கலைஞர் மகளிர் உரிமைத்தொகை.. 2வது தவணையில் பெரிய சர்ப்ரைஸ்.. கூடுதல் நபர்கள் பணம் பெற வாய்ப்பு?
சென்னை: மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் இந்த மாதம் 14ம் தேதி ரூபாய் 1000 வழங்கப்பட உள்ளது. இந்த நிலையில் இந்த முறை பணம் வழங்குவதில் சில மாற்றங்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் மாதம் மாதம் ரூபாய் 1000 வழங்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் 15ம் தேதி முதல் தொகை வழங்கப்பட்டது. இந்த நிலையில் இந்த மாதம் இரண்டாம் கட்ட தொகை வழங்கப்பட உள்ளது. இரண்டாம் கட்ட தொகை 15ம் தேதிதான் வழங்கப்பட வேண்டும் எல்லா மாதமும் 15ம் தேதிதான் வழங்கப்பட வேண்டும். ஆனால் இந்த மாதம் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் இந்த மாதம் 14ம் தேதி ரூபாய் 1000 வழங்கப்பட உள்ளது. மாத சம்பளம் வழங்கும் தேதி பொதுவாக வழங்கப்படும் தேதியில் சனி, ஞாயிறு வந்தால் ஒருநாள் முன்னதாகவே சம்பளம் வழங்கப்படும் அதுபோலவேதான் இந்த முறையும் ஒரு நாள் முன்னதாக 14ம் தேதி உரிமைத்தொகை ரூபாய் 1000 வழங்கப்பட உள்ளது. 15ம் தேதி விடுமுறை என்பதால் இப்படி முன்கூட்டியே வழங்கப்படுகிறது.
கூடுதல் பணம்: இந்த நிலையில்தான் இந்த முறை பணம் வழங்குவதில் சில மாற்றங்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதன்படி இந்த முறை கூடுதலாக ஒரு சிலருக்கு இந்த பணம் வழங்கப்பட உள்ளது. கடந்த முறை பெண்களிடம் ஏற்கனவே இருக்கும் வங்கி கணக்கில் பணம் கொடுக்கப்பட்டது. வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கு புதிதாக கூட்டுறவு வங்கிகள் மூலம் வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டது.

இவர்கள் எல்லோருக்கும் வங்கி கணக்குகள் ஆதாருடன் இணைக்கப்பட்டது. இந்த நிலையில்தான் எல்லோருக்கும் பணம் அனுப்பப்பட்டது. 1.70 கோடி பேர் இந்த திட்டத்திற்கு விண்ணப்பம் செய்து இருந்தனர் தற்போது வரை 1.064 கோடி பேர் இந்த திட்டத்தில் தேர்வாகி உள்ளனர். இதில் வங்கி கணக்கில் சிக்கல் உள்ள சிலருக்கு நேரடியாக மணி ஆர்டர் மூலம் பணம் அனுப்பப்பட்டது. இந்த நிலையில்தான் இரண்டாம் மாத தொகை தற்போது மீண்டும் அனுப்பப்பட உள்ளது. இதில் கூடுதலாக 1- 2 ஆயிரம் பேருக்கு இந்த தொகை வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
ஏன் இப்படி?: அதன்படி இந்த திட்டத்திற்கு 1.70 கோடி விண்ணப்பித்த நிலையில் கிட்டத்தட்ட 70 லட்சம் பேரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு உள்ளது. இந்த நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்ய முடியும். இதற்கு முன் சில விஷயங்களை நீங்கள் கவனிக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பித்து அதில் உங்களுக்கு பணம் வரவில்லை என்றால் நீங்கள் பின்வருமாறு மேல்முறையீடு செய்யலாம்.
இப்படி பலர் இந்த திட்டத்தின் கீழ் மேல்முறையீடு செய்தனர். அதில் தேர்வான சிலருக்கும், நேரடியாக முதல்வர் அமைச்சர்களிடம் புகார் வைத்த சிலருக்கும் பணம் அனுப்ப முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி இந்த 14ம் தேதி கூடுதலாக சிலருக்கு பணம் அனுப்பப்படும். உங்களிடம் கார் உள்ளிட்ட வாகனங்கள் இல்லை என்பதை உறுதி செய்யவும்.
உங்கள் கணவர், நீங்கள் அரசு வேலையில் இல்லை என்பதை உறுதி செய்யவும். உங்களிடம் ஆதார் கார்டு இணைக்கப்பட்ட வங்கி கணக்கு உள்ளதா என்பதை பார்க்கவும். திட்டத்தில் கொடுக்கப்பட்ட வரையறைகள் அனைத்தையும் நீங்கள் பூர்த்தி செய்திருக்க வேண்டும். குடும்பத்தில் ஆண்டு வருமானம் ரூபாய் 2.5 இலட்சம் மேல் ஈட்டி வருமானவரி கணக்கு தாக்கல் செய்பவர்கள் மற்றும் வருமான வரி செலுத்துபவர்கள் என்றால் பணம் கிடைக்காது.
(இந்த மாதம் தொடங்கிடுச்சு.. எப்போது மகளிர் உரிமை தொகை கணக்குகளில் வரவு வைக்கப்படும்? வெளியான தகவல்)
மாநில, மத்திய அரசு ஊழியர்கள்/ பொதுத்துறை நிறுவனங்கள்/ வங்கிகளின் ஊழியர்கள்/ வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகளின் ஊழியர்கள் ஊராட்சி வார்டு கவுன்சிலர்கள் தவிர்த்த உள்ளாட்சி பிரதிநிதிகள் என்றால் மேல்முறையீடு செய்ய முடியாது.சொந்த பயன்பாட்டுக்கு கார், ஜீப், டிராக்டர், கனரக வாகனம் போன்ற நான்கு சக்கர வாகனங்கள் வைத்துள்ளவர்கள் என்றால் மேல்முறையீடு செய்ய முடியாது. ஆண்டுக்கு 50 லட்சத்திற்கும் மேல் ஆண்டு விற்பனை (Annual Turnover) செய்து ஜிஎஸ்டி செலுத்தும் தொழில் நிறுவன உரிமையாளர்கள் என்றால் மேல்முறையீடு செய்ய முடியாது.
ஏற்கனவே முதியோர் ஓய்வூதியம் (OAP), விதவை ஓய்வூதியம், அமைப்புசாராத் தொழிலாளர் நலவாரிய ஓய்வூதியம் போன்ற சமூகப் பாதுகாப்புத் திட்ட ஓய்வூதியம் மற்றும் அரசிடமிருந்து ஓய்வூதியம் பெறும் குடும்பங்கள் என்றால் மேல்முறையீடு செய்ய முடியாது. இவை இல்லாத மற்றவர்களுக்கு பணம் அனுப்பப்படும் .
-
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
மகளிர் நிதி உதவித் திட்டம்.. 30 லட்சம் போலி பயனாளிகள்? மேற்கு வங்க சுவேந்து அதிகாரி உடனடி ஆக்ஷன் -
வன்னி அரசு வந்ததும் வராததுமா செய்த வேலை.. அரசு அதிகாரிகள் பங்கேற்ற தாட்கோ கூட்டத்தில் என்ன நடந்தது












Click it and Unblock the Notifications