"சீன்"லயே இல்லையே.. "அவரை விடாதீங்க".. டெல்லியின் செம மூவ்.. குழப்பத்தில் அதிமுக.. அப்ப சசிகலா?
டிடிவி தினகரன் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் இறங்கி உள்ளார்
சென்னை: அதிமுகவை சசிகலா கைப்பற்றுவாரா? இல்லையா? என்பது ஒருபக்கம் இருந்தாலும், பாஜகவின் குறி வேறு கட்சியில் விழுந்துள்ளதாக தெரிகிறது..!
தினகரனை பொறுத்தவரை, மிக தேர்ந்த அரசியல்வாதி.. நுணுக்கம் தெரிந்தவர்.. ஆனால் ஏனோ ஆர்கே நகர் தேர்தலுக்கு பிறகு பெரிய அளவில் தன்னை நிலைநிறுத்தி கொள்ள முடியவில்லை.
அவ்வப்போது நடந்து வரும் உள்ளாட்சி தேர்தல்களில் தினகரனின் வாக்கு சதவீதம் அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்து வருகிறது.

வரவேற்பு
எனவே, தன்னுடைய கட்சியை தூக்கி நிறுத்த நிச்சயம் சசிகலா உதவுவார் என்று கணிக்கப்பட்டது.. அதற்காகத்தான், சசிகலா ஜெயிலில் இருந்து ரிலீஸ் ஆன அன்றிலிருந்தே, அவரையே சுற்றி சுற்றி வந்தார்.. பெங்களூருரில் இருந்து சென்னை வந்து சேரும் வரை பிரம்மாண்ட வரவேற்பு தந்தார்.. எனினும், சசிகலாவின் திட்டம் வேறு மாதிரியாக இருந்ததை தினகரனே எதிர்பார்க்கவில்லை.. அமமுக பொறுப்பை ஏற்க சொல்லியும் மறுத்துவிட்டார் சசிகலா.. அமமுகவுக்காக சசிகலா பிரச்சாரமும் செய்யவில்லை, அக்கட்சி வேட்பாளர்களுக்காக ஆதரவும் தரவில்லை.

வேட்பாளர்கள்
மாறாக, கட்சியை கலைக்கும்படி தினகரனுக்கு உத்தரவிடவும், இதனால் தினகரன் மேலும் நொந்துதான் போனார்.. என்ன ஆனாலும் அமமுகவை கலைக்க முடியாது என்ற தினகரனின் திட்டவட்ட முடிவால், இரு தரப்பிலும் புகைச்சல் கிளம்பி நீடித்து வருகிறது.. இப்படிப்பட்ட சூழலில்தான், அதிமுகவை கைப்பற்ற சசிகலா தீவிரம் காட்டி வருகிறார்.. சசிகலா நினைத்தால், எடப்பாடி விஷயத்தில் அதிரடி காட்ட முடியும் என்றாலும், மென்மையான போக்கையே கையில் எடுத்து வருகிறார்.. மற்றொரு பக்கம், "அதிமுகவின் ஒட்டுமொத்த முடிவுக்காக நான் காத்து கொண்டிருக்கிறேன்' என்று தினகரனும் ஓபனாக சொல்லிவிட்டார்.

பாஜக தலைவர்கள்
ஆனால், பாஜக சசிகலா குறித்து பெரிதாக வாய் திறக்கவில்லை.. மேலிட ஆதரவை தொடர்ந்து எதிரபார்த்து காத்து கிடக்கும் சசிகலாவுக்கு இதுவரை எந்த சிக்னலும் கிடைக்கப்பெறவில்லை.. ஆனால், சசிகலாவை வைத்து கட்சிக்கு பெரிதாக லாபம் எதுவுமில்லை என்று பாஜக தரப்பு நினைக்கிறது.. தென்மண்டலங்களில் மட்டுமே செல்வாக்கு இருப்பவரை பொறுப்பில் அமர்த்தினால், அதிமுக பலவீனப்படுவதுடன், சாதி ரீதியான முத்திரை கட்சிக்கு அதிகமாக விழுந்து விடும் என்று யோசிக்கிறது. இதனால் பாஜகவுக்கும் லாபம் கிடைக்க போவதில்லை என்பதால், சசிகலாவை ஆதரிக்க தயங்குகிறது.

