Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இது தோனிக்கு தெரியுமா? சிஎஸ்கே போட்டிகளுக்கு முன்.. கடைசி நேரத்தில் நடக்கும் ஷாக் சம்பவங்கள்! பகீர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிஎஸ்கே போட்டிகளுக்கு டிக்கெட் கிடைக்காமல் போவது ஒரு பக்கம் பெரிய அளவில் சர்ச்சையாகி உள்ள நிலையில் இதை வைத்து இன்னொரு வகையான மோசடியும் நடக்க தொடங்கி உள்ளது.

சிஎஸ்கே அணிகள் சென்னையில் ஆடும் சேப்பாக்கம் ஆட்டங்களில் எல்லாம் டிக்கெட் விற்பனை மோசடி நடப்பதாக புகார் எழுந்துள்ளது. அதாவது ரசிகர்கள் ஆன்லைனிலோ, நேரிலோ டிக்கெட் வாங்க முடியாமல், கடைசியில் பிளாக்கில் டிக்கெட் வாங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் போட்டிகளுக்கு ஆப்லைன், ஆன்லைன் டிக்கெட்டுகள் முறையாக விற்பனை செய்யப்படுவது இல்லை என்ற கடுமையான புகார்கள் உள்ளன.

Will CSK take action against black ticket sale for the IPL matches in the Chennai Chepauk stadium?

இதனால் சிஎஸ்கே போட்டிகளில் மக்கள் பார்க்க ஆர்வமாக இருந்தும் கூட மைதானத்தில் கூட்டம் இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது.

முக்கியமாக காப்பரேட் நிறுவனங்கள் தங்களுக்கு தெரிந்தவர்கள், பிரபலங்களுக்கு டிக்கெட்டுகளை விற்பனை செய்கிறது. அல்லது இந்த டிக்கெட்டுகள் பார்க்க ஆள் இல்லாமல் அப்படியே வேஸ்ட்டாகிறது.

முறைகேடு:100 சதவிகித டிக்கெட்டில் 70 சதவிகித டிக்கெட் கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது. மீதம் உள்ள 30 சதவிகிதம் மட்டுமே விற்பனைக்கு வருகிறது. சிஎஸ்கே போட்டிகளுக்கு டிக்கெட் கிடைக்காமல் போவது ஒரு பக்கம் பெரிய அளவில் சர்ச்சையாகி உள்ள நிலையில் இதை வைத்து இன்னொரு வகையான மோசடியும் நடக்க தொடங்கி உள்ளது.

அதன்படி ஒரு பக்கம் பிளாக் டிக்கெட் விற்பனை நடக்கிறது. அதாவது யாரவது ஒருவர் அதிகாலையே போய் வரிசையில் நின்று மொத்தமாக 10 - 15 டிக்கெட்டுகளை வாங்கிக்கொள்வார். அதன்பின் கடைசியில் டிக்கெட் கேட்டு வரும் நபர்களிடம் பிளாக்கில் ஒரு டிக்கெட் 8 - 10 ஆயிரம் ரூபாய்க்கு கூட விற்பனை செய்வது வழக்கம் ஆகி வருகிறது.

இன்னும் சிலர் ஒரு டிக்கெட்டை 15 ஆயிரம் ரூபாய்க்கு கூட விற்பனை செய்கிறார்கள். கீழே உள்ள வரிசையில் இருந்து பார்க்க கூட 10 ஆயிரம் வரை கூட பிளாக்கில் டிக்கெட் விற்கிறார்கள்.

புதிய முறைகேடு:இந்த நிலையில்தான் இதை வைத்து இன்னொரு வகையான மோசடியும் நடக்க தொடங்கி உள்ளது. அதுவும் சரியாக போட்டிகளுக்கு முன் இந்த முறைகேடு நடக்கிறது. அதன்படி இணையத்தில் சிலர் தங்களிடம் டிக்கெட் உள்ளது என்று விளம்பரம் செய்கிறார்கள். இதை தர வேண்டும் என்றால் பர்சனலாக மெசேஜ் செய்ய வேண்டும் என்று கூறுகிறார்கள்.

இதன்பின் டிக்கெட் வாங்குவதற்கு முன் பணம் கொடுக்க வேண்டும் என்று 3-4 ஆயிரம் ரூபாயை ஒரு டிக்கெட் வீதம் வாங்குகிறார்கள். இதற்காக கூகுள் பே விவரங்களையும் தனி மெசேஜில் மோசடிக்காரர்கள் கொடுக்கின்றனர்.

அதன்பின் மேட்ச் நடக்கும் இடத்திற்கு வாருங்கள்.. வெளியே சேப்பாக்கம் எண்ட்ரன்ஸ் அருகே இருக்கிறோம். அங்கே வந்து டிக்கெட் வாங்கிக்கொள்ளுங்கள் என்று சொல்கின்றனர். மேட்ச் நடக்கும் சில நிமிடங்கள் வரை போனில் தொடர்பில் இருக்கும் மோசடிக்காரர்கள் அதன்பின் அப்படியே போனை ஆப் செய்துவிட்டு காணாமல் போய் விடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

அதாவது டிக்கெட் கொடுப்பதாக கூறி முன் பணம் வாங்கிவிட்டு.. மேட்ச் வரை டிக்கெட் தருவதாக கூறிவிட்டு.. கடைசியில் மேட்ச் சமயத்தில் டிக்கெட் கொடுக்காமல் முன் பணத்தோடு எஸ்கேப் ஆகிவிடுகின்றனர். இன்னும் சிலர் மொத்தமாக பணத்தை வாங்கிக்கொண்டு கூட ஏமாற்றி விடுகின்றனர் .

Will CSK take action against black ticket sale for the IPL matches in the Chennai Chepauk stadium?

சிஎஸ்கேவிற்கு தெரியுமா?:தோனியின் கடைசி சீசனாக இது இருக்கலாம் என்பதால் அதை பார்க்க லட்சக்கணக்கில் ரசிகர்கள் வர தொடங்கிவிட்டனர்.

தோனியும்.. எனக்கு பேர்வெல் கொடுக்கிறார்கள்.. நான் என் கெரியரின் கடைசி கால கட்டத்தில் இருக்கிறேன் என்றெல்லாம் க்ளூ கொடுக்க தொடங்கி விட்டார். அதனால் சிஎஸ்கே கேப்டன் தோனி கிட்டத்தட்ட ஓய்வு பெறுகிறார் என்பது கிரிக்கெட் உலகில் வைரல் விவாதமாக மாறிவிட்டது.

அதனால் ரசிகர்கள் அதிக அளவில் மேட்சை பார்க்க வருகிறார்கள். இதை பயன்படுத்திக்கொண்டு அங்கே இருப்பவர்களும் டிக்கெட்டை முன்பே வாங்கி வைத்துக்கொண்டு அதை கூடுதல் விலைக்கு விற்று பிஸ்னஸ் செய்கிறார்கள். சிலர் இதை வைத்து ஏமாற்று வேலைகளிலும் இறங்கி உள்ளனர்.

தோனியை காண்பதற்காக ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக இப்படி கஷ்டப்படுவதும், ஏமாற்றப்படுவதும்.. தோனிக்கும், சிஎஸ்கே அணி நிர்வாகத்திற்கும் தெரியுமா? இதை எல்லாம் தெரிந்தும் சிஎஸ்கே அணி நிர்வாகம் டிக்கெட் விற்பனையை முறைப்படுத்தாமல் இருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+