"ஹோப்" தந்த சசிகலா.. ஸ்ட்ரைட்டா பாஜக தலைவர்களிடம் வைத்த முக்கிய கோரிக்கை?.. பரபர டெல்லி

பாஜக தலைவர்களுக்கு சசிகலா முக்கிய கோரிக்கை வைத்துள்ளாராம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சசிகலாவின் அரசியல் வருகை மீண்டும் சூடுபிடித்துள்ளது.. அதிமுக தலைவர்கள், தனக்கு இணங்கி வராத சூழலில், சில அதிரடிகளையும் சசிகலா நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சிறையில் இருந்து வந்ததில் இருந்தே, அதிமுக மேலிடத்தை அணுகாமல், மாறாக தொண்டர்களை அணுக தொடங்கினார் சசிகலா.. அமமுக நிர்வாகிகளைவிட, அதிமுக நிர்வாகிகளை தன் பக்கம் இழுப்பதில் கவனம் செலுத்தியும் வருகிறார்.

ஆரம்பத்தில் ஆடியோக்கள், அடுத்து அறிக்கைகளை வெளியிட்டு தன் முக்கியத்துவத்தை உணர்த்தி கொண்டுள்ளார்.. தொண்டர்களுக்கும் தெம்பூட்டிக் கொண்டிருக்கிறார்.. அடித்தளத்தையும் விடாமல் பலமாக்கி கொண்டிருக்கிறார்.

 பாஜக மேலிடம்

பாஜக மேலிடம்


ஆனால், பாஜக மேலிடத்தின் ஆதரவு அதிமுக தலைவர்களுக்கு மறைமுகமாகவும், நேரடியாகவும் கிடைத்து கொண்டிருப்பதும், தன்மீதான நம்பிக்கை பாஜக மேலிடத்துக்கு குறைவாக இருப்பதும்தான் காரணம் தன்னுடைய அரசியல் சறுக்கலுக்கு காரணம் என்பதை சசிகலா லேட்டாகவே உணர்ந்துள்ளதாகவே தெரிகிறது.. அதனால்தான், 3 மாதங்களுக்கு முன்பு ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்து பேசினார் சசிகலா.. பாஜக மேலிடத்தில் தன்னை பற்றி சிபாரிசு செய்யுமாறு கேட்டதாகவும், சசிகலாவுக்கு உதவி செய்ய லதா ரஜினிகாந்த் முன்முயற்சி எடுத்து வருவதாகவும் செய்திகளும் அப்போது கசிந்தன..

சசிகலா

சசிகலா

இதற்கடுத்தப்படியாக கடந்த மாதம் விஜயசாந்தியை சசிகலாவை சந்தித்து பேசினார்.. விஜயசாந்தி, பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினர் என்பதால் இந்த சந்திப்புக்கு அரசியல் சாயம் அதிகமாகவே பூசப்பட்டது.. எதிர்பார்ப்புகளும் ஏராளமாய் எகிறின.. செய்தியாளர்களிடம் அன்றைய தினம் விஜயசாந்தி பேசும்போது, "விரைவில் நல்லது நடக்கும், அரசியலில் நாளை எது வேண்டுமானாலும் நடக்கலாம்" என்று ஒரு பஞ்ச் வைத்து விட்டுப்போனார்.

 பாஜக மேலிடம்

பாஜக மேலிடம்

சசிகலாவை சந்தித்து விட்டு சென்ற விஜயசாந்தி, சசிகலா விசயம் தொடர்பாக பாஜகவின் தேசிய செயலாளர் ஜே.பி.நட்டாவிடம் பேசினதாகவும, அப்போது, ஹெச்.எம். ஜி-யை சந்திக்க சசிகலா விருபுவதாகவும் (ஹோம் மினிஸ்டர் அமித்ஷாவைதான் ஹெச்.எம். என்று சொல்வார்கள்), ஆனால், அவரை சந்திப்பதற்கு முன்பாக உங்களை சந்திக்க விரும்புகிறார். அவருக்காக 20 நிமிடம் நேரம் ஒதுக்க இயலுமா ஜி? என்று விஜயசாந்தி கேட்டாராம்.. அதற்கு ஜே.பி.நட்டாவோ, 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடியட்டும், பார்க்கலாம் என்றாராம்..

வெற்றி

வெற்றி

எனவே, 5 மாநில தேர்தல் ரிசல்ட் வந்ததுமே, பாஜகவில் இருந்து சசிகலாவுக்கு சிக்னல் கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.. அதற்கேற்றவாறு 4 மாநிலங்களில் பெற்ற வெற்றியால் பாஜகவும் குஷியில் இருக்கிறது.. இப்படிப்பட்ட சூழலில்தான் ஒரு முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.. ஓபிஎஸ் தம்பி ஓ.ராஜாவை அதிமுக கட்சியில் இருந்து நீக்கி ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டாக அறிவித்ததையடுத்து, கட்சி தலைமை இரட்டை வேடம் போடுவது உறுதியாகிவிட்டது என்பது தெரிந்ததுமே சசிகலா அப்செட் ஆகிவிட்டாராம்..

உதவிகள்

உதவிகள்

இவர்களை இங்கு நம்பினால் வேலைக்காகாது, டெல்லி மேலிட தலைவர்களை சந்திக்க முயற்சி எடுத்துள்ளதாகவும், இதற்காக சிலரின் உதவியையும் நாடி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. டெல்லி பாஜக தலைவர்களிடம், மறுபடியும் என்னை அதிமுகவில் சேர்க்க ஓபிஎஸ், எடப்பாடியிடம் பரிந்துரை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளாராம்.. அதுமட்டுமல்ல, கடந்த சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு தமிழகத்தில் பாஜகவை அதிமுக தலைமை கழட்டி விட்டுவிட்டது..

Recommended Video

    தேனி: சசிகலா, டிடிவி தினகரன் அதிமுகவில் சேர்ப்பா? செல்லூர் ராஜூ சொன்ன சூப்பர் பதில்!
     தனித்து போட்டி

    தனித்து போட்டி

    உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக தனித்தே போட்டியிட்டது. இனி வரும் தேர்தல்களிலும் பாஜகவை அதிமுக சேர்த்து கொள்ளாது.. அதனால், தன்னை அதிமுகவில் சேர்த்தால், தமிழகத்தில் மறுபடியும் அதிமுக - பாஜக கூட்டணி தொடர நடவடிக்கை எடுப்பேன் என்று சசிகலா பாஜக தலைவர்களிடம் உறுதி அளித்துள்ளாராம்.. இதற்கு மேலிடம் என்ன பதில் தர போகிறது என்று தெரியவில்லை.. பார்ப்போம்..!

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+