டெல்லி பிளானை ‘ஸ்மெல்’ பண்ணிட்டாராமே அண்ணாமலை.. அதான் இந்த பேச்சா? சொல்வது சீனியர் பத்திரிகையாளர்!
அண்ணாமலை தேசியப் பொறுப்பிற்குச் செல்லவிருக்கிறாரா என்பது பற்றி நம்முடன் பேசியுள்ளார் பத்திரிகையாளர் ப்ரியன்.
சென்னை : அண்ணாமலையின் சமீபத்திய பேச்சுகள், அவர் தமிழ்நாடு பாஜக தலைவர் பொறுப்பில் இருந்து விலகப்போவதை உணர்த்துவதாக அரசியல் பார்வையாளர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில், பாஜக தேசிய தலைமையின் திட்டத்தை 'ஸ்மெல்' செய்ததால் தான் அண்ணாமலை இவ்வாறு பேசுகிறார் என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் நின்று என்னுடைய சேமிப்பையெல்லாம் இழந்துவிட்டேன், இப்போது கடனாளியாக நிற்கிறேன். அரசியல் என்பது பணத்தை முன்னிலைப்படுத்தும் விஷயமாக மாறிவிட்டது என அண்மையில் வேதனையுடன் பேசியிருந்தார் அண்ணாமலை.
முன்னதாக, அதிமுகவுடன் கூட்டணி தொடர்ந்தால், பாஜக மாநிலத் தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் எனப் பேசினார் அண்ணாமலை. அண்ணாமலையின் இந்த கருத்துகள் பா.ஜ.கவினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.

அண்ணாமலை பணம்
இதுகுறித்து ஒன் இந்தியா தமிழுக்கு பேட்டியளித்துள்ள மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் கூறுகையில், "அண்ணாமலை தமிழ்நாட்டு அரசியல் தெரிந்துதானே அரசியலுக்கு வந்தார். தமிழ்நாடு மட்டுமல்ல, எல்லா மாநிலத்திலும் பணம் கொடுக்கும் அரசியல் பல காலமாகவே இருக்கிறது. சமீபத்தில் குஜராத் மாநில சட்டமன்றத் தேர்தலின்போது கூட 400 கோடி ரூபாய் பணம் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது. பணம் கொடுப்பது தேர்தலில் சகஜமாகிவிட்டாலும் கூட அண்ணாமலை பணம் கொடுக்காமல் தேர்தலைச் சந்திக்கலாம். அவரும் பணம் கொடுத்துத்தான் ஆக வேண்டும் என்று கட்டாயமில்லை.

அம்பலம்
தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்த செலவு கணக்கில் அண்ணாமலை சொந்தப் பணத்தில் இருந்து எவ்வளவு செலவு செய்தேன் என்ற இடத்தில் எந்த தொகையையும் குறிப்பிடவில்லை. கட்சி 15 லட்சம் கொடுத்தது, மற்றவர்களிடம் இருந்து 25 லட்சம் பணம் வாங்கியதாக தெரிவித்திருக்கிறார். அப்படியென்றால் அவர் தனது சொந்த சேமிப்புப் பணத்தை பத்திரமாகத்தானே வைத்திருக்கிறார். அண்ணாமலை சொல்லும் பொய்கள் அடுத்த நாளே அம்பலப்பட்டு விடுகின்றன. இதுவரை இருந்த தமிழ்நாட்டு தலைவர்களிலேயே அண்ணாமலை ரேர் பீஸாக இருக்கிறார். தான் வித்தியாசமாக இருக்கிறேன் என்பதைக் காட்டப்போய் அடிக்கடி ‘பல்பு' வாங்கி விடுகிறார்.

அண்ணாமலையின் அரசியல்
சில லட்சங்கள் மதிப்புள்ள ரஃபேல் வாட்ச் கட்டியிருக்கிறார் அண்ணாமலை. ரசீது கேட்டால் ஏப்ரல் மாதத்தில் தான் காட்டுவேன் என்கிறார். ஊழல் எல்லா அரசியல் கட்சிகளிலும் புரையோடிப் போய்க் கிடக்கிறது. ஆனால், இவர்தான் புதிதாக ஊழலைக் கண்டுபிடித்தது போல குற்றம்சாட்டுவது ஏன்? ஊழல் அரசியல் என விமர்சிக்கும் அண்ணாமலை, ஆடியோ வீடியோ அரசியல், ஸ்பை கேமரா அரசியல், மூத்த நிர்வாகிகளை கட்டம் கட்டும் அரசியலைச் செய்து வருகிறார்.

டெல்லிக்கு போகும் அண்ணாமலை
மாநில தலைவர் பதவியில் இருந்து தூக்கிவிட்டு, தேசிய செயலாளர் போன்ற பதவியை கொடுத்து, ஏதாவது ஒரு மாநிலத்துக்கு பொறுப்பாளராக அண்ணாமலையை நியமிக்க தேசிய தலைமை திட்டமிடுகிறது என்று நினைக்கிறேன். அதை உணர்ந்தே அண்ணாமலை இங்கிருந்து கிளம்பும் வகையில் பேசுகிறார் என்று நினைக்கிறேன். இங்கே மூத்த தலைவர்கள் பலரின் எதிர்ப்பு இருந்தும் பதவியில் தொடர்வதற்கு காரணம் அண்ணாமலைக்கு மேலிட ஆதரவு இருப்பதுதான் எனச் சொல்கிறார்கள். கர்நாடகா தேர்தல் முடிந்த பிறகு அவர் டெல்லிக்கே செல்ல வாய்ப்பிருக்கிறது. அண்ணாமலை பேசுவதை எல்லாம் பார்த்தால் சீக்கிரம் டெல்லி செல்லும் திட்டம் இருப்பதாகவே தெரிகிறது.

நட்டா, சுதாகர் ரெட்டி
2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் தான் கூட்டணி என தமிழ்நாட்டுக்கு வந்த பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா, மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி ஆகியோர் சொன்ன பிறகு, அதிமுகவுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என அண்ணாமலை பேசுவதற்கான தேவையே இல்லை. இந்த அடிப்படையில் பதவியை ராஜினாமா செய்வேன் என்று பேசுவதெல்லாம் சும்மா ஒரு பரபரப்புக்காக, அரசியல் களத்தில் விவாதத்தைக் கிளப்புவதாகத்தான் இருக்கும்.

எந்த நேரத்திலும்
தேர்தலைப் பொறுத்தவரை எல்லாத் தொகுதிகளிலும் வேட்பாளர் மோடி தான். அவர் முகத்தைக் காட்டித்தான் வாக்கு கேட்கிறார்கள். அண்ணாமலையை வைத்து யாரும் ஓட்டு போடப்போவதில்லை. தேசிய தலைமை நினைத்தால் எந்த நேரத்திலும் அண்ணாமலையை மாற்றக்கூடும். அதிமுக கூட்டணி விவகாரத்திலும், ஓபிஎஸ் - ஈபிஎஸ் பஞ்சாயத்து விவகாரத்திலும் பாரபட்சம் காட்டுவதாகத் தெரிந்தால் அவரை தூக்கி டெல்லியில் போட்டுவிட்டு வேறு ஒருவரை பொறுப்பில் அமர்த்தி விடுவார்கள்." எனக் கூறியுள்ளார்.
-
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
Annamalai Letter: தமிழக பாஜகவில் ஒதுக்கப்பட்டேன்! 5 பக்க கடிதத்தில் குமுறிய அண்ணாமலை -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அப்போ ரஜினிக்கு பதில் அண்ணாமலை.. இனி விஜய், உதயநிதிக்கு மாற்றாக மாற முடியுமா? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா?












Click it and Unblock the Notifications