சென்னை கோவை வந்தே பாரத்.. விரைவில் வரும் சூப்பர் மாற்றம்! இது மட்டும் வந்தால் வேற லெவல் தான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை கோவை வந்தே பாரத் ரயிலுக்கு மிகப் பெரியளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. இதற்கிடையே சென்னை கோவை வந்தே பாரத் ரயில் குறித்து மிக முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

நமது நாட்டில் ரயில் பயணத்திற்கு எப்போதும் பெரிய வரவேற்பு இருக்கும்.. விழாக் காலங்களில் பல மாதங்களுக்கு முன்பு டிக்கெட் முன்பதிவு தொடங்கினாலும் கூட அவை சில நாட்களில் விற்றுத் தீர்ந்துவிடும்,.

டிக்கெட் விலை குறைவு, டாய்லெட் உள்ளிட்ட பல வசதிகள் உள்ளதால் ரயிலில் பயணிக்கவே பலரும் விரும்புகிறார்கள். இதன் காரணமாகவே ரயில்களுக்கு நமது நாட்டில் எப்போதும் பெரிய வரவேற்பு இருக்கும்.

 Will additional coaches added in Chennai Coimbatore vande bharat What Railway says

ரயில் நெட்வொர்க்: அதற்கேற்ப உலகளவில் மிக பெரிய ரயில் நெட்வொர்க்கை கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது. இருப்பினும், தொழில்நுட்பம் ரீதியாக இந்தியன் ரயில்வே பின்தங்கியே இருப்பதாகத் தொடர்ந்து விமர்சனம் எழுந்து கொண்டே இருக்கிறது.. குறிப்பாக வேகம், வசதிகளில் மற்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியன் ரயில்வே பின்தங்கியே இருப்பதாகச் சொல்லப்பட்டது. இதற்கு பதிலளிக்கும் வகையில் இந்தியன் ரயில்வே வந்தே பாரத் ரயில்களை அறிமுகப்படுத்தியது.

வந்தே பாரத் ரயில்கள் முதலில் 2019 பிப். மாதம் டெல்லி- கான்பூர்- அலகாபாத்- வாரணாசி இடையே அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்குப் பொதுமக்களிடையே மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. அதைத் தொடர்ந்து நாடு முழுக்க பல வழித்தடங்களில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.. இப்போது நாடு முழுக்க 10+ வழித்தடங்களில் வந்தே பாரத் இயக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் சென்னை- பெங்களூர்- மைசூர் வந்தே பாரத் இயக்கப்பட்ட நிலையில், சென்னை கோவை வந்தே பாரத் ரயிலைக் கடந்த மாதம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

வந்தே பாரத்: சென்னை கோவை வந்தே பாரத் ரயிலுக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. இதற்கான கட்டம் சுமார் 1200ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ள போதிலும், டிக்கெட்கள் மின்னல் வேகத்தில் விற்றுத் தீர்ந்து வருகிறது. விலை அதிகம் என்ற போதிலும் இதில் பயணிக்கப் பொதுமக்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டுகின்றனர். இதன் காரணமாகவே ஏற்கனவே ஏப்ரல் மாத்திற்கான டிக்கெட்கள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டன. வெயிட்டிங் லிஸ்ட் பட்டியலும் தொடர்ந்து அதிகமாகவே இருந்து வருகிறது.

சென்னை கோவை வந்தே பாரத் ரயில்கள் சேவையைத் தொடங்கி இரண்டு வாரங்கள் ஆகும் நிலையில், அனைத்து நாட்களும் முழு பயணிகளுடனேயே ரயில் பயணிக்கிறது. இதனால் இரண்டே வாரங்களில் வந்தே பாரத் ரயில்கள் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயணித்துள்ளனர். இதற்குப் பயணிகளிடம் இருந்து மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளதையே இது காட்டுகிறது.

 Will additional coaches added in Chennai Coimbatore vande bharat What Railway says

ரயில் பெட்டிகள்: வழக்கமாக வந்தே பாரத் ரயில்களில் 16 பெட்டிகள் இருக்கும். ஆனால், சென்னை கோவை வந்தே பாரத் ரயிலில் 8 பெட்டிகள் மட்டுமே இருக்கிறது. இதன் காரணமாகவே சீக்கிரம் அதன் டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்து வருகிறது. பயணி விரும்புவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் சென்னை கோவை வந்தே பாரத் ரயிலில் கூடுதல் பெட்டிகளை இணைக்குமாறு பலரும் வலியுறுத்தியுள்ளனர்.

இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், "இதுவரை சென்னை கோவை வந்தே பாரத் ரயிலுக்கு சூப்பர் வரவேற்பு கிடைத்துள்ளது. சுமார் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வழித்தடத்தில் பயணித்துள்ளனர். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்ற போதிலும், உடனடியாக கூடுதல் பெட்டிகளை இணைக்க முடியாது.

 Will additional coaches added in Chennai Coimbatore vande bharat What Railway says

கூடுதல் பெட்டிகள்: ரயில்வே விதிப்படி, ஒரு வழித்தடத்தில் தொடர்ந்து ஆறு மாதங்களில் ரயில்கள் இயக்கப்பட்ட பிறகே அடுத்த கட்ட முடிவு எடுக்க முடியும். தேவை அதிகமாக இருந்தால் அதன் பின்னரே கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும்" என்றார். வந்தே பாரத் ரயிலில் கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், அடுத்து 6 மாதங்கள் கழித்தே இது குறித்து முடிவெடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளது முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.

வந்தே பாரத் ரயில்கள் முழுக்க உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஒன்றாகும். வந்தே பாரத் ரயில்கள் பெரம்பலூர் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படுகிறது. முற்றிலும் குளிர்சாதன வசதி, அதிவேக வைபை, பயோ டாய்லெட் என பல்வேறு வசதிகளைக் கொண்டிருக்கும் வந்தே பாரத் ரயில்களில், எதிர்புறம் 50 மீட்டரில் ரயில் கூட தானியங்கி முறையில் ரயில் நின்றுவிடும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+