ADMK Meeting: அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம்.. பிரிந்தவர்கள் இணைவதற்கு ஒப்புதல் தரப்படுமா?
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலுக்கு சில மாதங்களே உள்ளது. அரசியல் கட்சிகள் தங்களின் வெற்றிக்காக களமிறங்கி பணிகளை தொடங்கிவிட்டனர். கடந்த காலங்களில் இல்லாதளவுக்கு அதிமுகவில் தற்போது உள்கட்சி பிரச்சனைகள் நிலவி வருகிறது. தேர்தலுக்கு குறுகிய காலமே உள்ளதால் இது அந்தக் கட்சியினருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெறவுள்ளது. இதில் அதிமுகவில் பிரிந்தவர்களை மீண்டும் இணைப்பதற்கு ஒப்புதல் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழ்நாடு அரசியலில் தற்போது 4 முனைப் போட்டி நிலவி வருகிறது. ஆட்சியை தக்க வைப்பதற்காக திமுகவும், ஆட்சியை பிடிப்பதற்காக அதிமுக - பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகின்றன. நாம் தமிழர் தனித்து போட்டியிடுகிறது. தங்கள் தலைமையில் ஒரு கூட்டணியை உருவாக்கும் பணியில் தவெக ஈடுபட்டுள்ளது.

அதிமுகவில் மாற்றங்களா
தேர்தல் பணிகளை விட அதிமுகவில் உள்கட்சி பூசல் பூதாகரமாக வெடித்து கொண்டிருக்கிறது. கடந்த காலங்களில் அதிமுகவில் இருந்து பிரிந்த சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன் உள்ளிட்டோரை ஒன்றிணைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது. இந்த கோரிக்கையை அழுத்தமாக வலியுறுத்திய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்துவிட்டார்.
மேலும் சில மூத்த நிர்வாகிகள் திமுக உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளில் இணைந்து வருகின்றனர். இது அதிமுகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. இந்த பிரச்சனையை சரி செய்வதற்காக டெல்லி பாஜக நேரடியாக தலையிட்டு வருகிறது. ஓ. பன்னீர்செல்வம் சமீபத்தில் டெல்லி சென்று மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து வந்தார்.
செயற்குழு, பொதுக்குழு கூட்டம்
பன்னீர்செல்வம், சசிகலா உள்ளிட்டோர் மீண்டும் அதிமுகவில் இணைய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுகவில் பல்வேறு மாற்றங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று கூடுவது அதிமுக தொண்டர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வானகரம் ஶ்ரீவாரு வெகங்டாசலபதி மண்டபத்தில் அதிமுக அவை தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் காலை 10 மணியளவில் அந்தக் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் 3,000 பேர், செயற்குழு உறுப்பினர்கள் 5,000 பேர் பங்கேற்கவுள்ளனர்
பிரிந்தவர்கள் மீண்டும் இணைப்பா
தேர்தல் வியூகம், கூட்டணி விவகாரம் உள்ளிட்டவை ஆலோசிக்கப்பட இருந்தாலும் அதிமுக ஒருங்கிணைப்பு தொடர்பாக முக்கிய முடிவு செய்யப்படுமா என்பதுதான் தமிழ்நாடு அரசியலில் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் பன்னீர்செல்வம் முக்கிய முடிவை எடுக்க போவதாக கூறியுள்ளார். விரைவில் அனைத்து பிரச்சனைகளையும் முடித்து தேர்தலில் கவனம் செலுத்த அதிமுக திட்டமிட்டுள்ளது.
தேர்தல் தொடர்பாக பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அதிமுகவின் இன்றைய நிகழ்வு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. முக்கியமாக பிரிந்தவர்களை ஒன்றிணைப்பது தொடர்பாக ஒப்புதல் அளிக்கப்படுமா என்று அதிமுக தொண்டர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். அப்படி ஒப்புதல் வழங்கினால் அது தமிழ்நாடு அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று அதிமுக தொண்டர்கள் நம்புகிறார்கள்.
-
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!












Click it and Unblock the Notifications