ஸ்தம்பிக்கும் சென்னை? அரசு பஸ்கள் நாளைக்கு ஓடாதா? இதென்ன புதுசா கிளம்பிருச்சு.. தமிழக அரசு ஒரே போடு
சென்னை: மத்திய அரசுக்கு எதிராக தொழிற்சங்கத்தினர் நடத்தும் போராட்டத்திற்கு போக்குவரத்து தொழிற்சங்கங்களும் கலந்து கொள்ளும் என தெரிகிறது. இதையடுத்து, முக்கிய உத்தரவு ஒன்றினை தமிழக அரசு பிறப்பித்திருக்கிறது.
மத்திய அரசுக்கு எதிராக தொழிற்சங்கத்தினர் நாளை நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். நாளை 16ம்தேதி அனைத்து தொழிற்சங்கங்களும் வேலைநிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.

போராட்டம்: நாடு முழுவதும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், தனியார் மயமாக்கலை கைவிட வேண்டும், குறைந்தபட்ச ஊதியத்தை அதிகப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் இந்த போராட்டத்தை முன்னெடுக்கின்றன.
சென்னையில் அண்ணா சாலையில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு நாளை நடைபெற உள்ள இந்த வேலை நிறுத்த போராட்டத்தில், தபால், தொலைதொடர்பு துறை, ரெயில்வே, மின்சார வாரியம், தொழிற்சாலைகள், போக்குவரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த தொழிலாளர்கள் பங்கேற்க உள்ளனர். இவர்களுடன் விவசாய சங்கத்தினரும் பங்கேற்க உள்ளனர்.
கண்டக்டர்கள்: நாளை போராட்டத்தில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் முழுமையாக பங்கேற்றும் என்றும், இதனால் பஸ் போக்குவரத்து பாதிக்கப்படும் என்றும் சிஐடியு தொழிற்சங்க செயலாளர் சவுந்தரராஜன் அறிவித்திருந்தார். அந்தவகையில், இந்த போராட்டத்தில் போக்குவரத்து கழக தொழிலாளர்களும் டிரைவர், கண்டக்டர்களும் கலந்து கொள்வார்கள் என தெரிகிறது. இதனால் பஸ் போக்குவரத்து சேவை பாதிக்கப்படும் சூழலும் ஏற்பட்டுள்ளது.
அதனால்தான், சீரான பஸ் போக்குவரத்து நடைபெறுவதற்கான தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் ஆல்பிஜான் வர்கீஸ், கிளை மேலாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறார். அதில் உள்ளதாவது :
போராட்டம்: "தமிழக அரசு போக்கு வரத்து கழகங்களில் செயல்படும் சில தொழிற் சங்கங்கள், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (16-ந் தேதி) அகில இந்திய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிகிறது.
எனவே போக்குவரத்து டிரைவர் கண்டக்டர்கள், தொழிலாளர்கள் அனைவரும் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்காமல் வழக்கம் போல் பணிக்கு வரவேண்டும். டிரைவர், கண்டக்டர்களுக்கு 16-ந் தேதி வழங்கப்பட்ட விடுமுறையாவும் ரத்து செய்யப்படுவதோடு, வார ஓய்வு, பணி ஓய்வில் உள்ளவர்களும் கட்டாயம் பணிக்கு வர வேண்டும்.
நடவடிக்கை: அவ்வாறு பணிக்கு வராதவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கையும், வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளுமாறு தூண்டிவிடும் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படும்" என தெரிவித்துள்ளார். இந்த சுற்றறிக்கை அனைத்து பணிமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.. நோட்டீஸ் போர்டிலும் ஒட்டப்பட்டிருக்கிறது.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications