தமிழகத்தில் கரண்ட் பில் குறையப்போகுதா? சூரியசக்தியில் முதலிடம் பிடித்து சாதனை! மத்திய அரசு அதிரடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய மின்சார ஆணையத்தின் புதிய அறிவிப்பின்படி, தென்னிந்தியாவிலேயே சூரியசக்தி மின் உற்பத்தியில் தமிழகம் முதலிடம் பிடித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் 218.60 கோடி யூனிட்கள் உற்பத்தி செய்யப்பட்டு, அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் ஆந்திராவை தமிழகம் பின்னுக்குத் தள்ளியுள்ளது. ஆண்டுக்கு 300 நாட்களுக்கு மேல் தடையின்றி கிடைக்கும் சூரிய ஒளி மற்றும் பெருகி வரும் தனியார் முதலீடுகளே தமிழகத்தின் இந்த அசுர வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.

தென்னிந்திய மாநிலங்களில் சூரியசக்தி மின் உற்பத்தியில் தமிழகம் இமாலய சாதனையை படைத்து, ஒட்டுமொத்தப் பிராந்தியத்திலும் முதலிடத்தை பிடித்துள்ளது. மத்திய மின்சார ஆணையம் வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்கள், தமிழகத்தின் இந்த அபரிமிதமான வளர்ச்சியைத் துல்லியமாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளன.

solar power Tamil Nadu electricity bill news India renewable energy update solar energy ranking India central government data solar

மத்திய மின்சார ஆணையம்

மத்திய மின்சார ஆணையத்தின் தரவுகளின்படி, கடந்த மார்ச் மாதத்தில் தென்னிந்திய மாநிலங்களில் மொத்தம் 613 கோடி யூனிட் சூரியசக்தி மின்சாரம் உற்பத்தியாகி உள்ளதாம்.

இதில் தமிழகம் மட்டும் தனிச்சிறப்பாக 218.60 கோடி யூனிட்களை உற்பத்தி செய்து முதலிடத்தை அலங்கரிக்கிறது. கடந்த 2025-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் தமிழகத்தின் உற்பத்தி 160 கோடி யூனிட்களாக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது. ஓராண்டு காலத்திற்குள் சுமார் 58 கோடி யூனிட்கள் கூடுதலாக உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகம் மின் உற்பத்தியில் தன்னிறைவை நோக்கி வேகமாக நடைபோடுகிறது.

தமிழ்நாடு முதல் இடம் - சாதனை

தமிழகத்தை தொடர்ந்து கர்நாடகா 181 கோடி யூனிட்களுடன் இரண்டாவது இடத்தைப பிடித்துள்ளது. ஆந்திரா 113 கோடி யூனிட்களையும், தெலுங்கானா 71 கோடி யூனிட்களையும் உற்பத்தி செய்துள்ளன. கேரளா 29 கோடி யூனிட்களுடன் அடுத்த இடத்தில் இருக்க, புதுச்சேரி யூனியன் பிரதேசம் 10 லட்சம் யூனிட்களைப் பதிவு செய்துள்ளது. இந்த ஒப்பீட்டு லிஸ்ட்டில், தமிழகத்தின் பங்கு மிகப்பெரிய அளவில் இருப்பது நன்றாகவே தெரியவருகிறது.

தமிழகத்தில் நிலவும் சாதகமான வானிலைதான் இந்த வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. ஆண்டுக்கு 300 நாட்களுக்கு மேல் சூரிய ஒளி தடையின்றி கிடைப்பதால், சூரியசக்தி மின் நிலையங்களுக்கு தமிழகம் ஒரு சொர்க்கபுரியாக மாறியுள்ளது.

சூரியசக்தி மின் நிலையங்கள்

இதன் விளைவாக, பல்வேறு தனியார் நிறுவனங்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நிலப்பரப்புகளில் அதிக திறன் கொண்ட சூரியசக்தி மின் நிலையங்களை அமைக்க மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றன.

அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் மட்டுமல்லாமல், சாமானிய மக்களும் இப்போது சூரியசக்தியின் முக்கியத்துவத்தை உணரத் தொடங்கி விட்டார்கள்.. கரண்ட் செலவை குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், வீடுகள் மற்றும் அலுவலகக் கட்டிடங்களின் மேற்கூரைகளில் சூரியசக்தி தகடுகளை பொருத்துவது தற்போது ஒரு மக்கள் இயக்கமாகவே மாறி வருகிறது என்று சொல்லலாம்.


வியக்க வைத்த தமிழகத்தின் சாதனை

கடந்த மார்ச் மாத நிலவரப்படி, தமிழகத்தின் மொத்த சூரியசக்தி மின் உற்பத்தித் திறன் 13,579 மெகாவாட் என்ற நிலையை எட்டியுள்ளது. மழைக்காலங்களைத் தவிர்த்து மிச்ச நாட்களில் தினமும் சராசரியாக 4 முதல் 5 கோடி யூனிட் வரை மின்சாரம் தங்குதடையின்றி உற்பத்தியாகிறது.

கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், தமிழகத்தின் வளர்ச்சி வியக்க வைக்கிறது. 2024-25 நிதியாண்டில் 1,573 கோடி யூனிட்களாக இருந்த சூரியசக்தி மின் உற்பத்தி, 2025 ஏப்ரல் முதல் இந்த ஆண்டு மார்ச் வரையிலான காலகட்டத்தில் 1,969 கோடி யூனிட்களாக உயர்ந்துள்ளது. இந்த புள்ளிவிவரங்கள் தமிழகம் பசுமை ஆற்றல் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் இந்தியாவிற்கே வழிகாட்டியாகத் திகழ்வதை உறுதிப்படுத்துகின்றன...!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+