இவருமா.. விஐபிகளுக்கு குறி.. திராவிட மண்ணில் பாஜக வைக்கும் பதியம்.. பலிக்குமா திட்டம்?
திராவிட மண் காவி மண்ணாக மாற்றும் முயற்சி சாத்தியமாகுமா
சென்னை: தமிழகத்தில் அடுத்தடுத்த விஐபிக்களுக்கு குறி வைத்து பாஜக காய் நகர்த்தி வருவது எந்த அளவுக்கு சாத்தியம் என்ற கேள்வி எழுகிறது.
திராவிட இயக்கத்தின் சமூகநீதிக் கொள்கையையும் மாநில சுயாட்சி உரிமையையும் இன்று நாடு முழுவதும் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளது.
ஆனாலும் திராவிட இயக்கத்தை வீழ்த்துவோம் என்ற முழக்கத்தை பாஜக முன்வைத்து வருகிறது.. இது பெரியார் மண் என்றாலும், அதை காவியாக்கும் முயற்சியிலும் இறங்கி வருகிறது.

திராவிட மண்
இதற்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் பதிலடிகளை அவ்வப்போது தந்து வருகின்றன... குறிப்பாக முதல்வராக ஸ்டாலின் பதவியேற்றதில் இருந்து இதற்கு எதிர்வினையாற்றி வருகிறார்.. "திராவிட இயக்கத்தை வீழ்த்த முடியாது, பெரியாரின் பெரும் பணியை மறைக்க முடியாது, தமிழின் ஆட்சியாக, தமிழ் இனத்தின் ஆட்சியாக திமுக ஆட்சி இருப்பதை பார்த்து பலருக்கும் வயிற்றெரிச்சலாக இருக்கிறது. ராவிட இயக்கம்தான் தமிழர்களின் மகத்தான இயக்கம். இது தமிழர் இயக்கம் இல்லை என்றால் வேறு எது தமிழர் இயக்கம்? என்றும் கேள்வி எழுப்பி வருகிறார்.

ராமராஜ்ஜியம்
ஆனாலும் பாஜக விடவில்லை.. "இன்றைய மிக முக்கிய காலத்தில் நம் நாடு அனைவரின் வளர்ச்சியையும் உள்ளடக்கி ராமராஜ்யத்தை நோக்கி முன்னேறி வருகிறது" என்று ஆளுநர் ரவி பேசும் அளவுக்கு பாஜக தன் சுயரூபத்தை காட்ட ஆரம்பித்தது.. இதற்கு மேலும் தமிழக கட்சிகள் பொறுக்கவில்லை.. "ஆளுநரே.. ராமராஜ்ஜியம் உங்கள் ராஜ்பவனிலேயே இருக்கட்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சிகள் உட்பட மொத்த கட்சியும் கொந்தளித்து விட்டது..

உருட்டல் மிரட்டல்
"இந்த மிரட்டல் உருட்டல் பாணிகள் காவல்துறைக்கு கைகொடுக்கும், ஆனால் அரசியலில் எடுபடாது.. இது நாகாலாந்து அல்ல, தமிழகம் என்பதை ஆளுநர் உணர வேண்டும்... இங்கே பெரியண்ணன் மனப்பான்மையோடு அரசியல் செய்ய நினைத்தால், கொக்கென்று நினைத்தாயோ கொங்கனவா' என்பதை நினைவுப்படுத்துகிறோம்" திமுக கொந்தளித்ததை பார்த்து கவர்னர் மாளிகையே அதிர்ந்துதான் போனது.

இளையராஜா
இதற்கு பிறகுதான், விஐபிக்களின் மீதான குறியை பாஜக திருப்பியது.. முதல் நபராக விழுந்தவர் இளையராஜா.. பாஜகவுக்கு ஆதரவு நிலைப்பாட்டை குஷ்பு, குக செல்வம், விபி துரைசாமி போன்ற அரசியல் தலைவர்கள் கையில் எடுத்தாலும், அதிர்ந்து போகாத இந்த தமிழகம், இளையராஜா கருத்தை பார்த்ததுமே ஆவேசமானது.. முதல்நபராக திருமாவளவன்தான் இந்த விஷயத்தில் தலையிட்டு, விஷயத்தை சாந்தப்படுத்தினார்..

