விடாத சம்மர்.. பெங்களூரை போல.. சென்னையில் தண்ணீர் பஞ்சம் ஏற்படுமா? இதை நோட் பண்ணுங்க
சென்னை: இந்த வருடம் பெங்களூரில் நிலவும் தண்ணீர் பஞ்சம் போல சென்னையில் நிலவ வாய்ப்பு இல்லை என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் அடுத்த மழை வரை பயன்படுத்துவதற்கான தேவையான நீர் உள்ளது. அதேபோல் நிலத்தடி நீர் அளவும் போதுமாக உள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளில் 72.08% நீர் இருப்பு உள்ளது.

செம்பரம்பாக்கம் - 81.78%
புழல் - 82.42%
பூண்டி - 62.7%
சோழவரம் - 27.38%
கண்ணன்கோட்டை - 90.2% உள்ளதால் தண்ணீர் பஞ்சம் ஏற்பட வாய்ப்பு குறைவு என்கிறார்கள்.
பெங்களூர் நிலை: கடுமையான தண்ணீர் பஞ்சம் காரணமாக பெங்களூரில் பல பகுதிகளில் தண்ணீர் விநியோகம் தடைப்பட்டு உள்ளது. ஏற்கனவே தனியார் டேங்கர்கள் விலையை உயர்த்துவதாக அங்கே குடியிருப்பாளர்கள் புகார் கூறுகின்றனர். பெங்களூருவின் மக்கள் தொகையில் 60 சதவீதம் பேர் டேங்கர் தண்ணீரை நம்பியுள்ளனர்.
இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் டேங்கர் நிறுவனங்களே தண்ணீர் வழங்க முடியாமல் தவிக்க தொடங்கி உள்ளன.
பெங்களூரில் நிலவும் தண்ணீர் பஞ்சம் தொடர்பாக தன்னார்வலர் ஒருவர் செய்துள்ள போஸ்ட் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Citizens Movement, East Bengaluru என்ற பக்கம் செய்துள்ள போஸ்டில், எங்கள் தன்னார்வலர் ஒருவருக்கு ஹர்லூர் பகுதியில் உள்ள ஒரு மாடியில் தங்கியிருந்த ஒருவரிடமிருந்து அவசரமான தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் அவர், "என் வாழ்நாளில் நான் இப்படி ஒரு மோசமான சூழ்நிலையில் இருந்ததில்லை. எனது கழிப்பறையில் தண்ணீர் இல்லாததால் இன்று நான் கழிப்பறைக்கு செல்லவில்லை. நான் 2BHKக்கு 40 ஆயிரம் ரூபாய் வாடகை செலுத்துகிறேன், எனக்கு ஒரு வாரமாக தண்ணீர் கிடைக்கவில்லை. காலையில் 30 நிமிடங்களுக்கு தண்ணீர் வந்தபோது, நான் தூங்கியதால் எடுக்க முடியவில்லை.
நான் இரவு ஷிப்ட் வேலை செய்வதால் சீக்கிரம் எழுந்திருக்க முடியாது. இங்கு சொத்து வாங்க திட்டமிட்டிருந்தேன். ஆனால் இப்போது நான் அதை வாங்க மாட்டேன். தண்ணீர் இல்லாத இந்த ரம்மியமான இடத்தில் தங்குவதை விட, என் கிராமத்தில் இருப்பது நல்லது" என்றார்.
விலைவாசி கொடுத்து, தண்ணீர் கூட கிடைக்காமல், தண்ணீரைக் கொண்ட நல்ல இடத்திற்குச் செல்ல மக்கள் திட்டமிடுவது ஒருவகையில் நல்லதுதான்! இருப்பினும், ரியல் எஸ்டேட் வளர்ச்சித் தூண்களில் ஒன்றாக இருக்கும் #BrandBengaluru க்கு இந்த நிலைமை நன்றாக இல்லை! மழைக்காகக் காத்திருக்காமல், நீண்ட கால தீர்வைக் காண தீவிர நடவடிக்கைகளை எடுங்கள், என்று அந்த நபர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அப்டேட்; இப்போது இதே நிர்வாகி பணியை விட்டு விலகுவதாக குறிப்பிட்டு உள்ளார். அவர், நான் டெல்லிக்கு செல்கிறேன். பெங்களூரில் இருக்க முடியாத காரணத்தால் பணி மாறி டெல்லிக்கு செல்கிறேன். இங்கே சமாளிக்க முடியாது. தண்ணீர் இல்லாத இந்த மோசமான சூழ்நிலையில் சமாளிக்கவே முடியாது என்று கூறியுள்ளார்.
கோரிக்கை: அதேபோல் அங்கே வசிக்கும் குடியிருப்பாளர் ஒருவர் செய்துள்ள போஸ்ட் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
போஸ்ட்: அதில், எங்கள் குடியிருப்பில் தொடர்ந்து 24 மணி நேரமும் தண்ணீர் விநியோகம் செய்து ஒரு மாதத்திற்கும் மேலாகிறது. இப்போது நிலைமை மோசமாக உள்ளது. மக்கள் வாழக்கூடிய சூழலை விட மிக மோசமாக உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.
பகலில் தண்ணீர் இல்லை, இரவில் கிடைக்கும் போது சேறு கலந்த தண்ணீர் தான் குளிப்பதற்கு கிடைக்கிறது. அது பயன்படுத்த தகுதியற்றது. துவைப்பதற்கும் சாப்பிடுவதற்கும் ஈரமான துடைப்பான்கள் மற்றும் டிஷ்யூ பேப்பர்களை பயன்படுத்த குடியிருப்பாளர்கள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
பெரும்பாலான மக்கள் வீடுகளை காலி செய்துள்ளனர். மற்றவர்கள் தற்காலிக தங்குமிடங்களுக்குச் சென்றுள்ளனர். கழிவறை அறையில் இருந்து .. மனித மலத்தின் துர்நாற்றத்தை நீங்கள் தொலைதூரத்திலிருந்து கூட உணருவீர்கள். அந்த அளவிற்கு பலரும் தண்ணீர் இல்லாமல் குடியிருப்புகளில் கஷ்டப்பட்டு வருகிறார்கள்.
அருகிலுள்ள ஃபோரம் மாலுக்குத்தான் பலரும் கழிப்பறையை பயன்படுத்த செல்கின்றனர். அந்த அளவிற்கு நிலைமை மோசமாக உள்ளது. சமையலைப் பற்றி பேசினால், கண்ணீரே வந்துவிடும்.
பாத்திரங்கள் சுத்தம் செய்யப்படாததால் வெளியில் இருந்து ஆர்டர் செய்வதைத் தவிர வேறு வழியில்லை. சிலர் ஒரு ஜோடி ஆடைகள் மற்றும் துண்டுகளுடன் ஜிம்மிற்குச் சென்று குளித்துவிட்டு திரும்பி வருகிறார்கள். 1cr+ கொடுத்த வாங்கிய வீட்டுக் கடனுக்காக Emi ஐச் செலுத்தும்போது தாங்க முடியாத அளவுக்கு ஏமாற்றமும் வேதனையும் வருகிறது., என்றுள்ளார்.












Click it and Unblock the Notifications