Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ஆடு" பகை, குட்டி உறவா?.. அந்தர்பல்டி அதிமுக.. அசராத அண்ணாமலை.. "பச்சைக்கிளி" கூண்டைவிட்டு பறக்குதா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜக மீதான கோபம் எல்லாம் அதிமுகவுக்கு 2 நாள்தானா? திடீரென கூட்டணி விஷயத்தில் அதிமுக தன்னுடைய முடிவை மாற்றிக் கொள்ள காரணம் என்ன?

"அண்ணாமலையின் பேச்சை இனியும் பொறுப்பதாக இல்லை. கூட்டணியை பொறுத்தவரை பாஜக எங்களுடன் இப்போது இல்லை. தேர்தல் வரும்போதுதான் அதை முடிவு செய்ய முடியும், எங்களை விமர்சிக்கும் பாஜகவை நாங்கள் ஏன் சுமக்க வேண்டும். அண்ணாமலை தனித்துப்போட்டியில் நோட்டாவுக்கு கீழ் தான் வாங்குவார்? என்று சொல்லிவிட்டார் மாஜி அமைச்சர் ஜெயக்குமார்.

Will Edapadi Palaniswami form alliance with BJP and What are the AIADMK Strategies

அதிமுக கருத்து: இதனால், கூட்டணி பூசல் வெடித்து கிளம்பி உள்ளது.. கட்சியின் முடிவையே தான் எப்போதும் சொல்வேன் என்று ஜெயக்குமார் கூறியிருப்பதால், எடப்பாடி பழனிசாமியின் கருத்தாகவும், ஒட்டுமொத்த அதிமுகவின் கருத்தாகவும் இது பார்க்கப்பட்டு வருகிறது. அதற்கேற்றார்போல், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் இதுவரை அதிமுகவின் கூட்டணி முடிவு குறித்து வாய் திறக்கவில்லை.

இந்நிலையில்தான், நேற்றைய தினம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.. மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை ஆதரித்து, அந்த அறிக்கையை வெளியிட்டிருந்தார்.. அதில், மத்திய அரசு என்ற வார்த்தையையோ, பாஜகவின் பெயரையோ, பிரதமர் மோடியின் பெயரையோ எங்குமே குறிப்பிடவில்லை.

ஓபிஎஸ்: மகளிருக்கான இட ஒதுக்கீடு மசோதாவை மட்டும் வரவேற்ற எடப்பாடி பழனிசாமி, தங்களுக்கும் பாஜகவுக்கும் சம்பந்தம் இல்லை என்பதை, மறைமுகமாக இதன்மூலம் உணர்த்தியதாகவே கருதப்பட்டது.. ஆனால் ஓபிஎஸ்ஸோ, "ஜெயலலிதாவின் கனவை நிறைவேற்ற உள்ள பிரதமருக்கு நன்றி" என்று தெரிவித்து, வழக்கமான தன்னுடைய சிவப்பு கம்பளத்தை பாஜகவுக்கு விரித்திருந்தது பலரது கவனத்தையும் பெற்றது.

ஆனால், இன்று திடீரென அதிமுகவின் மூத்த தலைவர் செல்லூர் ராஜு அதிரடி பேட்டி ஒன்றை தற்போது தந்துள்ளார்.. 'பாஜகவுக்கும் எங்களுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை.. மோடி மீண்டும் பாரத பிரதமராக வருவார். தமிழகத்திலும் மீண்டும் எடப்பாடியார் முதலமைச்சராக வரவேண்டும்.. பாஜகவுடன் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை" என்று கூறியிருக்கிறார்.

அப்படியானால், கூட்டணி குறித்து ஜெயக்குமார் சொன்ன கருத்து என்ன ஆனது? கூந்தலுமில்லை, கூட்டணியுமில்லை, எங்க கிட்ட வராதீங்க என்று அதிமுக தரப்பில் போஸ்டர் ஒட்டியது என்ன ஆனது? "கூட்டணியும் கிடையாது... ஒரு புண்ணாக்கும் கிடையாது என்று கவுண்டம்பாளையம் எம்எல்ஏ பிஆர்ஜி அருண்குமார் சொன்னது என்ன ஆனது? என்றெல்லாம் தெரியவில்லை.

திடீர் பல்டி: கூட்டணி நிலைப்பாட்டை தலைமை ஏற்கெனவே கூறிவிட்ட நிலையில் வேறு யாரும் அதைப்பற்றி பேசக்கூடாது, கூட்டணி மற்றும் பாஜக பற்றி பேசினால் குழப்பத்தை ஏற்படுத்தும் என்று எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்ட நிலையிலும், செல்லூர் ராஜூ இப்படி பேசியிருப்பதை எப்படி எடுத்து கொள்வது என்றும் புரியவில்லை.

வெறும் 2 நாளிலேயே அதிமுக "அந்தர் பல்டி" அடித்து, மோடியை பிரதமராக்க அதிமுக துடிப்பது ஏன் என்பதெல்லாம் குழப்பத்தையே தந்து வருகிறது.
எடப்பாடி பழனிசாமி: தற்போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசும்போது, "மத்தியில் பிரதமர் சரி, ஆனால், மாநிலத்தில் எடப்பாடியை முதல்வராக்குவோம் என நான் சொல்ல முடியாது. இதை தேசிய தலைமைதான் முடிவு எடுக்க வேண்டும். தமிழகத்தில் பாஜக ஆட்சியை பிடிக்கும் என சொல்லி பதவிக்கு வந்த நான், எடப்பாடி முதல்வராவார் என எப்படி சொல்ல முடியும்? என கேள்வி எழுப்பியிருக்கிறார்.

ஆனால், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி, நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசும்போது, "அதிமுக கூட்டணியில் யார் அங்கம் வகித்தாலும் அவர்கள் செல்லும் நோட்டு. அதுவும் டாலர் நோட்டு.. கூட்டணியில் இருந்து வெளியேறுபவர்கள் கிழிந்த இத்துப்போன செல்லாத நோட்டு. எடப்பாடி பழனிசாமியை முதல்வராகவும், தலைவர்களாகவும் ஏற்றுக் கொள்பவர்களுடன் தான் கூட்டணி என்றார்.

மீண்டும் மோடி: ஆக, எடப்பாடியை தலைவராக ஏற்றால்கூட்டணி என்று அதிமுகவும், மோடியை தலைவராக ஏற்றால் கூட்டணி என்று பாஜகவும் சொல்கின்றன.. அதுமட்டுமல்ல, அண்ணாமலைக்கு எடப்பாடியின் ஆதரவோ, எடப்பாடிக்கு அண்ணாமலையின் ஆதரவோ இதுவரை வெளிப்படையாக கிடைக்கவில்லை.. ஆனால், இரு தரப்பிலுமே மேலிட பாஜகவை ஏற்கிறார்கள்.. அப்படியானால், இரு மாநில தலைமை மீது மட்டுமே இரு தரப்பிலுமே, அதிருப்தி உள்ளதோ என்ற சந்தேகம் வலுக்கிறது.

ஆனால், அதிமுகவின் தயவு பாஜகவுக்கும் தேவையாக இருக்கிறது, பாஜகவின் தயவு அதிமுகவுக்கும் தேவையாக இருக்கிறது என்பதே நிதர்சனமான உண்மை என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

ஜெயக்குமார் நேற்று முன்தினம் கூட்டணி முறிவை அறிவித்ததுமே, கூட்டணி விஷயமாக, பாஜக தலைமையில் இருந்து தன்னிடம் பேசுவார்கள் என்று எடப்பாடி காத்து கொண்டிருக்கிறாராம். அப்படியே பேசினாலும், அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக இருந்தால் கூட்டணி கிடையாது என்பதை தெளிவாக சொல்லவும் எடப்பாடி பழனிசாமி காத்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

அடுத்து என்ன: அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசும்போது, எனக்கு தன்மானம்தான், மிகவும் முக்கியம். நான் அரசியலில் தெளிவாகவே இருக்கிறேன். அதிமுக - பாஜக இடையே பிரச்சனை எதுவுமில்லை.. எனக்கு யாருடனும் எந்த பிரச்சனையும் இல்லை..

யாரையும் நான் தவறாக பேசவுமில்லை. அறிஞர் அண்ணாவை நான் ஒருபோதும் எதிர்த்ததோ, விமர்சித்ததோ இல்லை.. எனக்கும் அதிமுக தலைவர்களுக்கும் தனிப்ப்பட்ட எந்த பிரச்சனையும் இல்லை. நாளை அதிமுக தலைவர்களை பார்க்கும்போது மரியாதையோடு பழகுவேன் என்று கூறியிருக்கிறார்.

மறைந்த முதல்வர் அண்ணாதுரையை விமர்சித்துவிட்டார் என்பதற்காகத்தான், பாஜகவுடன் கூட்டணி இல்லை என்ற முடிவை அறிவித்திருந்தார் ஜெயக்குமார். இப்போது, இந்து நாளிதழில் வெளிவந்ததாக கூறி, ஆதாரங்களுடன் அண்ணாமலை விளக்கம் தந்துள்ளது, அதிமுகவை லேசாக கூல் செய்திருப்பதாக தெரிகிறது.

என்ன முடிவு: எனினும், இரு தரப்பிலுமே இணக்கமான போக்கு ஏற்படவேண்டுமானால், பலம்பொருந்திய திமுகவை சமாளிக்க வேண்டுமானால், தமிழக பாஜக தலைமையானது, அதிமுகவுடனான கூட்டணியை அதிகாரப்பூர்வமாக வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.. அப்படி அறிவித்தால்தான், 2 கட்சி தொண்டர்களும் இணைந்து களத்தில் பணியாற்ற முடியும்.. இப்படி நித்தம் ஒரு குழப்பம், நித்தம் ஒரு முடிவு என்ற அடுத்தடுத்த நகர்வில் அரசியல் கட்சிகள் நகர்ந்து வருவதால், அடுத்து என்ன நடக்க போகிறது என்று தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+