விமான அவசர கதவை திறந்து "விளையாடி".. அண்ணாமலை வாயை திறப்பாரா? மௌனம் சம்மதமா? பாய்ந்து வரும் திமுக
சென்னை: டிசம்பர் 10 சென்னை-திருச்சி, இண்டிகோ விமானத்தின் அவசரக்கதவைத்திறந்து விளையாடிய பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா, உடன் பயணித்த பாஜக அண்ணாமலை அந்த விவகாரம் பற்றி வாயை திறப்பார்களா என்று திமுக கேள்வி எழுப்பி உள்ளது.
சென்னையில் இருந்து திருச்சி நோக்கி வந்த இண்டிகோ விமானத்தின் எமர்ஜென்சி கதவுகளை பயணிகள் சிலர் திறந்ததாக புகார்கள் வைக்கப்பட்டு உள்ளன. இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்த விமான கட்டுப்பாட்டு இயக்குனரகமான டிஜிசிஏ உத்தரவிட்டுள்ளது.
கடந்த டிசம்பர் 10ம் தேதி இண்டிகோ நிறுவனத்தின் 6E 7339 விமானம் சென்னையில் இருந்து திருச்சி நோக்கி வந்துள்ளது. இந்த விமானம் 10.05 மணிக்கு புறப்பட வேண்டியது. ஆனால் 142 நிமிடங்கள் தாமதமாக அதன்பின் விமானம் புறப்பட்டு சென்றுள்ளது.

இண்டிகோ
இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள் இருவர், தென்னிந்தியாவை சேர்ந்த இரண்டு அரசியல் தலைவர்கள், விமானம் எடுக்கும் முன் இதன் கதவுகளை திறந்ததாக கூறப்பட்டது. திமுக நிர்வாகிகள் பலர் இது தொடர்பாக இரண்டு தென்னிந்திய அரசியல் தலைவர்கள் மீது புகார்களை வைத்தனர். இந்த நிலையில்தான் இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்த விமான கட்டுப்பாட்டு இயக்குனரகமான டிஜிசிஏ உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்று கண்டுபிடிக்க முடியும். இது தொடர்பாக விசாரணை அறிக்கை சமர்பிக்கும்படியும் விமான கட்டுப்பட்டு இயக்குனரகமான டிஜிசிஏ உத்தரவிட்டுள்ளது என்று ஏஎன்ஐ ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த பயணி யார். அவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது தொடர்பான விவரங்கள் இதில் வெளியிடப்படவில்லை.

அண்ணாமலை
இந்த விவகாரத்தில் அந்த பயணி அல்லது பயணிகள் யார் என்ற விவகாரத்தை இண்டிகோவோ, டிஜிசிஏஓ வெளியிடவில்லை. ஆனால் இதில் திமுக தரப்பு நேரடியாக பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா மற்றும் பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை ஆகியோர் மீது விமர்சனம் வைத்து உள்ளது. இது தொடர்பாக திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் சரவணன் அண்ணாதுரை செய்துள்ள போஸ்டில், டிசம்பர் 10 சென்னை-திருச்சி, இண்டிகோ விமானத்தின் அவசரக்கதவைத்திறந்து விளையாடியது பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா என பயணிகள் தெரிவித்துள்ளனர்! என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? தெரிவிப்பார்களா டிஜிசிஏ. கூட பயணம் செய்த அண்ணாமலை வாய் திறப்பாரா? இல்லை மவுனம் சம்மதம் என்பாரா???

காலம்
காலச்சக்கரம் தான் எவ்வளவு வேகமாக சுழல்கிறது, தமிழ் நாட்டின் அமைச்சர்களுக்கு விமானம் கூட ஏறத்தெரியாது என பகடியம் செய்த அண்ணாமலை இன்று இன்னொரு பாஜக எம்பியுடன் சேர்ந்து விமானத்தின் அவசரக்கதவுகளை திறந்து விளையாடியிருக்கிறார்! என்ன கொடும சரவணா இது? #பாஜக_பரிதாபங்கள், என்று குறிப்பிட்டு உள்ளார். திமுக எம்பிகளுக்கு விமானத்தில் பயணம் செய்ய தெரியாது என்று அண்ணாமலை கூறிய பழைய புகாரை பகிர்ந்து திமுக சரவணன் அண்ணாதுரை இந்த புகாரை வைத்துள்ளார்.

செந்தில் பாலாஜி
இது தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி செய்த போஸ்டில், "கடந்த 10 ஆம் தேதி 'போட்டோஷாப்' கட்சியின் மாநிலத் தலைவரும், இளைஞரணியின் தேசியத் தலைவரும் விமானத்தில் கிளம்பும் போது பொறுப்பே இல்லாமல் விமானத்தின் 'எமர்ஜென்சி' கதவை திறந்து விளையாடி இருக்கிறார்கள். விதிமுறைகளின்படி பயணிகள் விமானத்தில் இருந்து இறக்கி மீண்டும் சோதனை செய்யப்பட்டு நோகடிக்கப்பட்டிருக்கிறார்கள். விமானம் 3 மணி நேர தாமதம் ஆகியிருக்கிறது. மன்னிப்பு கடிதம் எழுதுவதே பரம்பரை வழக்கம் என்பதால், அன்றும் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்திருக்கிறார்கள். ஊடகங்களில் இந்தச் செய்தி ஏன் வரவில்லை?" என்று குறிப்பிட்டு உள்ளார்.

தேசப்பற்று
இது தொடர்பாக செந்தில் பாலாஜி இன்று செய்துள்ள ட்விட்டில், 2 ஆர்வக்கோளாறுகள் விமானத்தின் Emergency கதவை திறந்து விளையாடியது பற்றி டிச-29 அன்று நான் கேள்வியெழுப்பி இருந்தேன். இன்று DGCA விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. வெளிநாட்டு வாட்ச் கட்டுவது தேசப்பற்றென உருட்டிய பொய்யர், சுதந்திர காற்றை சுவாசிக்க கதவை திறந்தேன் என உருட்டாமல் இருந்தால் சரி, என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications