ஏன் இப்படி.. "அந்த" கட்சியும் விலகுகிறதா.. திமுகவில் சேர போகிறதா.. என்ன நடக்கிறது அதிமுகவில்..?
ஜிகே வாசன் அதிமுக கூட்டணயில் இடம்பெறுவாரா
சென்னை: அதிமுக கூட்டணியில் தமாகா, நீடிக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.. காரணம் இன்று அவசர மீட்டிங்கில் வாசன் ஈடுபட போகிறார என்றார்கள்.. பிறகு இது வதந்தி என்கிறார்கள்.. இதுதான் அரசியலில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
எப்படி விஜயகாந்த்தை எல்லா கட்சி தலைவர்களுக்கும் பிடிக்கிறதோ, அதுபோலதான் வாசனையும் கட்சிக்கு அப்பாற்பட்டு எல்லாருக்கும் பிடிக்கும்.. அனைவரிடமும் பண்புடன் நடப்பவர்.. இணக்கமாக போய்விடுபவர்..
விஜயகாந்த்தை போலவே பிரதமர் மோடியின் மனசை வெகு சீக்கிரத்தில் கவர்ந்தவர்... நாகரீக வார்த்தைகளால் பேசக்கூடியவர்.. எல்லாருக்கும் மரியாதை தருபவர்.. காரணம் மூப்பனாரின் வளர்ப்பு அப்படி...!

வாசன்
இத்தனை சாந்த குணம் இருந்தும், தன்னுடைய சொந்த கட்சியை வாசனால் சிறப்பாக நடத்த முடியவில்லை.. அதேசயம், அக்கட்சியை மேலும் கீழே சாய்ந்துவிடாமல் தூக்கி நிறுத்த வேண்டிய கட்டாயத்திலும் இப்போது உள்ளார். அதனால்தான், அதிமுக தலைமையிடம் அதிக சீட் கேட்டு வருகிறார்.. ஆனால், தேமுதிக போல, தமாகா மீது அதிமுகவுக்கு எந்தவித அதிருப்தி இல்லை என்றாலும், திமுகவை சமாளிக்க கூட்டணிகளுக்கு குறைந்த சீட்களை ஒதுக்கும் முடிவில் அதிமுகவும் இருக்கிறது.. எனினும், வாசன் கேட்ட அளவுக்கு தொகுதிகளை ஒதுக்குமா என்பதுதான் சந்தேகம்..

லிஸ்ட்
7 தொகுதிகளாவது தமாகாவுக்கு ஒதுக்கப்படும் என்ற நிலை இருந்தது.. இதற்காகத்தான் அப்போதே பேச்சுவார்த்தையும் நடந்தது.. ஆனால், அதிமுக 171 தொகுதிகள் கொண்ட வேட்பாளர் லிஸ்ட்டை நேற்று அறிவித்தது.. ஏற்கெனவே முதற்கட்டமாக 6 வேட்பாளர்கள் அடங்கிய லிஸ்ட்டும் வெளியானது... இந்த லிஸ்ட்டுகளில், வாசன் கேட்ட தொகுதிகளில் பெரும்பாலானவற்றில் அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுவிட்டனர். இதுதான் தமாகாவுக்கு பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறதாம்.

ஆலோசனை
இன்று இதுசம்பந்தமாக தன் கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசிக்கிறார் வாசன் என்று செய்திகள் வெளியானது.. இது மிகுந்த பரபரப்பையும் ஏற்படுத்தியது.. ஒருவேளை அதிமுக கூட்டணியில் இருந்து தமாகா வெளியேறக்கூடுமோ என்ற ஐயத்தையும் இது ஏற்படுத்தியது.. ஏற்கனவே சரத்குமார், கருணாஸ், விஜயகாந்த் என ஒவ்வொருவராக வெளியே வந்துள்ள சூழலில் ஜிகே வாசனும் வந்துவிடுவாரா என்ற சந்தேகம் வலுத்தது. ஒருவேளை இது நிஜமானால், இது நிச்சயம் அதிமுகவுக்கும் பலவீனத்தை தந்துவிடும் என்பதையும் மறுப்பதற்கில்லை. ஆனால், வாசன் இந்த தகவலை மறுத்துள்ளார்.. 12 தொகுதிகள் கேட்ட நிலையில், எங்களுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கியுள்ளதாகவும் கூறியுள்ளார்..

பரிசீலனை
ஆனால், தொகுதிகளில் சிக்கல் வருமா என்பது அடுத்த சந்தேகமாக உள்ளது.. எனினும் ஒன்று நிச்சயம், வாசன் நினைத்திருந்தால், பாஜகவிடம் தனக்கு உள்ள செல்வாக்கை பயன்படுத்தி இந்நேரம் மத்திய அமைச்சரவையிலேயே இடம்பெற்றிருக்க முடியும்... ஆனால், அவர் அப்படி செய்யவில்லை.. செய்யவும் மாட்டார்.. அதேபோல, அனைத்து கட்சிகளிடம் அவருக்கு நல்ல பெயர் இருப்பதால், திமுக உட்பட வேறு எங்காவதும் செல்லக்கூடும்.. அந்த நிலைமைக்கு அதிமுக அவரை விட்டுவிடாமல், விருப்பமான தொகுதிகளை தமாகாவுக்கு ஒதுக்கி வாசனையும் அரவணைத்து கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும்.. பார்ப்போம்..!
-
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு












Click it and Unblock the Notifications