மண்டைக்கு ஏறிய கோபம்.. கொதிக்கும் எண்ணெய்யை கணவன் மீது ஊற்றி கொன்ற மனைவி.. கைது!

கொதிக்கும் எண்ணெயை கணவன் மீது ஊற்றிய மனைவி கைது செய்யப்பட்டார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொதிக்க கொதிக்க எண்ணெய்யை எடுத்து கணவன் மீது ஊற்றிய மனைவியை போலீசார் கைது செய்தனர்.

சென்னை திருவிக நகரை சேர்ந்தவர் உபயதுல்லா. இவருடைய மனைவி நஸ்ரின். இவர்களுக்கு கல்யாணமாகி 12 வருஷங்கள் ஆகின்றன.. 2 மகள்களும் உள்ளனர். நஸ்ரினுக்கு 35 வயதாகிறது.. இவர்களுக்குள் அடிக்கடி தகராறு நடந்து வந்ததாக கூறப்படுகிறது.

Wife arrested for killing husband near chennai

போன 2ம் தேதியும் வழக்கம்போலவே கணவன், மனைவிக்கு இடையே சண்டை நடந்துள்ளது. அப்போது நஸ்ரினை உபயதுல்லா கண்டித்ததாக தெரிகிறது.. இதனால் ஆத்திரமடைந்த நஸ்ரின், கிச்சனில் இருந்து கொதிக்கும் எண்ணையை கொண்டு வந்து கணவன் மீது ஊற்றி விட்டார்.

உடம்பில் சுடு எண்ணெய் கொட்டியதுமே, வலியால் அலறி துடித்தார் உபயதுல்லா.. அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் உடல் வெந்துபோன நிலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த உபயதுல்லா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, திருவிக நகர் போலீசார் இதனை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து நஸ்ரினை கைது செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+