"பாயிண்ட்டை" பிடித்த டெல்லி.. பாஜக தலைகள் வைத்த புள்ளி.. கோலம் போடும் இரட்டையர்கள்.. அப்ப "அவர்"?

எடப்பாடி ஒரு கணக்கு போட்டால், அதற்கு முன்பு ஓபிஎஸ் வேறு ஒரு கணக்கு போடுகிறார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரு முக்கியமான விஷயம், அதிமுகவுக்குள் ஓடிக் கொண்டிருக்கிறது.. கட்சி தலைவர்களின் அடுத்தடுத்த மூவ்களால், தொண்டர்களும் பரபரத்து வருகின்றனர்.

கடந்த 2014-ல், எம்பி தேர்தலின்போதே, அதிமுக இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சி என்ற அந்தஸ்தை பெற்றுவிட்டது. எனவே, டெல்லி மீது ஒரு பிடிப்பு அதிகமாகவே ஏற்பட்டது.

அதனால், அங்கே ஒரு தலைமை அலுவலகம் கட்ட முடிவும் செய்யப்பட்டது.. ஜெயலலிதா இருந்தபோதே, இந்த எண்ணம் இருந்தது.. அப்போதே அதற்கான பணிகளையும் தொடங்கி வைத்தார் ஜெயலலிதா.

 ஜெயலலிதா

ஜெயலலிதா

ஆனால், இப்போதுதான், எடப்பாடி ஆட்சி காலத்தில்தான் அந்த பணிகள் வேகம் எடுத்தன.. டெல்லி ஷாகேத் பகுதியில் பிரமாண்ட கட்சி ஆபீஸ் தயாராகி கொண்டிருக்கிறது.. 3 அடக்கு கட்டிடம் அது.. மத்திய அரசுக்கு சொந்தமான இடத்தில், 25 சென்ட் நிலத்தில் இந்த ஆபீஸ் உருவாகி வருகிறது... அதிமுக தலைமை மற்றும் முக்கிய நிர்வாகிகள், டெல்லி செல்லும்போதெல்லாம் இங்கே தங்கி கொள்ளும் வகையில் வசதிகள் அமைக்கப்படுகின்றன.

 எடப்பாடி தீவிரம்

எடப்பாடி தீவிரம்

தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம்தான், இந்த டெல்லி அதிமுக ஆபீஸின் கட்டுமான பணிகளை கவனித்துக்கொள்கிறார்... எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது டெல்லி சென்று கட்டிடப் பணிகளையும் அடிக்கடி பார்வையிட்டு வந்தார்.. ஆனால், உட்கட்சிப் பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரிக்கவும் அவரால் டெல்லி கட்டிடப் பணியில் தீவிர கவனம் செலுத்த முடியவில்லை.. தற்போது இந்த கட்டிட பணிகள் நிறைவடைந்துள்ளன..

 எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

இந்த கட்டிட திறப்பு விழாவை திமுக ரேஞ்சுக்கு நடத்த எடப்பாடி பழனிசாமி மும்முரமாகி உள்ளாராம்.. குறிப்பாக, அதிமுகவில் உட்கட்சித் தேர்தல், பொதுக்குழு கூட்டம் என எல்லாம் முடிந்தபிறகு, இந்த ஆபீஸை திறக்கலாம் என்ற யோசனை எடப்பாடி பழனிசாமிக்கு உள்ளதாம்.. எப்படியும் இந்த ஜுன் மாதத்தில், திறப்பு விழாவை பிரம்மாண்டமாக நடத்த பிளான் செய்து வருகிறார் என்கிறார்கள்.. தேசிய அளவில் இந்த ஆபீஸ் பேசப்பட வேண்டும் என்பதால், பிரதமர் மோடி, அமித்ஷா, நட்டா என பாஜகவின் சீனியர் தலைவர்களை திறப்பு விழாவுக்குஅழைக்கவும் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

 திறப்பு விழா

திறப்பு விழா

அதனால், டெல்லி சென்று தலைவர்களை அழைக்க எடப்பாடி தீவிரம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.. இப்படிப்பட்ட சூழலில்தான், இந்த திறப்பு விழாவுக்கு, ஓபிஎஸ் தன் மகன், எம்பி ரவீந்திரநாத்தை அனுப்பி மேலிட தலைவர்களிடம் பேச வைத்தாராம்.. அதாவது, எடப்பாடிக்கு முன்பு தான் முந்திக்கொள்ள வேண்டும் என்பதால், ஓபிஎஸ் இப்படி கணக்கு போட்டாராம்.. ஆனால், டெல்லி மேலிடமா, "2 பேருமே சேர்ந்து வந்து அழைப்பு தரலாம்.. இப்படி தனித்தனியாக வர தேவையில்லை" என்று கறாராக சொல்லிவிட்டதாம்.

 காரணம் இருக்கு

காரணம் இருக்கு

இதையடுத்து, வேறுவழியில்லாமல், இரட்டை தலைவர்கள் ஒன்றாக கைகோர்த்து, மேலிட தலைவர்களை விழாவுக்கு அழைக்க உள்ளனர்.. பாஜக தலைவர்கள் இப்படி சொன்னதற்கு ஒரு காரணம் இருக்கிறதாம்.. அதாவது, ஓபிஎஸ் - எடப்பாடி இருவருமே சேர்ந்தே இருந்தால்தான் கட்சிக்கு பலம் என்று பாஜக நினைக்கிறது.. ஒரே அணியில் இவர்கள் இருக்க வேண்டும் என்றும், இவர்கள் கையில்தான் கட்சி இருக்க வேண்டும் என்றும் நினைக்கிறதாம்..

 சசிகலா பிளான்?

சசிகலா பிளான்?

அப்போதுதான், கட்சிக்கு பலம், தொண்டர்களுக்கும் நிம்மதி, சசிகலாவும் உள்ளே வர முடியாது என்று பாஜக நம்புகிறதாம்.. பாஜக மேலிடத்தைசமாதானப்படுத்த சசிகலா எத்தனையோ முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், அந்த முயற்சிகளும் சமீபகாலமாக ஓரளவு பலன்தர தொடங்கிவிட்டதாக செய்திகள் கசிந்த நிலையில், இப்படி ஒரு தகவல் அதிமுக வட்டாரத்தில் பரபரத்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+