையான விஷயமாக இன்றி சந்தேகத்தை எழுப்புகிறது. இதுவும் மனக்கொடுமையை ஏற்படுத்துவதாக இருக்கும் என மேற்கொள் காட்டினர். மேலும் சில உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மேற்கொள் காட்டிய சென்னை உயர்நீதிமன்றம் அவருக்கு விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+