டிடிவி தினகரன்
மாறாக, தினகரன் மீது பாஜகவின் கண் விழுந்துள்ளது.. இது இப்போதில்லை.. கடந்த எம்பி தேர்தலின்போதே பாஜகவுக்கு இந்த எண்ணம் இருந்ததாக சொல்லப்பட்டது.. ஆனால், தினகரனோ, சிறுபான்மையினர் ஓட்டுக்களை குறி வைத்து, எஸ்டிபிஐ, ஓவைசி கட்சிகளுடன் கூட்டணி வைத்தார்.. சிறுபான்மையினர் ஓட்டுக்களை எவ்வளவுக்கெவ்வளவு அமமுக பிரிக்கிறதோ, அது அப்படியே திமுகவுக்கு செல்ல வேண்டிய வாக்குகள்தான் என்றும் சொல்லப்பட்டது.. இதைதான் பாஜகவும் எதிர்பார்த்தது.. ஒருவேளை ஓட்டு வங்கி தினகரனுக்கு அதிகமானால், இதை வைத்து வேறு விதமான காய்நகர்த்தல்களை ஆரம்பிக்கவும் பாஜக பிளான் செய்திருந்தது..

அமமுக
இப்போதும் அதே திட்டத்தைதான் முன்னெடுப்பதாக தெரிகிறது.. வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுகவை இணைத்துக் கொண்டு அவர்களுக்கு கணிசமான லோக்சபா தொகுதிகளை ஒதுக்கலாம் என மேலிடம் விரும்புகிறதாம். ஆரம்பத்திலிருந்தே தினகரன் மீது டெல்லி மேலிடத்திற்கு சாப்ட் கார்னர் இருந்து வருகிறது. அந்த வகையில் அமமுக மீது தன்னுடைய கவனித்தை கூடுதலாகவே திருப்பி, அக்கட்சியின் அசைவுகளை கவனித்து வருகிறதாம் பாஜக.. அப்போதுதான், பலம்பொருந்திய ஸ்டாலினின் திமுகவை ஓரளவு கட்டுப்படுத்தலாம் என்றும் கணக்கு போடுகிறதாம்.

விசிட்
ஏற்கனவே ஒருமுறை டெல்லிக்கு திடீர் விசிட் அடித்துவிட்ட தினகரன், பாஜகவை விமர்சிப்பதை அப்போதிருந்தே நிறுத்திவிட்டார்.. எனவே, எப்போது வேண்டுமானாலும் பாஜகவுடன் இணக்கமான போக்கை கையாள தினகரன் தயாராகவே இருக்கிறார்.. கடந்த எம்பி தேர்தலின்போது, பாஜகவுடன் கூட்டணியே கிடையாது என்றார்..

ஒவைசி
இதை நம்பி தான் ஒவைசி போன்ற இஸ்லாமிய கட்சிகளும் இந்த சட்டமன்ற தேர்தலில் நம்பி கூட்டணி வைத்தன.. ஆனால், "நாங்க ஒன்றும் எப்போதுமே பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்று சொல்லவில்லையே" என்று ஒரே போடாக போட்டு சிறுபான்மையினருக்கே ஜெர்க் தந்திருந்த தினகரனின் மனநிலை இன்று முற்றிலுமாக மாறி உள்ளதாகவே தெரிகிறது. அதேசமயம், அதிமுகவுடன் இணையவும் தயாராகிவிட்டார் என்றே சொல்லலாம்..

சசிகலா
நேற்றுகூட செய்தியாளர்களிடம் பேசும்போது, "அரசியல் என்பது போர்க்களம். யாரும் கட்சியை விட்டு சென்றுவிட்டார்கள் என்பதற்காக நான் வருத்தப்பட்டது கிடையாது. அடுத்தவர்களை நம்பி நான் கட்சி ஆரம்பிக்கவில்லை. ஒருவேளை அதிமுகவுடன் இணையும் சூழ்நிலை ஏற்பட்டால் தொண்டர்கள், கட்சி நிர்வாகிகளின் மனநிலையை புரிந்துகொண்டு அவர்களின் விருப்பப்படி செயல்படுவேன். அமமுகவை நான் விரும்பி ஆரம்பிக்கவில்லை. வேறு வழியில்லாமல் தான் கட்சியை ஆரம்பித்து அதிமுகவை எதிர்த்தோம்" என்றார்.. அதாவது, பாஜக, அதிமுக இரு கட்சிகளுடன் இணைய தயார் என்பதே சசிகலாவுக்கும், பாஜகவும், எடப்பாடிக்கும் தினகரன் சொல்ல வரும் மெசேஜ் என தெரிகிறது.. பார்ப்போம்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications