அதிமுக + பாஜக சேர்ந்தால்.. திமுகவிற்கு சிக்கல்தான் போலயே.. கருத்து கணிப்பில் இதை நோட் பண்ணீங்களா?
சென்னை: தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலில் அதிமுக - பாஜக மீண்டும் கூட்டணி வைத்தால் திமுகவை விட அதிக வாக்கு சதவிகிதம் எடுக்கும் வாய்ப்புகள் உள்ளதாக கருத்து கணிப்பு முடிவுகள் விவாதங்களை எழுப்பி உள்ளன.
லோக்சபா தேர்தல் தொடர்பாக பல்வேறு கருத்து கணிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தந்தி டிவி சார்பாக தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் கருத்து கணிப்புகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. அதன் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன.

தந்தி டிவி சார்பாக 2024ல் பிப்ரவரி மாதம் எடுக்கப்பட்ட சர்வேயில் உங்கள் தொகுதியில் வெற்றிபெற போவது யார் ? என்ற கேள்விக்கு.
திமுக 43 சதவிகிதம் வாக்களித்துள்ளனர்.
அதிமுக 33 சதவிகிதம் வாக்களித்துள்ளனர்
பாஜக 12 சதவிகிதம் வாக்களித்துள்ளனர்
நாம் தமிழர் 8 சதவிகிதம் வாக்களித்துள்ளனர்
மற்றவை 4 சதவிகிதம் வாக்களித்துள்ளனர்
தந்தி டிவி சார்பாக 2024ல் பிப்ரவரி மாதம் எடுக்கப்பட்ட சர்வேயில் நீங்கள் யாருக்கு வாக்களிப்பீர்கள்? என்ற கேள்விக்கு.
திமுக 42 சதவிகிதம் வாக்களித்துள்ளனர்
அதிமுக 30 சதவிகிதம் வாக்களித்துள்ளனர்
பாஜக 13 சதவிகிதம் வாக்களித்துள்ளனர்
நாம் தமிழர் 8 சதவிகிதம் வாக்களித்துள்ளனர்
மற்றவை 7 சதவிகிதம் வாக்களித்துள்ளனர்
கவனம்: இதில் கவனிக்க வேண்டிய விஷயம்.. அதிமுக 30 சதவிகிதம் வாக்களித்துள்ளனர். பாஜக 13 சதவிகிதம் வாக்களித்துள்ளனர். இவர்கள் இருவரும் சேர்ந்தால் அந்த கூட்டணிக்கு 43 சதவிகிதம் வாக்கு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அப்படி நடக்கும் பட்சத்தில் திமுக 42 சதவிகிதம் வாக்களித்துள்ளனர். அதனால் திமுகவை விட அதிமுக - பாஜக மீண்டும் கூட்டணி வைத்தால் அவர்களுக்கு அதிக வாக்கு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆனால் கடந்த 2019 தேர்தலில் இவர்கள் கூட்டணி வைத்தும் திமுகவை விட குறைவாக வாக்குகள் பெற்றனர் என்பதே நிதர்சனம்.
2019 தேர்தல்:
திமுக கூட்டணி 53.15%
திமுக 33.52%
காங்கிரஸ் 12.61%
அதிமுக கூட்டணி 30.57%
அதிமுக 19.39%
பாஜக 3.66%
பாமக 5.36%
தேமுதிக 2.16%
நாம் தமிழர் கட்சி 3.90%
பிரதமர் வேட்பாளர்: தந்தி டிவி சார்பாக 2024ல் பிப்ரவரி மாதம் எடுக்கப்பட்ட சர்வேயில் 33 சதவிகிதம் பேர் மோடி பிரதமர் ஆக வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். ராகுல் காந்திக்கு 65 சதவிகிதம் பேர் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
2024ல் பிப்ரவரி மாதம் எடுக்கப்பட்ட சர்வேயில் 33 சதவிகிதம் பேர் மோடி பிரதமர் ஆக வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். இதுவே ராகுல் காந்திக்கு 65 சதவிகிதம் பேர் ஆதரவாக வாக்களித்துள்ளனர். பிரதமர் மோடிக்கு வாக்களிக்க விரும்பும் நபர்களின் சதவிகிதம் 27 சதவிகிதத்தில் இருந்து கடந்த 10 மாதங்களாக உயர்ந்து உயர்ந்து 33 ஆக மாறி உள்ளது.
அதுவே ராகுல் காந்திக்கு 71 சதவிகிதம் பேர் 10 மாதங்களுக்கு முன் ஆதரவு அளிக்க முன்வந்தனர். அது தற்போது 65 சதவிகிதம் ஆக உள்ளது.
அதேபோல் மீண்டும் பாஜக மத்தியில் ஆட்சியில் அமைக்கும் என்று 42 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். 56 சதவிகிதம் பேர் பாஜக ஆட்சி அமைக்காது என்று கூறியுள்ளனர். இவர்கள் பாஜகவை ஆதரிக்கவில்லை. அல்லது எதிர்க்கவும் இல்லை. ஆனால் இதுதான் தேர்தல் முடிவாக இருக்கும் என்று அவர்கள் கணித்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications