Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"எது கேட்டாலும் தெரியாதுன்றார்! புதிய வழக்கு தொடர்வேன்! டி.ஆர்.பாலுவை விடமாட்டேன்!" சீறிய அண்ணாமலை

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக எம்பி டி.ஆர்.பாலு மீது புதிய அவதூறு வழக்கை தொடருவேன் என தெரிவித்த அண்ணாமலை இன்று வழக்கு தொடர்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்ட "திமுக ஃபைல்ஸ்" எனும் குற்றச்சாட்டில் எனக்கு எதிராக பொய்யான கருத்துகள் தெரிவிக்கப்பட்டதாக கூறி அவர் மீது திமுக பொருளாளரும் எம்பியுமான டி.ஆர்.பாலு, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடர்ந்தார்.

annamalai tr baalu

அப்போது தனக்கு எதிராக வழக்கு தொடர்ந்த டி.ஆர்.பாலுவிடம் அண்ணாமலை தரப்பில் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது. வழக்கு விசாரணை முடிந்து வெளியே வந்த அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியிருப்பதாவது: என் மனைவியின் பெயரில் சொத்து வாங்கியிருப்பதாக புதிய அவதூறை டி.ஆர்.பாலு சொல்லியிருக்கிறார். அப்போது என் மனைவி எங்கே படித்தார், வேலை செய்கிறாரா, எங்கு பணியாற்றுகிறார், சொத்து வாங்கப்பட்டது எப்படி உள்ளிட்ட கேள்விகளை கேட்டேன்.

ஆனால் அதற்கு எந்தப் பதிலும் அவர் கூறவில்லை. எனவே நாளை (அதாவது இன்று) டி.ஆர்.பாலு மீது புதிதாக ஒரு அவதூறு வழக்கை தொடர இருக்கிறோம். கட்சிக்கு பொறுப்பானதால்தான் நான் சென்னையில் குடியேறினேன். கட்சி சார்பாக என் நண்பர்கள் வழங்கிய பணத்தை நான் வாடகையாக செலுத்தினேன். இது எல்லாவற்றையும் அவர் கூறிய அவதூறு வழக்கில் நான் சுட்டிக் காட்ட போகிறேன்.

நான் வாங்கிய விவசாய நிலம் எப்படி வாங்கப்பட்டது என்பது பொது தளத்தில் உள்ளது. நேர்மையான அரசியல்வாதியாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் நான், கடினமான பாதையில் பயணித்துதான் ஆக வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் அண்ணாமலை இன்றைய தினம், டி.ஆர்.பாலு மீது வழக்கு தொடுப்பார் என சொல்லப்படுகிறது. அண்ணாமலை வழக்கு தொடுக்கும் அளவுக்கு டி.ஆர்.பாலு எந்த சூழலில் அவர் மனைவி மீது அவதூறு குற்றச்சாட்டை முன் வைத்தார் என்பதை பார்க்கலாம்.

நேற்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடந்த குறுக்கு விசாரணையின் போது சேது சமுத்திர திட்டத்தின் மூலம் ஊழல் செய்து 10 கப்பல்களை வாங்கியதாக டி.ஆர்.பாலு மீது மு.க.அழகிரி ஏற்கனவே முன் வைத்த குற்றச்சாட்டு குறித்து அண்ணாமலை குறுக்கு விசாரணை செய்தார். அவை கேள்வி பதில் வடிவில் இதோ:

அண்ணாமலை: உங்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டின் காரணமாகவே 2009-ல் மத்திய அமைச்சர் பதவி கொடுக்கப்படவில்லை என அழகிரி கூறியுள்ளார். நீங்கள் கப்பல்கள் வாங்கியுள்ளதாக அழகிரி மட்டுமல்ல சுப்ரமணியன் சுவாமி, ஜெயலலிதா போன்றவர்களும் குற்றம் சாட்டியுள்ளனர். அவர்கள் மீதும் ஏன் வழக்கு தொடரவில்லை. ஒரத்தநாடு அருகேயுள்ள வடசேரி கிராம மக்கள் ஒவ்வொரு ஆண்டும் ஏப்.9-ஐ ஏன் கருப்பு தினமாக அனுசரிக்கின்றனர் என உங்களுக்குத் தெரியுமா?.

டி.ஆர்.பாலு: எனக்கு ஏன் அமைச்சர் பதவி தரவில்லை என்பது குறித்து அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங்கிடம் தான் கேட்க வேண்டும். ஜெயலலிதாவின் அறியாமையை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. வடசேரி கிராம மக்கள் கருப்பு தினம் அனுசரிப்பது குறித்தும் எனக்கு எதுவும் தெரியாது. அது நான் மட்டுமே சார்ந்த பிரச்சினை அல்ல. நீங்கள் கூட (அண்ணாமலையிடம்) ரூ. 5 லட்சம் மதிப்பில் கைக்கடிகாரம் அணிந்து கொண்டு, உங்கள் மனைவியின் பெயரில் சொத்துகளை வாங்கி ஊழல் குற்றச்சாட்டில் ஈடுபட்டதால்தான் உங்களது மாநிலத் தலைவர் பதவி பறிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அது உண்மையா?

அண்ணாமலை: என் மனைவி என்ன படித்துள்ளார். எவ்வளவு சம்பாதிக்கிறார். எந்த முன்னணி எம்என்சி நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். நாங்கள் இருவரும் அந்த விவசாய நிலத்தை வாங்க வருமான வரி செலுத்தி இருக்கிறோம் என்பதும், அதற்காக ரூ. 2.50 கோடி கடன் பெற்றுள்ளோம் என்பதும் உங்களுக்குத் தெரியுமா?

டிஆர் பாலு: அதை தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. இவ்வாறாக இந்த விசாரணை நடந்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+