இதுதான் கடைசி முயற்சி.. கிளம்பி வரும் அமித்ஷா.. "அவருடன்" ரகசிய சந்திப்பு?.. கைகூடுமா எதிர்பார்ப்பு?
ரஜினிகாந்த்தை அமித்ஷா சந்தித்து பேசுவாரா என்ற எதிர்பார்ப்பு கூடியுள்ளது
சென்னை: ரஜினியை அவ்வளவு சீக்கிரம் விட்டுவிட பாஜகவுக்கு மனசே இல்லை.. ரஜினி என்ற ஆளுமையின் மவுசு இன்னமும் தமிழ்நாட்டில் குறையாமல் உள்ளதுதான் இதற்கு காரணம்... அதனாலேயே வரும் 21-ம்தேதி தமிழகம் வர உள்ள அமித்ஷா, ரஜினியை கண்டிப்பாக சந்தித்து பேசுவார் என்று கூறப்படுகிறது!
ரஜினியின் அரசியல் வருகை என்பது உண்மையிலேயே திமுக - அதிமுகவுக்கு லேசான நடுக்கத்தையே தந்துள்ளதாக கூறப்படுகிறது. இதை திமுக ஓபனாக காட்டிக் கொண்டது என்றால், அதிமுகவுக்கு உள்ளுக்குள்ளேயே உதறல் இருந்துள்ளது.
அதிமுகவை பொறுத்தவரை, இந்த முறை அவர் டார்கெட் செய்வது திமுகதான்.. இதற்கு நடுவில் ரஜினி கட்சியை ஆரம்பித்தால், வாக்குகள் சிதறுமே என்பது அதிமுகவின் கவலையாக இருந்திருக்கிறது.. அதேபோல, திமுகவுக்கு ஏற்படும் கவலை என்னவென்றால், 10 வருஷம் இல்லாமல் இருந்து, கஷ்டப்பட்டு மேலே எழுந்து வரும் சமயத்தில், ரஜினியை எதிர்கொள்வது என்பது பெரிய சிக்கல் என்பதுதான்.

ரஜினிகாந்த்
ஆக மொத்தத்தில் இரு திராவிட கட்சிகளின் பெருங்கவலை, ஆன்மீக அரசியல் என்ற ஒன்றை மக்கள் முன்நிறுத்தி, இந்துத்துவா ஓட்டுக்களை அப்படியே அள்ளி கொள்வார் என்பதுதான்.. அதனாலேயே இரு தரப்புமே ரஜினி வந்துவிடக்கூடாது என்பதில் மறைமுகமாக முனைப்பு காட்டியதாக சொல்லப்பட்டது. அதற்கேற்றபடி உடல்நிலையை காரணம் காட்டி ரஜினியும் ஒதுங்கி இருக்கிறார்.

அமித்ஷா
இது பாஜக கொஞ்சமும் எதிர்பாராதது.. காரணம், ரஜினியை களத்துக்கு கொண்டுவருவதில், அமித்ஷா தான் தீவிரமாக இருந்தார்.. அதற்காகவே அவர் நேரடியாகவே அழைப்பும் விடுத்ததாக சொல்லப்பட்டது.. பாஜகவை பொறுத்தவரை, திமுக, அதிமுக இருக்கும்வரை தங்கள் கட்சியின் செல்வாக்கு வளர போவதில்லை என்பதை உணர்ந்துதான, இரு கட்சிகளுக்கும் மாற்றாக, ரஜினியை பயன்படுத்தினால், தங்கள் கட்சியின் செல்வாக்கு உயரும் என்று கணக்கு போட்டு வருகிறது.

குருமூர்த்தி
இந்த முறையும் தமிழகத்தில் கால் பதிக்க முடியாது என்ற யதார்த்தத்தையும் புரிந்து வைத்துள்ளது.. உடல்நலனை காரணம் காட்டி, ரஜினி ஒதுங்கியபோதுகூட மறுநாளே குருமூர்த்தி சென்று ரஜினியை சந்தித்து பேசினார்.. ஆனால், அமித்ஷாவிடம் பேசிவிட்டுதான், அதன்பிறகு ரஜினியை சென்று குருமூர்த்தி சந்தித்தாகவும் ஒரு தகவல் கசிந்தது.

எல்.முருகன்
இப்படிப்பட்ட சூழலில்தான் அமித்ஷா வரும் 21-ம் தேதி தமிழகம் வர உள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை, அன்று அமித்ஷா வந்து போனதற்கும், இன்று வருவதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன.. அன்று இருந்த பாஜக இன்று இல்லை, இது வேற லெவல் பாஜக என்றுதான் சொல்ல வேண்டும்.. எல்.முருகனின் அதிரடிகள்தான் இதற்கெல்லாம் காரணம் என்பதையும் மறுப்பதற்கில்லை. ஒருபக்கம் வேல்யாத்திரை பரபரப்பு இருந்தாலும், அமித்ஷாவின் வருகை ரஜினியை மையப்படுத்தியே பார்க்கப்படுகிறது.

ரஜினி
அதற்கேற்றபடி ஒரு தகவலும் அரசியல் களத்தில் வட்டமடிக்க ஆரம்பமாகிவிட்டது.. அது, தமிழகம் வரும் அமித்ஷா ரகசியமாக ஒருவரை சந்திக்க போகிறராம்.. அது சாட்சாத் ரஜினியேதான் என்கின்றனர் பாஜக வட்டாரங்கள்.. ஒருவேளை ரஜினியை இழுக்க இதுதான் கடைசி முயற்சியாகவும் இருக்கலாம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். உண்மையிலேயே அமித்ஷா ரஜினியை சந்திப்பாரா, அப்படியே சந்தித்தாலும் அரசியல் வருகை குறித்து பேச்சு நடத்தப்படுமா? அல்லது உடல்நலம் குறித்த விசாரிப்புடன் இந்த சந்திப்பு முடிந்துவிடுமா? என்பன போன்ற கேள்விகள் இப்போதே எழ ஆரம்பித்துவிட்டன!
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications