17 நாள்களில் திமுகவுக்கு நெருக்கடி! மீண்டும் செந்தில் பாலாஜி கைது? சேகர்பாபுவின் நிலை? மோடி ‘மூவ்’..

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரு வாரத்திற்குள் தமிழ்நாட்டில் அரசியல் வட்டாரத்தில் பல அதிரடியான விசயங்கள் நடைபெற உள்ளதாக டெல்லி வட்டார பத்திரிகையாளர் ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.

மோடிக்கு எதிராக 'இந்தியா' கூட்டணியை வலுவாகக் கட்டமைத்தவர்களில் முதல்வர் ஸ்டாலினும் ஒருவர். தொடர்ந்து திமுக மோடியையும் பாஜகவையும் விமர்சித்து வருகிறது.

Will be Senthil Balaji Again arrested in other case

குறிப்பாகத் தமிழ்நாட்டில் முதல்வர் VS ஆளுநர் மோதல் போக்கு நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது.

இன்று தொடங்கி சட்டமன்ற கூட்டத்தொடரில் கூட ஆளுநர் ஆர் என் ரவி, உரையை வாசிக்காமல் வெளிநடப்பு செய்துள்ளார். தேசிய கீதம் முதலில் பாடப்படாததுதான் பிரச்சினைக்குக் காரணம் என்று ஆளுநர் விளக்கம் அளித்துள்ளார்.

சபாநாயகர் அப்பாவு, அவையிலேயே ஆளுநரை, 'நீங்கள் கேட்சே மற்றும் சாவர்க்கர் வழியில் வந்தவர்கள்' என்று நேருக்கு நேராகக் கூறி இருக்கிறார்.

இதனால் வரும் காலங்களில் தேர்தல் நெருங்க நெருங்க ஆளுநர் மற்றும் திமுக மோதல் போக்கு அதிகரிக்கும் என்கிறார்கள்.

Will be Senthil Balaji Again arrested in other case

இன்னும் சில நாள்களில் திமுக தரவு அமைச்சர்கள் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தப்படுவது உறுதி என்று கூறி இருக்கிறார் டெல்லி மூத்த பத்திரிகையாளர் ராஜகோபாலன்.

அவர், சில நாள்களில் செந்தில் பாலாஜி வேறு வழக்கு ஒன்றிலும் கைது ஆவார் என்று கூறி இருக்கிறார்.

அடுத்த என்ன நடக்கப் போகிறது? அது பற்றி ராஜகோபாலன் தெரிவித்த தகவல்கள் என்ன?

"இன்னும் 4 நாள்களில் தமிழ்நாட்டில் முக்கிய அரசியல் தலைவர்களின் வீடுகளில் ரெய்டு நடத்த உள்ளனர். அது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது.

Will be Senthil Balaji Again arrested in other case

செந்தில் பாலாஜியை வேறு வழக்கில் கைது செய்வதற்காக வேலை நடைபெற்று வருகின்றன. அவர் அந்த வழக்கில் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

செந்தில் பாலாஜி பூர்வீக வீட்டில் சிசிடிவி காட்சிப் பதிவுகளைச் சேகரித்துள்ளனர். சேகர்பாபு தொடர்பான இடங்களில் கூட ரெய்டு நடத்தப்பட்டுள்ளது எனக் கசியும் தகவல்கள் பற்றி கேள்விக்கு, ராஜகோபாலன் சில விளக்கங்களை அளித்துள்ளார்.

"நான் சேகர்பாபு விசாரணை தொடர்பாக மத்திய அமலாக்கத்துறை உயர் அதிகாரிகளிடம் பேசினேன். செந்தில் பாலாஜி வகையாகச் சிக்கிக் கொண்டுள்ளார் என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினார்கள்.

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் மிக நெருக்கமாக இருக்கக் கூடிய 8 அமைச்சர்கள் ஈடி சிக்கல்களில் மாட்டிக் கொண்டுள்ளார்கள். அவர்கள் எப்படித் தப்பப் போகிறார்களோ என்று தெரியவில்லை.

Will be Senthil Balaji Again arrested in other case

ஆனால், எனக்குக் கிடைத்துள்ள தகவலின் படி சேகர்பாபுவை ஒரு வழி செய்ய அதிகாரிகள் காத்துக்கொண்டுள்ளனர். செந்தில் பாலாஜிக்கு அடுத்துள்ள அறையை துரைமுருகனுக்காகத்தான் அதிகாரிகள் தயார் செய்து வைத்திருந்தனர்.

ஆனால், கடைசி கட்டத்தில் என்ன நடந்ததோ தெரியவில்லை. அவர் அதிலிருந்து தற்காலிகமாகத் தப்பி இருக்கிறார். துரைமுருகனுக்காகத் தயாரான அந்த அறை இப்போது சேகர்பாபுக்குத்தான் இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

அவருக்கு அடுத்து அனிதா ராதாகிருஷ்ணனுக்கு மிகப் பெரிய செக் காத்திருக்கிறது. இன்னும் ஒரு வாரத்தில் படபடவென்று இந்த வேலைகள் வேகம் எடுக்கும். அது உறுதி.

Will be Senthil Balaji Again arrested in other case

வருகின்ற 27 ஆம் தேதி பிரதமர் சென்னை வருகிறார். அவர் வருவதற்கு முன்னதாக உள்ள 17 நாள்களில் தமிழ்நாட்டில் மிகப்பெரிய களேபரங்கள் காத்திருக்கின்றன.

அதைப்போல் எடப்பாடி பழனிசாமிக்கும் சில நெருக்கடிகள் காத்திருக்கின்றன. திமுகவும் அதிமுகவும் ஒன்றாக இணைந்து பாஜகவைத் தடுக்கலாம் எனத் திட்டமிட்டுவருகின்றன. தேசிய கட்சி உள்ளே வந்துவிடக்கூடாது என்பதில் இந்த இருவருக்கும் ஒத்த கருத்துகள் உள்ளன. அதையும் விரைவில் மோடி உடைக்க இருக்கிறார்.

2024 தேர்தலுக்குப் பிறகு அதிமுக ஏறக்குறைய மதிமுக நிலைக்குச் சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை" என்கிறார்.

Will be Senthil Balaji Again arrested in other case
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+