மகளிர் உரிமைத் தொகை கேட்டு விண்ணப்பித்துள்ளீர்களா? மார்ச் 1 முதல் ரூ 1000 வழங்க தமிழக அரசு திட்டம்?
சென்னை: மகளிர் உரிமைத் தொகை கேட்டு விண்ணப்பித்த அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ 1000 வரும் மார்ச் மாதம் முதல் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கடந்த 2023 ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
திமுக தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பது போல் மாதம் ரூ 1000 உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. இதற்காக 2 கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்கு விண்ணப்பங்கள் வீடு தேடி வழங்கப்பட்டன.

இவர்களில் 1.66 கோடி பேர் விண்ணப்பித்திருந்தனர். அரசு விதித்த நிபந்தனைகளின்படி தேர்வு செய்யப்பட்ட 1.15 கோடி பேருக்கு வங்கிக் கணக்குகளில் மாதந்தோறும் 15 ஆம் தேதி வாக்கில் ரூ 1000 உரிமைத் தொகை செலுத்தப்பட்டு வருகிறது.
அரசின் இந்த நிபந்தனைகளால் ரூ 1000 கிடைக்காதவர்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர். தங்கள் தொகுதிக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்குவதற்காக வரும் சட்டசபை உறுப்பினர்கள், அமைச்சர்களிடம் பொதுமக்கள் வாக்குவாதம் செய்தனர்.
"ஏன் திமுகவுக்கு நாங்கள் எல்லாம் ஓட்டு போடவில்லையா, ரூ 1000 வாங்குவோர் மட்டும்தான் போட்டார்களா" என்றெல்லாம் பொதுமக்கள் கேள்வி எழுப்பி வந்தனர். அப்போது மக்கள் பிரதிநிதிகள், "அரசுக்கு கடுமையான நிதி நெருக்கடி உள்ளது. அதனால்தான் அனைவருக்கும் உரிமைத் தொகை வழங்க முடியவில்லை.
விரைவில் நல்ல முடிவை அரசு அறிவிக்கும் என கூறி வந்தனர். இந்த நிலையில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கெனவே திமுக அரசு மீது எதிர்க்கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்கள். இந்த சூழலில் அனைத்து மகளிருக்கும் ரூ 1000 வழங்காவிட்டால் அது தேர்தலில் எதிரொலித்துவிடும் என திமுக கருதுவதாக தெரிகிறது.
இதனால் விண்ணப்பித்த அனைவருக்கும் முதல்வர் ஸ்டாலினின் பிறந்தநாளான மார்ச் 1 ஆம் தேதி முதல் ரூ 1000 உரிமைத் தொகை மாதந்தோறும் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்புகள் பட்ஜெட்டில் வெளியாகும் என சொல்லப்படுகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
தற்போதைய சூழலில் வருமான வரி கட்டும் பெண்கள், சொந்த வீடு, நிலம், கார், பைக் வைத்திருக்கும் பெண்கள், ஆண்டுக்கு 2400 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்தும் மகளிர், அரசு ஊழியர்கள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டோருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
திமுக தேர்தல் அறிக்கையில் அனைத்து மகளிருக்கும் ரூ 1000 என்றுதானே வாக்குறுதி இருந்தது. அதன்படி அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ 1000 உரிமைத் தொகை வழங்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகிறது. தமிழகத்தை முன்னோடியாக வைத்து பல்வேறு மாநிலங்களிலும் பெண்களுக்கு அதிரடியாக பலதிட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
எனவே தமிழகத்தில் அனைத்து பெண்களுக்கும் ரூ 1000 உரிமைத் தொகை வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கான அறிவிப்புகள் ஏதேனும் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. மேலும் பொங்கல் பரிசுத் தொகை ரூ 1000 வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. அரசு ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையன்று அரிசி, கரும்பு, சர்க்கரை, இலவச வேட்டி சேலை உள்ளிட்டவைகளுடன் ரூ 1000 ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த முறை ரூ 1000 நீங்கலாக மற்றவை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
-
தொகுதி மறுவரையறை.. திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை -
850ஆக உயர்த்தப்படும் மக்களவை இடங்களின் எண்ணிக்கை! மத்திய அரசு சொன்ன மேட்டர்! எதிர்க்கட்சிகள் ஷாக் -
8,000 ரூபாய் கூப்பன்.. என்ன வாங்கலாம்? இப்போது இந்த 'டிஸ்கஷன்'தான் ஓடுகிறது! ஸ்டாலின் சொன்ன மெசேஜ்! -
தொகுதி மறுவரையறை! சண்டை செய்யும் திமுக.. வேடிக்கை பார்க்கும் அதிமுக! என்னதான் பிரச்சனை? -
"திமுக தோற்கணும்னு ராகுல் காந்தியே ஆசைப்படுறாரு".. கொளுத்திப் போடும் அண்ணாமலை! -
இயக்குநர் மோகன் ஜி வீட்டுக்கு! ரூ 8000 கூப்பனுடன் வந்த 4 பெண்கள்! ரேஷன் கார்டு கேட்டு அடம்! -
அமைச்சரவையில் இட ஒதுக்கீடு வேண்டும்.. தேர்தல் நேரத்தில் விசிக எம்.பி எழுப்பிய ‘மேஜர்’ கோரிக்கை! -
பழைய நியூஸ் பேப்பரை காட்டி பிரச்சாரம் செய்யும் எடப்பாடி பழனிசாமி.. உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலடி -
ஏமாற்றும் ராகுல்.. ஸ்டாலினுடன் கைகோர்க்கும் கெஜ்ரிவால்.. திமுகவுக்கு ஆதரவாக 2 நாள் பிரசாரம் -
வங்கிகளில் தங்க நகையை அடகு வைத்தவர் தவிர வேறு நபர் மீட்க முடியுமா? விதிமுறைகள் சொல்வது இதுதான்! -
விஜயின் தவெக சரியில்லை... தமிழ்நாடு பிஷப் கவுன்சில் திமுக கூட்டணிக்கு ஆதரவு.. அதிமுக மீது ‘அட்டாக்' -
மயிலாடுதுறை டூ ராமநாதபுரம்.. மழை கொட்டப்போகுது! லிஸ்ட் போட்ட வானிலை மையம்!












Click it and Unblock the Notifications