அண்ணாமலை "சீப்".. வீடியோ + ஆடியோ.. போலீசுக்கு போக முடிவெடுத்த காயத்ரி.. வெளிவரப் போகும் "பூதம்"?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக போலீசில் புகார் அளிக்க உள்ளதாக காயத்ரி ரகுராம் தெரிவித்து உள்ளார். அண்ணாமலையை மலிவான பொய்யர் என்று காயத்ரி ரகுராம் இதில் விமர்சனம் செய்துள்ளார்.

பாஜக கட்சியின் உட்கட்சி மோதல் தற்போது உச்சம் தொட்டுள்ளது. கட்சியில் 8 வருடங்களாக இருந்த மூத்த உறுப்பினர் காயத்ரி ரகுராம் பாஜகவில் இருந்தே விலகுவதாக தெரிவித்துள்ளார்.

எனக்கு எதிராக வார் ரூம் செயல்படுகிறது, கட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, சொந்த கட்சி ஆட்களையே கடுமையாக விமர்சனம் செய்கிறார்கள், அதனால் இந்த கட்சியில் இருக்க மாட்டேன் என்று கூறி கட்சியில் இருந்து வெளியேறுவதாக காயத்ரி ரகுராம் தெரிவித்து உள்ளார்.

காயத்ரி ரகுராம்

காயத்ரி ரகுராம்

பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக காயத்ரி கடுமையான புகார்களை வைத்து வந்தார். அவர் வைத்த புகார்கள் சில பின்வருமாறு, கட்சியில் அண்ணாமலை தலைவராக வந்ததில் இருந்தே தன்னை ஓரம்கட்டி வருகிறார். சினிமா துறையில் இருக்கும் தன்னை கலைப்பிரிவு தலைவர் பதவியில் இருந்து நீக்கினார். அதன்பின் நீண்ட போராட்டத்திற்கு பின்தான் வெளிமாநில, அயலக தமிழர் நலப்பிரிவு தலைவராக நியமித்தார். அப்போதும் கூட காசியில் நடந்த தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு அழைக்கவில்லை, வேண்டும் என்றே அண்ணாமலை என்னை ஓரம்கட்டிவிட்டார் என்று கூறினார்.

புகார் மேல் புகார்

புகார் மேல் புகார்

அதன்பின் அண்ணாமலைக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை வைத்தார். முக்கியமாக சீனியர்களுக்கும் - ஜூனியர்களுக்கும் இடையில் மோதல் நிலவி வருகிறது. பாஜகவில் சீனியர்களை வார் ரூம் வைத்து அண்ணாமலை ஆட்கள் விமர்சனம் செய்கிறார்கள் என்று காயத்ரி ரகுராம் தெரிவித்து இருந்தார். சீனியர்களை பாஜகவில் மதிக்கவில்லை. தமிழக பாஜகவில் இருக்கும் சிலர் சீனியர்களுக்கு எதிராக டிரெண்டிங் செய்கின்றனர். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. எங்களுக்கு எதிராக ஒரு வார் ரூமே இயங்கிக்கொண்டு இருக்கிறது. எங்களுக்கு எதிராக லைக் போட்டு செய்கின்றனர் என்று காயத்ரி சமீபத்தில் கூட பேட்டி ஒன்றில் குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் கட்சி நடவடிக்கைகளுக்கு எதிராக செயல்படுகிறார் என்று கூறி இவரை பாஜக தலைவர் அண்ணாமலை சஸ்பெண்ட் செய்தார்.

சஸ்பெண்ட்

சஸ்பெண்ட்

இதையடுத்து அண்ணாமலை ஆதரவாளர்கள் பலர் ட்விட்டரில் காயத்ரி ரகுராமிற்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வந்தனர். தலைவர் சொல்வதை கேட்க வேண்டும், சமூக வலைத்தளங்களில் இப்படி எல்லாம் பேச கூடாது என்று அறிவுரை வழங்கினர். இந்த நிலையில்தான் திருச்சி சூர்யா பாஜக நிர்வாகி டெய்சி சரணிடம் பேசும் ஆடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து திருச்சி சிவா பேசுவதாக வெளியான ஆடியோ குறித்தும் காயத்ரி குற்றச்சாட்டுகளை அடுக்கினார். இதுவும் கூட அண்ணாமலை ஆதரவாளர்களுக்கும் - காயத்ரிக்கும் இடையில் மோதலை ஏற்படுத்தியது. இந்த மோதல் விஸ்வரூபம் எடுத்த நிலையில் கட்சிக்கு எதிராக அவர் செயல்படுவதாக கூறி கட்சியில் இருந்து 6 மாதத்திற்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

வெளியேற்றம்

வெளியேற்றம்

இந்த நிலையில்தான் பாஜகவில் இருந்தே வெளியேறுவதாக காயத்ரி ரகுராம் தெரிவித்து உள்ளார். அதோடு அண்ணாமலை தொடர்பாக போலீசில் புகார் அளிக்க உள்ளதாகவும் காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்துள்ள போஸ்டில், உங்களை யாரும் மதிக்கவில்லை என்றால் அங்கே நீங்கள் இருக்க கூடாது. அண்ணாமலை ரொம்ப சீப்பா பொய்யர். அதனால் கட்சியில் இருந்து விலகுகிறேன். உங்களை நீங்கள் நம்புங்கள். வீடியோ, ஆடியோ அனைத்தையும் வெளியிடும்படி நான் போலீசில் புகார் அளிக்க உள்ளேன். அண்ணாமலைக்கு எதிராக விசாரணை நடத்த சொல்ல இருக்கிறேன். அவர் மோசமான நபர். எனக்கு எதிராக டிரெண்ட் செய்யும் வார் ரூம் பற்றியும் புகார் கொடுப்பேன், என்று காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.

ட்விட்

ட்விட்

சமீபத்தில் இது தொடர்பாக ட்விட் செய்த காயத்ரி ரகுராம், அண்ணாமலையின் தலைமைக்கு கீழ் எங்களுக்கு எதிராக கடுமையான, அருவெறுப்பான, மோசமான பர்சனல் அட்டாக் மேற்கொள்ளப்படுகிறது. வார் ரூம் மூலம் இந்த தாக்குதல்கள் நடக்கிறது. தமிழ்நாடு போலீஸ் இதை பற்றி விசாரிக்க வேண்டும். இவர்கள் பெண்களுக்கு எதிராக கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சனம் வைக்கிறார்கள், என்று காயத்ரி ரகுராம் கூறியுள்ளார். அதோடு இந்த ட்விட்டில் போலீசாரை டேக் செய்து இருந்தார். இந்த நிலையில்தான் போலீசிடம் புகார் அளிப்பேன் என்றும் காயத்ரி கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+