பைல்ஸை எடுக்க போறாங்க! களமிறங்கும் புலனாய்வு புலிகள்? எடப்பாடிக்கு இப்படி ஒரு சிக்கலா? இதை பாருங்க
சென்னை: புலனாய்வு அமைப்புகள் மூலம் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மாறலாம். இங்கே கவர்னர் ரவி.. எடப்பாடிக்கு எதிரான விசாரணைக்கு இன்னும் அனுமதி கொடுக்கவில்லை. அவர் அனுமதி கொடுத்தால் அப்படியே திமுக தரப்பு விசாரணை செய்யும், என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்
அதிமுக பாஜக மோதல் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது, இந்த மோதலில் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இது தொடர்பாக, மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்

அதில், பாஜக வேண்டாம் என்று எடப்பாடி பழனிசாமி நிலைப்பாடு எடுத்துள்ளார். பாஜக வேண்டும் என்ற நிலைப்பாட்டை ஒரு சிலர் கட்சியில் எடுத்துள்ளனர். பாஜக உடன் இருந்தால் வழக்கு இருக்காது. நமக்கு பிரச்சனை இருக்காது. 2024ல் ஆட்சியில் பாஜக வந்தால்.. மத்திய ஆட்சியில் நாம் இருக்க முடியும். அதோடு கொங்கு மண்டலத்தில் பாஜக வாக்கும் நமக்கு கிடைக்கும் என்று நினைக்கிறார்கள். பாஜக தனியாக ஓபிஎஸ், டிடிவி தினகரன் உடன் கூட்டணி வைத்தால் எடப்பாடிக்கு சிக்கல் ஆகும். அதோடு ஓ பன்னீர்செல்வம் வழக்கில் மேல்முறையீடு செய்துள்ளார்.
ஓ பன்னீர்செல்வம் வழக்கு: இன்னொரு பக்கம் தேர்தல் ஆணையத்திடம் ஓ பன்னீர்செல்வம் மேல்முறையீடு செய்தால் அதுவும் பிரச்சனை ஆகும்.
பாஜக இன்னும் முடிவு எடுக்கவில்லை: அதிமுக - பாஜக மோதலில் பாஜக இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. பாஜக இதில் கூட்டணி குறித்து எதுவும் சொல்லவில்லை. அதேபோல் பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்ய வேண்டாம் என்று எடப்பாடி பழனிசாமியும் கூறியுள்ளார். அப்படி இருக்க பாஜக - அதிமுக மோதலில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அவர்கள் இணையும் வாய்ப்புகள் கூட உள்ளன. அதிமுக - பாஜக பிரிந்தால் அரசியல் ரீதியாக யாருக்கும் வெற்றிவாய்ப்பு இல்லை. இதனால் அதிமுக இந்த முடிவில் நிற்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இன்னொரு பக்கம் புலனாய்வு அமைப்புகள் மூலம் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மாறலாம். இங்கே கவர்னர் ரவி.. எடப்பாடிக்கு எதிரான விசாரணைக்கு இன்னும் அனுமதி கொடுக்கவில்லை. அவர் அனுமதி கொடுத்தால் அப்படியே திமுக தரப்பு விசாரணை செய்யும். இது எல்லாம் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திரும்பும். இதை மறக்க கூடாது. தீர்மானமாக அதிமுக - பாஜக பிரியும் பட்சத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக புலனாய்வு அமைப்புகள் கண்டிப்பாக வரும்.

புலனாய்வு: ஆனால் உடனடியாக இதில் விசாரணைகள் நடக்காது. 2024 லோக்சபா தேர்தலுக்கு முன் விசாரணை செய்ய மாட்டார்கள். மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் இதை விமர்சனம் செய்வார். ஏற்கனவே இங்கே லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்கும் பைல்களை எடுப்பார்கள். அதை அமலாக்கத்துறை கூட விசாரிக்கலாம். எதிர்காலத்தில் விசாரணையை திருப்புவார்கள். உடனே செய்தால் இதை பழிவாங்கும் நடவடிக்கை என்று கூறலாம். ஆனால் உடனே அதை செய்ய மாட்டார்கள். மாறாக கொஞ்சம் கொஞ்சமாக செய்வார்கள்.
தேர்தலுக்கு 2 மாதம் முன் கூட செய்வார்கள். அதேபோல் அதிமுக யாருக்கு சொந்தம் என்பதில் கூட எடப்பாடிக்கு எதிராக நிலைமை மாறலாம். அப்படி மாறும் வாய்ப்புகள் உள்ளன. ஆனால் உடனடியாக இதில் பாஜக எதையும் செய்யாது. கொஞ்சம் கொஞ்சமாக இதில் பாஜக நடவடிக்கை எடுக்கும். பொறுமையாக முக்கிய நடவடிக்கைகளை எடுக்கும். இதை பழிவாங்கும் நடவடிக்கை என்று கூறலாம். ஆனால் உடனே அதை செய்ய மாட்டார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications