சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"அவங்க" வந்தா வரட்டும்.. வராட்டி போகட்டும்.. கெத்து காட்டும் எடப்பாடியார்.. செம!

அதிமுக கூட்டணியில் தேமுதிக இணையுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: மக்களுடன் எந்த அளவுக்கு நெருங்கி இருக்கிறோமோ, எந்த அளவுக்கு மக்கள் பிரச்சனைகளை கையில் எடுத்து குரல் கொடுக்கிறோமோ, அந்த அளவுக்கு ஒரு கட்சியின் தாக்கம் மக்கள் மனங்களிலும் குவிய ஆரம்பிக்கும்.. அப்படி ஒரு செயலையே செய்யாத கட்சியாக இன்று தேமுதிக ஆகிவிட்டது.. அதன் விளைவு... யாருமே கூட்டணிக்கு கண்டுகொள்ளாத கட்சியாக உருவெடுத்துள்ளது பரிதாபம்தான்..!
விஜயகாந்த் என்ற நல்ல இதயம் மீது தமிழக மக்களுக்கு எப்போதுமே ஒரு பாசம் உண்டு.. ஆரம்பத்தில் இருந்தே விஜயகாந்த்தை தூக்கி விட்டதும், தாங்கி பிடித்ததும், இந்த தமிழக மக்கள்தான்.. அரசியலுக்கும் அப்பாற்பட்டு இப்போதுவரை அனைத்து கட்சி தலைவராலும் நேசிக்கப்பட்டு கொண்டிருக்கிறார் விஜயகாந்த்.. அதற்கு காரணம் அவரது மனசுதான்.

அவருக்கு உடம்பு சரியில்லாமல் போனதுமே, தேமுதிகவை காணோம்.. கரைந்து கரைந்து மங்கிகிடக்கிறது.. வெறும் 2 சதவீத வாக்குகளை கையில் வைத்துள்ளது.

சைலண்ட்டாக சந்தித்த சைலண்ட்டாக சந்தித்த "அந்த" 2 பேர்.. திட்டமிட்டதா.. எதேச்சையானதா.. புரியலையே.. வலம் வரும் டவுட்!

தேமுதிக

தேமுதிக

சென்ற முறை எப்படி அதிமுக தலைமைக்கு சீட் கேட்டு நெருக்கடி தந்ததோ, இந்த முறையும் அதே பிடிவாதத்தை தேமுதிக காட்டி வருகிறது.. சென்ற முறை பாஜகவின் சப்போர்ட்டால் கூட்டணிக்குள் நுழைந்தது தேமுதிக.. இந்த பாஜக, தனக்கான சீட்டையே இன்னும் பேசி முடிக்க காணோம்.. அத்துடன் தேமுதிகவுக்கு சிபாரிசு செய்யும் அளவுக்கு நல்லிணக்கம் பாஜகவுக்கு அதிமுக தலைமையிடம் இருக்கிறதா தெரியவில்லை.

கூட்டணி

கூட்டணி

அதனால், தேமுதிக தனித்து உள்ளது.. கூட்டணி தொடர்பாக கூப்பிட்டு பேசுவார்கள் என்று காத்திருந்து காத்திருந்து ஒருகட்டத்தில் பொறுமை இழந்துவிட்டார் பிரேமலதா.. "கூட்டணிக்கு எங்களையும் கூப்பிட்டு பேசுங்க".. என்று வாயை விட்டே கேட்டுவிட்டார். அப்படி இருந்தும் அதிமுக தலைமை ஏன் இதுவரை தேமுதிகவை அழைத்து பேசவில்லை? பாமகவுடன் கூட்டணியை உறுதி செய்து கொள்ள அமைச்சர்களை 2, 3 முறை அனுப்பி சமாதானம் பேச முயற்சிக்கும்போது, தேமுதிகவை கண்டுகொள்ளாததன் காரணம் என்ன?

 பேட்டிகள்

பேட்டிகள்

கடந்த முறை அதிமுகவுக்கு தேமுதிக தந்த ஷாக்தான் காரணம்.. எம்பி தேர்தலில் தேமுதிகவுக்கு வடசென்னை, கள்ளக்குறிச்சி, திருச்சி, விருதுநகர் என 4 தொகுதிகள் தரப்பட்டது. நான்கிலும் மண்ணை கவ்விக் கொண்டது.. அதே 2 சதவீத வாக்குகளை மட்டுமே கையில் வைத்துள்ளது.. இதுபோக, பிரேமலதாவின் அதிருப்தி பேட்டிகள், சர்ச்சை கருத்துக்கள், சசிகலாவுக்கு ஆதரவு, எடப்பாடி பழனிசாமி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் இல்லை என்ற பேட்டி, என பலவித அதிருப்திகளை இந்த ஒரே மாசத்தில் சம்பாதித்துவிட்டார் பிரேமலதா.

சிக்கல்

சிக்கல்

இவ்வளவையும் செய்துவிட்டு, 41 சீட் வேண்டும் என்றும் கண்டிஷன் போட்டு வருவதுதான், அதிமுக தலைமைக்கு சிக்கலாகி உள்ளது.. கடந்த முறையே, தேமுதிக பாமகவுக்கு இணையான சீட் கேட்டு பிடிவாதம் பிடிக்கும்போது, "தேமுதிக கூட்டணிக்குள் வந்தால் நல்லது.. வராவிட்டால் ரொம்ப நல்லது" என்று ஜெயக்குமார் சொல்லி இருந்தார்.. இப்போதும் அதேபோன்ற ஒரு மனநிலைமையைதான் எடப்பாடியாரும் வெளிப்படுத்தி உள்ளாராம்.

 தனித்து போட்டி?

தனித்து போட்டி?

"அவங்க வந்தால் வரட்டும், வராவிட்டால் போகட்டும்" தனக்கு நெருக்கமானவர்களிடம் ஸ்ட்ரிக்ட்டாக சொல்லிவிட்டாராம்.. ஆனாலும், பிரேமலதாதான், கூட்டணி பேச்சை உடனே தொடங்குங்கள் என்று தொடர்ந்து நெருக்கம் தந்து வருகிறார்... அதிமுக தலைமைக்கு அழுத்தம் தந்தாலும் பரவாயில்லை. 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடவும் தயார் என்று விஜயகாந்த் பிறந்த நாள் அன்னைக்கு சொன்னதுபோலவே இப்போதும் சொல்லி வருகிறார்.

கலக்கம்

கலக்கம்

என்னதான் இப்போது தேமுதிக கெத்து காட்டினாலும், லேசான நடுக்கம் அக்கட்சிக்கு இல்லாமல் இல்லை.. சென்ற முறையே தங்களுக்கு ராஜ்ய சபா சீட் தருவதாக சொல்லிவிட்டு, கொடுத்த வாக்கை தவறிவிட்டதாக தேமுதிக புலம்பி வரும் நிலையில், இந்த முறை எப்படியாவது சுதீஷை டெல்லிக்கு அனுப்பியே தீருவது என்று கங்கணம் கட்டிக் கொண்டுள்ளதாம்.. ஆனால், தேமுதிக கேட்ட அந்த 41 சீட் எண்ணிக்கையை நினைத்து. இன்னமும் அந்த ஷாக்கில் இருந்து அதிமுக வெளிவராமல் உள்ளது!

English summary
Will DMDK join with ADMK alliance or contest alone in Assembly election 2021
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X