பாக்யராஜ்
சமூகத்தில் யார் மக்களோடு மக்களாக நெருக்கமாக உள்ளனரோ, அவர்களைச் சந்திப்பார்கள். இப்படித் தான் ஆர்எஸ்எஸ் காரர்கள் இளையராஜாவைச் சுற்றிவளைத்து இருக்கக்கூடும். இளையராஜா போன்ற நபர்களைக் குறி வைப்பதே அவர்களின் நோக்கம். இளையராஜா பாவம் என்று அவர் மீது இரக்கம் காட்டவே விரும்புகிறேன் என்று பேசியபிறகுதான், இந்த விஷயத்தின் காரம் குறைந்தது.. இதற்கு பிறகு, பாக்யராஜ் ஆரம்பித்தார்.. என்ன நினைத்து பேசினார் என்று தெரியவில்லை.. பேசின அடுத்த சில மணி நேரத்திலேயே, மன்னிப்பு கேட்டார்..

பாக்யராஜ் மன்னிப்பு
இளையராஜாவும் சரி, பாக்ராஜூம் சரி, 40 வருடங்களுக்கு மேலாக கட்டிக்காத்த நற்பெயர், சாதனை, ஆளுமை என அனைத்தையும், இழக்கும் நிலைமைக்கு சென்றுவிட்டனர்.. பாஜகவை இந்த திராவிட மண் எந்த காலத்திலும் ஏற்க தயாராக இல்லை என்பதையே, இவர்களின் எதிர்ப்புகள் நிரூபித்துள்ளன.. நேற்றைய தினம் ஐஜேகே தலைவரும், திமுக எம்பியுமான பாரிவேந்தர், மோடியை புகழ்ந்தாலும் கூட, அது அரசியல் ஆதாயமாக பார்க்கப்படுகிறதே தவிர, அவர் விஷயத்தை தமிழக மக்கள் பெரிதாக கண்டுகொள்ள மாட்டார்கள் என்றே நம்பப்படுகிறது..

பாக்கியராஜ்
அன்றே ரஜினி விஷயத்தில் எவ்வளவோ முட்டி மோதி பார்த்து, ஒருவழியாக அவரை கைவிட்டது பாஜக.. இனியும் பாஜகவின் முயற்சி தமிழகத்தில் தொடரும் என்றே தெரிகிறது.. இளையராஜா, பாக்யராஜ் போன்றவர்களுக்கு மக்களிடம் மீண்டும் நல்ல பெயர் கிடைக்குமா என்பது தெரியவில்லை.. ஒருமுறை எச்.ராஜா ஒரு பேட்டியில் "திராவிடக் கட்சிகளின் அழிவில் தான் தமிழகத்தின் எதிர்காலம் உள்ளது" என்று சொல்லியிருந்தார்.. ஆனால், "யதார்த்த அரசியல்" வேறு பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்பதை பாஜக இனியாவது உணருமா என்று தெரியவில்லை..

காவி மண்
இன்னொன்றையும் இங்கு சொல்ல தோன்றுகிறது.. அடுத்த விஐபி யார் என்று தெரியவில்லை.. ஆனால், இப்படி தமிழ்நாட்டில் விஐபிக்களை ஆள் பிடிப்பது என்பது தொடர் தோல்வியில்தான் பாஜகவுக்கு அமையகூடும்.. அதுமட்டுமல்ல, "திறமை" என்பது ஒரு மனிதனின் தனிப்பட்ட விஷயம் தானே தவிர, அதுவே ஒருவரின் மொத்த மதிப்பீடும், அளவீடும் இல்லை என்பதை தமிழக மக்கள் நன்கு உணர்ந்து கொண்டார்கள் என்பதை வலிய உரக்க சொல்ல வேண்டி உள்ளது..!
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications