அவ்வளவு சொல்லியும் கேட்கல.. அமித் ஷா கோபம்... அண்ணாமலை பதவி பறிபோகுது? என்ன நடக்குது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமித் ஷா அண்ணாமலை மீது கோபமாக உள்ளார். அதனால்தான் கோவையில் அண்ணாமலைக்கு அமித் ஷா வேலை பார்க்கவில்லை. அவருக்கு ரிசல்ட் வேண்டும், என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் முடிந்த நிலையில் முடிவிற்காக கட்சிகள் காத்து இருக்கின்றன. இந்த நிலையில்தான் பாஜகவில் நடக்கும் மோதல்கள் குறித்து மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

Will BJP chief be changed soon Is Amit Shah angry with Annamalai

பேட்டி: அதில், பாஜகவை பொறுத்தமட்டில் கட்சியில் இருந்தவர்கள் வெளியே போவதாக குற்றச்சாட்டு வருகிறது. தேர்தல் முடிந்த நிலையில் சிலர் வெளியேற வாய்ப்பு உள்ளதாக செய்திகள் வருகின்றன. இதற்கு காரணம் நிறைய உள்ளது. என் மண் என் மக்கள் என்று அண்ணாமலை நடத்திய யாத்திரைக்கு பின் பெரிய அளவில் பாஜகவிற்கு கூட்டம் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் பாஜகவிற்கு பூத் கமிட்டிகள் கூட இல்லை. அடிப்படையாக் பாஜக போட்டியிட்ட இடங்களில் பூத் கமிட்டி இல்லை. அண்ணாமலை போட்டியிட்ட கோவையில் கூட பூத் கமிட்டிகள் இல்லை. பாஜகவிற்கு இதனால் பெரிய பலன் இல்லை. அண்ணாமலை யாத்திரையால் இந்த பலன் ஏற்பட்டு இருக்க வேண்டும். ஆனால் அப்படி ஏற்படவில்லை. உள்ளூர் அளவில் சேர்ந்தவர்கள் யாரும் கட்சியில் பெரிதாக பலன் கொடுக்கவில்லை.

குற்றப்பின்னணி செய்த சிலர் கட்சியில் சேர்ந்தனர். ஆனால் அவர்கள் எல்லாம் தேர்தல் பணிகளை செய்தனர். இவர்கள் தேர்தலுக்கு பணம் கொடுத்துள்ளனர். மேலிடத்தில் இருந்து இறக்கப்பட்ட பணம் கொஞ்சம் கொஞ்சமாக சுருட்டப்பட்டு கீழே செல்லவே இல்லை. பாஜகவின் மேலிடத்தில் இருந்து கொடுக்கப்பட்ட பணம் மக்களுக்கு செல்லவே இல்லை. அண்ணாமலை தலைமைக்காக வேலை பார்த்த பலருக்கு பணம் கிடைக்கவில்லை.

போஸ்டர் மோதல்: இதனால்தான் போஸ்டர் அடித்து ஓட்டிக்கொண்டு இருக்கின்றனர். பணம் கொடுப்பதில் பிரச்சனை என்று போஸ்டர் அடித்தனர். சிவகங்கை, சென்னை கிழக்கு, திருவண்ணாமலை, கோயம்புத்தூர், ஈரோடு என்று பல இடங்களில் பிரச்சனை. நாம் தோற்க போகிறோம் என்று அவர்களுக்கு தெரிந்து எதற்கு காசு கொடுக்க வேண்டும் என்று திட்டமிட்டு பணத்தை சுருட்டி உள்ளனர்.

68 ஆயிரம் பூத்களில் யாரும் வேலை பார்க்கவில்லை. திமுகவில் மட்டுமே வேலை பார்த்தனர். அதிமுகவில் கூட பூத் கமிட்டிகளில் வேலை பார்க்கவில்லை. இப்படி இருக்க 4-5 இடங்களில் வெற்றிபெறுவோம் என்று பாஜக கூறுவது முட்டாள்தனம். பாஜக வெற்றிபெற வாய்ப்பில்லை என்று நிர்வாகிகள் வேலை பார்க்கவில்லை. அதிமுகவும் வேலை பார்க்கவில்லை. ஓ பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் வெற்றிபெற வேண்டும் என்று சில இடங்களில் வேலை பார்த்தனர். அதை தவிர வேறு எங்கும் அதிமுகவும் வேலை பார்க்கவில்லை.

அமித் ஷா கோபம்: பாஜக வாக்கு வங்கியை 10 சதவிகிதத்திற்கு மேல் அண்ணாமலை உயர்த்தினார் என்றால் அண்ணாமலைக்கு பிரச்சனை இல்லை. அண்ணாமலையை பாஜக மாற்றாது. இடம் வின் பண்ணாதது வேறு விஷயம். ஆனால் வாக்கு வங்கியை உயர்த்தினால் விட்டுவிடுவார்கள். ஆனால் அமித் ஷா அண்ணாமலை மீது கோபமாக உள்ளார். அதனால்தான் கோவையில் அண்ணாமலைக்கு அமித் ஷா வேலை பார்க்கவில்லை. அவருக்கு ரிசல்ட் வேண்டும்.

இங்கே வந்த அமித் ஷா அண்ணாமலைக்கு பிரச்சாரம் செய்யவில்லை. அதிமுக - பாஜக கூட்டணி உடைத்ததை அமித் ஷா விரும்பவில்லை. அண்ணாமலை மீது அமித் ஷா வெறுப்பில் இருக்கிறார். இவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை என்ற கோபத்தில் இருக்கிறார். அதுவும் கூட்டணியை கூட அண்ணாமலை சரியாக அமைக்கவில்லை என்ற கோபம் அமித் ஷாவிற்கு உள்ளது என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+