அண்ணாமலை "அவுட்".. செங்கோட்டையன் "இன்".. அமித் ஷா பாடம் கற்பிப்பார்.. அதிமுக, பாஜகவில் பூகம்பம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: எடப்பாடி மற்றவர்களுக்கு விசுவாசம் இல்லை என்று புலம்புகிறார். ஆனால் அவருக்கே விசுவாசம் கிடையாது. அவரே சசிகலாவிற்கு துரோகம் செய்தவர்தானே. செங்கோட்டையன் எடப்பாடிக்கு எதிராக ரிவால்ட் செய்யலாம் இல்லை என்றால் அரசியலை விட்டே போகும் வாய்ப்பு கூட உள்ளது என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் முடிந்த நிலையில் அது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், அமித் ஷா அண்ணாமலை மீது கோபமாக உள்ளார். அதனால்தான் கோவையில் அண்ணாமலைக்கு அமித் ஷா வேலை பார்க்கவில்லை. அவருக்கு ரிசல்ட் வேண்டும்.

Will Amit Shah teach a lesson to Annamalai and Sengottaiyan planing to go against Edappadi Palanisamy

இங்கே வந்த அமித் ஷா அண்ணாமலைக்கு பிரச்சாரம் செய்யவில்லை. அதிமுக - பாஜக கூட்டணி உடைத்ததை அமித் ஷா விரும்பவில்லை. அண்ணாமலை மீது அமித் ஷா வெறுப்பில் இருக்கிறார். இவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை என்ற கோபத்தில் இருக்கிறார். அதுவும் கூட்டணியை கூட அண்ணாமலை சரியாக அமைக்கவில்லை என்ற கோபம் அமித் ஷாவிற்கு உள்ளது.

அண்ணாமலைக்கு அமித் ஷா பாடம் கற்பிப்பார். அண்ணாமலை சொன்னதை கேட்கவில்லை. நிலைமை மோசமானால் வாக்கு சதவிகிதம் அதிகரித்தாலும் கூட சமயங்களில் அண்ணாமலை பதவி போகலாம். ஏனென்றால் அண்ணாமலைக்கு மட்டுமல்ல அமித் ஷாவிற்கும் தெரியும். அண்ணாமலை பிளான் வேலை பார்க்காது என்று அமித் ஷாவிற்கு தெரியும்.

அதேபோல் அதிமுகவில் வேட்பாளர்கள் பலர் கட்சிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள். கட்சிக்கு தொடர்பே இல்லாத நிர்வாகிகள் களமிறக்கப்பட்டனர். அதிமுகவில் சென்னையிலேயே ஜெய வர்தன் தவிர மற்றவர்களுக்கு பணம் கொடுக்கப்படவில்லை. இவருக்கு மட்டுமே இங்கே வேலைகள் நடந்தன. மற்ற யாருக்கும் வேலைகள் நடக்கவே இல்லை. இது எடப்பாடி பழனிசாமிக்கும் எதிராக திரும்பும்.

இதனால்தான் சென்னையில் எடப்பாடி பழனிசாமி கண்டித்து பேசினார். இது எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கூட செல்லலாம். 15 சதவிகிதத்திற்கு கீழ் சென்றால் எடப்பாடிக்கு சிக்கல் ஆகும். ரிவால்ட் ஆகும் பட்சத்தில் அது எடப்பாடிக்கு சிக்கல் ஆகும். எடப்பாடியை விட்டு போக மாட்டார்கள். சிலர் எதிர்க்கலாம். சிலர் கடுமையாக விமர்சனங்களை வைக்கலாம். ஆனால் எடப்பாடியை விட்டு போவார்களா என்பது சந்தேகம்.

கொங்கு மண்டல கேங்க் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள். அவர்களிடம் பணம் இருக்கிறது. முணுமுணுப்பு இருக்கிறது. ஆனால் எதிர்ப்பு வெல்லாது. அவர்களிடம் பணம் வேறு உள்ளது. ஓ பன்னீர்செல்வம் ஜெயிக்க வாய்ப்பு இல்லை. அவர் ஜெயித்துவிட்டார் என்றால் அது எடப்பாடிக்கு சிக்கல் ஆகும். பெரிய அளவில் எடப்பாடிக்கு அது பிரச்சனையாக முடியும்.

சசிகலா பக்கம் யாரும் செல்ல மாட்டார்கள். ஆனால் எடப்பாடியே சசிகலாவிற்கு எதிராக செல்லலாம். செங்கோட்டையன் எடப்பாடிக்கு எதிராக செல்லலாம். அவர் எதிர்ப்பு காட்டலாம். அல்லது அரசியலில் இருந்தே அவர் செல்லலாம். நமக்கு வயதாகிவிட்டது. இனி போட்டியிட வேண்டாம். நாம் ஒதுங்கி இருப்போம் என்று அவர் ஓரமாக செல்லலாம்.

எடப்பாடி மற்றவர்களுக்கு விசுவாசம் இல்லை என்று புலம்புகிறார். ஆனால் அவருக்கே விசுவாசம் கிடையாது. அவரே சசிகலாவிற்கு துரோகம் செய்தவர்தானே. செங்கோட்டையன் எடப்பாடிக்கு எதிராக ரிவால்ட் செய்யலாம் இல்லை என்றால் அரசியலை விட்டே போகும் வாய்ப்பு கூட உள்ளது என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+