நடுவில் புக தயாராகும் சசிகலா.. 2வது ஆடியோ கிளப்பிய பரபரப்பு.. ஒன்றிணைவார்களா ஈபிஎஸ்ஸும் ஓபிஎஸ்ஸும்?
சென்னை: "அவர்கள் கட்சியில் சண்டையிட்டு கொள்வது வேதனை அளிக்கிறது" என சசிகலா பேசியதாக ஆடியோ வெளியான நிலையில் இனி எடப்பாடி பழனிச்சாமியும் ஓ பன்னீர் செல்வமும் எந்தவித சண்டையும் இல்லாமல் ஒற்றுமையாக செயல்பட்டு கட்சியை தங்கள் வசமே வைத்திருப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Recommended Video
ஒரு வேளை இவர்கள் இருவரும் சண்டையிட்டுக் கொண்டே இருந்தால் நடுவில் சசிகலா நுழைய வாய்ப்பிருப்பதை புரிந்து கொண்டு இவர்கள் செயல்படுவார்களா, இல்லை இருவரில் யாரேனும் ஒருவர் சசிகலா பக்கம் சாய வாய்ப்புள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சசிகலா பேசியதாக நேற்றும் இன்றும் இரு ஆடியோக்கள் வெளியாகியுள்ளன. அதில் முதல் ஆடியோவில் நான் நிச்சயம் வருவேன். தைரியமாக இருங்கள். கட்சியை சரி செய்து கொள்ளலாம். அனைவரும் கவனமாக இருங்கள் என சசிகலா பேசியதாக வெளியானது.

சசிகலா
அந்த ஆடியோவில் பேசியது சசிகலாதானா என தெரியவில்லை. இந்த நிலையில் இன்றைய தினமும் ஒரு ஆடியோ வெளியாகியுள்ளது. இதில் கஷ்டப்பட்டு வளர்த்த கட்சி வீணாவதை பார்த்துக் கொண்டு இருக்க மாட்டேன். சீக்கிரமே நல்ல முடிவோடு வருகிறேன்.

வேதனை
கட்சிக்குள் அவர்கள் சண்டை போடுவது வேதனையாக இருக்கிறது என தெரிவித்துள்ளார். இந்த இரு ஆடியோக்களில் இரண்டாவதாக வெளியான ஆடியோதான் முக்கியமானது. இதில் அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி- ஓ பன்னீர் செல்வம் இடையே நடந்து வரும் பனிப்போர் குறித்து அவர் குறிப்பிடுவதாகவே தெரிகிறது.

சசிகலா
இந்த ஆடியோ சசிகலா பேசினாரா இல்லையா என்பது வேறு விஷயம். ஆனால் இனி ஓபிஎஸ்ஸும் ஈபிஎஸ்ஸும் மற்ற நிர்வாகிகளும் ஒருவருக்கு ஒருவர் சண்டையிட்டுக் கொள்ளாமல் இருக்க வேண்டும் என்பதையே இந்த ஆடியோ உணர்த்துகிறது. ஒரு வேளை இவர்களுக்குள் சண்டை நடந்தால் கட்சி மீண்டும் உடையும், நடுவில் சசிகலா நுழைந்துவிடுவார்.

சசிகலா கை
பின்னர் கட்சியை அவர் கபளீகரம் செய்து விட ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. எனவே இனி அதிமுகவில் சண்டையில்லாமல் ஒற்றுமையாக செயல்பட்டால் கட்சி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கையில் இருக்கும். இல்லாவிட்டால் சசிகலா கைக்கு சென்றுவிடும் என்பது நிதர்சனமான உண்மை.

கடும் விமர்சனம்
எனவே இவர்கள் இனியாவது சண்டையிடாமல் இருப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. இல்லாவிட்டால் இருவரில் ஒருவர் சசிகலாவுடன் இணைந்து அதிமுகவை கைப்பற்ற போராடுவார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இருவருமே இதுவரை சசிகலாவை நேரடியாக கடுமையாக விமர்சனம் செய்ததில்லை என்பது நினைவுக்கூரத்தக்கது.
-
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
விஜய், உதயநிதி, அண்ணாமலை.. இளம் முகம் இல்லாமல் தடுமாறும் அதிமுக.. எடப்பாடிக்கு அடுத்து யார்? -
இசக்கி சுப்பையா டூ கடம்பூர் ராஜு.. இதுவரை எத்தனை அதிமுக மாஜி அமைச்சர்கள் தவெகவில் ஐக்கியம்! லிஸ்ட் -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
"ஆதவ் அர்ஜுனா வாயை அடக்கிப் பேசணும்.. அதிமுகவை பற்றி பேச அருகதை இல்லை".. கேபி முனுசாமி தாக்கு! -
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
சைலண்ட்டா முடிந்த சாவி மேட்டர்! விழுப்புரம் சண்முகம் ஆதரவாளர்களை மொத்தமா தூக்கிய எடப்பாடி! ஏன் -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
பனையூரில் பின்வாசல் வழியாக நுழைய முயன்ற அதிமுகவினர்! ஒரே தள்ளுமுள்ளு! விஜய் ஆபீஸில் என்ன நடக்கிறது -
இது ட்ரெய்லர் தான்.. அதிமுகவுக்கு தவெக எழுதப்போகும் கிளைமாக்ஸ்.. அருண்ராஜ் அதிரடி -
விஜய் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றல.. எல்லாம் போச்சு.. அப்செட்டில் இருக்கும் அதிமுக புள்ளிகள்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு










Click it and Unblock the Notifications