உயில் எழுத போறீங்களா? ஆன்லைனில் ஈஸியாக எழுதலாம்.. 21 வயது நிபந்தனையை மறக்காதீங்க.. இதுதான் சீக்ரெட்
சென்னை: உயில் எழுதுவது என்பது தற்போதைய டிஜிட்டல் உலகில் எளிதாக்கப்பட்டிருந்தாலும், அதில் உள்ள நன்மைகள் மற்றும் சவால்களை ஆராய்ந்து செயல்படுவது பாதுகாப்பானது.. வாரிசு இல்லாத சொத்துகள் யாருக்கு சேரும் மற்றும் விவாகரத்தான பெண்களின் பிள்ளைகளுக்கான சொத்துரிமை போன்ற நுணுக்கமான விஷயங்களைச் சட்டப்படி அணுகுவது அவசியமாகிறது.. அதேபோல ஆன்லைனில் உயில் எழுதுவது சரியானதா? என்ற சந்தேகமும் பலருக்கும் இருக்கலாம்.. அவைகளை பற்றி சுருக்கமாக இங்கே பார்க்கலாம்...!!
மைனர் குழந்தைகள் பெயரில் உள்ள சொத்துகள் அல்லது அவர்களுக்கு பங்கு உள்ள சொத்துகளை வாங்குவது என்பது மிகுந்த சட்ட நுணுக்கங்கள் நிறைந்த ஒரு விஷயமாகும்..

மைனர் குழந்தைகள்
குறிப்பாக, குழந்தை சிறுவயதில் இருக்கும்போது ஒரு காப்பாளர் அல்லது கார்டியன் மூலம் அந்த சொத்து விற்கப்பட்டிருந்தாலும், அந்த மைனர் குழந்தை 18 வயதை எட்டிய பிறகு சம்பந்தப்பட்ட விற்பனைக்கு எதிராக வழக்கு தொடர சட்டத்தில் இடமுண்டு..
இதனால், நீதிமன்றத்தின் முறையான அனுமதி பெற்றுத்தான் அந்தச் சொத்து விற்கப்பட்டதா என்பதை உறுதி செய்வது அவசியமாகிறது.. இத்தகைய சட்டப்பூர்வமான அனுமதிகள் இல்லாத சொத்துகளை வாங்குவது பிற்காலத்தில் தேவையற்ற சட்டச் சிக்கல்களையும் பண இழப்பையும் ஏற்படுத்தும் என்று வருவாய்த் துறை அதிகாரிகள் எச்சரிக்கிறார்கள்..
சுயமாக சம்பாதித்த சொத்து
உயில் எழுதுவதைப் பொறுத்தவரை, 18 வயது பூர்த்தியடைந்த எவரும் தனது சொத்துகளை உயிலாக எழுதி வைக்க முடியும் என்றாலும், சில குறிப்பிட்ட காரணங்களுக்காக 21 வயது நிரம்பிய பிறகே உயில் எழுதும் தகுதியைப் பெறுகிறார்கள்..
சுயமாக சொத்துகளை மட்டுமே உயிலாக எழுத முடியும் என்பதால், ஒரு தந்தை தான் கஷ்டப்பட்டு சம்பாதித்த சொத்தை யாருக்கு வேண்டுமானாலும் உயில் எழுதி வைக்கலாம்.. அப்படி ஒரு தந்தை உயில் எழுதி வைத்துவிட்டால், அதில் திருமணமான மகளோ அல்லது மற்ற வாரிசுகளோ பங்கு கோர முடியாது.. ஆனால், உயில் ஏதும் எழுதப்படாத நிலையில், தந்தையின் சுயமாக சம்பாதித்த சொத்தில் நேரடி வாரிசுகள் அனைவருக்கும் சமமான உரிமை வந்து சேர்கிறது..
பூர்வீக சொத்து
விவாகரத்தான பெண்களின் வாரிசுகளைப் பொறுத்தமட்டில், அந்தப் பெண் மறுமணம் செய்து கொள்ளாத பட்சத்தில், அவரது மகனுக்குத் தந்தையின் பூர்வீகச் சொத்தில் நிச்சயம் பங்கு உண்டு.. முன்னாள் கணவர் மறுமணம் செய்து அவருக்குக் குழந்தைகள் பிறந்திருந்தாலும், முதல் மனைவியின் மகனுக்கான பூர்வீகச் சொத்துரிமை எக்காரணம் கொண்டும் பறிபோகாது..
அதேபோல, வாரிசுகள் இல்லாதவர்களின் சொத்துகள் அவர்களின் இரண்டாம் நிலை வாரிசுகளான உடன்பிறந்த சகோதர, சகோதரிகளுக்குச் சென்றடையும்.. இத்தகைய சூழல்களில் சொத்துகள் முறையாகப் பகிரப்படுவதை உறுதி செய்ய உயில் ஒரு முக்கிய ஆவணமாகத் திகழ்கிறது..
இரண்டு சாட்சிகள் கையெழுத்து
தற்காலத்தில் உயில் தயாரிக்கும் முறை டிஜிட்டல் மயமாகி வருகிறது.. ஆன்லைன் மூலம் உயில் தயாரிப்பது நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்துவதோடு, பிழைகள் ஏற்படும் வாய்ப்பையும் குறைக்கிறது..
பாரம்பரிய முறையில் வழக்கறிஞர்களை அணுகி அதிக செலவு செய்வதைத் தவிர்க்க விரும்புவோருக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாகும்.. இருப்பினும், இஸ்லாமிய சமூகத்தினர் ஷரியத் சட்டங்களின்படி செயல்பட வேண்டியிருப்பதால், அவர்கள் சிறப்பு ஆலோசனைகளைப் பெறுவது அவசியமாகிறது.. ஆன்லைனில் உயில் தயாரித்தாலும் இரண்டு சாட்சிகளின் கையெழுத்து என்பது கட்டாயமான விதியாகும்..
ஆன்லைனில் உயில் பாதுகாப்பானதா
ஆன்லைன் முறையில் சில நன்மைகள் இருந்தாலும், சிக்கலான குடும்பப் பின்னணி கொண்டவர்களோ அல்லது பிரம்மாண்டமான சொத்துகளை வைத்திருப்பவர்களோ ஆன்லைன் முறையைத் தேர்ந்தெடுப்பது சில நேரங்களில் சவாலாக அமையலாம்..
மேலும், ஆன்லைன் தளங்களைப் பயன்படுத்தும்போது அவை பாதுகாப்பானதா என்பதையும், தரவு பாதுகாப்பு வசதிகள் உள்ளதா என்பதையும் உறுதி செய்து கொள்வது மிக முக்கியம்.. சரியான விவரங்களை உள்ளீடு செய்து, அவ்வப்போது மாற்றங்கள் செய்வதற்கு வசதியாக, லாகின் விவரங்களை பாதுகாப்பாக வைத்திருப்பது எதிர்கால குழப்பங்களைத் தவிர்க்க உதவும் என்று அறிவுறுத்துகிறார்கள் நிபுணர்கள்...!!
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications