சர்ப்ரைஸ் தருகிறாரா திமுக அமைச்சர்.. முக்கிய அறிவிப்புகள் இன்று வெளியாக வாய்ப்பு.. செம எதிர்பார்ப்பு
இன்றைய சட்டசபை கூட்டத்தில் அதிமுக பங்கேற்குமா என்று தெரியவில்லை
சென்னை: சட்டப்பேரவையில் இன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளது... அந்த வகையில், இன்று முக்கிய அறிவிப்புகள் வெளியாகவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
3 நாட்கள் தொடர் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டப்பேரவை நேற்று மீண்டும் கூடியது.. சட்டப்பேரவையை 2 நாட்கள் புறக்கணித்த அதிமுகவினர் நேற்றைய கூட்டத்திலும் பங்கேற்குமா என்ற கேள்வி எழுந்தது..
ஓபிஎஸ் பேரவையில் பங்கேற்றிருந்த நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூட்டத்தை புறக்கணித்திருந்தார்.

எடப்பாடி பழனிசாமி
சட்டப்பேரவை நடந்து வந்த அதேசமயம், அதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி பழனிச்சாமி சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆலோசனையும் நடத்தி வந்தார்.. கோடநாடு விவகாரம் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர மனு தரப்பட்டுள்ள நிலையில் இந்த ஆலோசனை நடந்தது..

துரைமுருகன்
நேற்றைய தினம், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மானிய கோரிக்கையை தாக்கல் செய்து உரையாற்றினார்.. தனது துறை சார்ந்த பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். தமிழகத்தில் நீர்நிலைகளை கண்காணிக்க ஆளில்லா விமானங்கள் கொள்முதல் செய்யப்படும், தமிழ்நாடு முழுவதும் ஆயிரம் தடுப்பணைகள் கட்டப்படும், திருவண்ணாமலை, விழுப்புரம், தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் 8 புதிய கால்வாய்கள் அமைக்கப்படும் உள்ளிட்ட அறிவிப்புகளையும் வெளியிட்டார்.

கூட்டத்தொடர்
மேலும் சட்டமன்ற வரலாற்றில், தன்னுடைய 50 ஆண்டுகால சட்டமன்றப்பணியை நிறைவு செய்த துரைமுருகனுக்கு அனைத்து கட்சியினரும் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். அமைச்சர் துரைமுருகனின் சட்டமன்ற பொன்விழாவை சிறப்பிக்கும்படி, நேற்று நடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் தீர்மானம் ஒன்றையும் முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்திருந்தார்.

மானியக் கோரிக்கை
இந்நிலையில் 2வது நாளாக இன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதமும், ஊரக வளர்ச்சித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதமும் நடைபெற உள்ளது... நகராட்சி நிர்வாகத்துறையின் சார்பில் அத்துறை அமைச்சர் கேஎன் நேரு, அறிவிப்புகளை வெளியிட உள்ளார்... இதேபோல் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் அமைச்சர் பெரிய கருப்பணன் விவாதத்தில் பங்கேற்க உள்ளார்.

அறிவிப்புகள்
சட்டப்பேரவையில் இன்று இரண்டாவது நாளாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதமும், ஊரக வளர்ச்சித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதமும் நடைபெற உள்ளது. நகராட்சி நிர்வாகத்துறையின் சார்பில் அத்துறை அமைச்சர் கே.என் நேரு, முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளார்... இதேபோல் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் அமைச்சர் பெரிய கருப்பண் இன்றைய விவாதத்தில் பங்கேற்க உள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. நேரா கொரியாவுக்கே சென்ற கீர்த்தனா.. HD Hyundai தூத்துக்குடிக்கு வருவது கன்பார்ம்! -
குறுநில மன்னர்களுக்கு செக்.. மா.செ.கள் ஏரியாக்களை பறிக்கும் ஸ்டாலின்! இளந்தாரிகளுக்கு மெகா வாய்ப்பு! -
3 மாதத்தில் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் எப்போ சொன்னார்? திரித்து பரப்புவதா? தங்கம் தென்னரசு டென்ஷன் -
"தூண்" ஸ்டாலின் இல்லாத இந்தியா கூட்டணி பலமா? அக்ரசிவ் அரசியலுக்கு மாறும் திமுக.. முழுசா மாறிய காங். -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
விஜய் டிவியில் திடீரென முடிவுக்கு வரும் சீரியல்.. அதுவும் இதுதான் காரணமா? பீல் பண்ணும் ரசிகர்கள் -
கோவை மக்களுக்கு ஜாக்பாட்! பல மாத காத்திருப்புக்கு விடிவுகாலம்.. மெகா திட்டத்திற்கு கிரீன் சிக்னல்! -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
திமுக தோல்வி.. "எல்லார் மீதும் தவறு இருந்தால் யார் மீது நடவடிக்கை எடுப்பது?" வைரமுத்து சொன்ன காரணம்! -
இதெல்லாம் நம்ப மாட்டேன்.. ஸ்டாலின் 'டபுள் செக்' அதிரடி! திமுகவில் நடுங்கும் தலைகள்.. என்ன நடக்குது? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications